பூஜை ரூமில் 1 பொருள் வைத்தால் போதும்.. வீடெல்லாம் மகிழ்ச்சி பொங்கும், கூரையை பிச்சிட்டு பணம் வருமாம்
சென்னை: வீட்டில் காசு, பணம் தங்குவதேயில்லையா? எவ்வளவு சம்பாதித்தாலும், பணம் கரைந்துவிடுகிறதா? தங்குதடையின்றி வீட்டிற்குள் பணப்புழக்கம் வரவேண்டுமானால், இதற்கான பரிகாரங்களை முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.
வீட்டில் பணம் வைத்திருப்பதற்கென்றே ஒருமுறை உள்ளது.. எங்கே வேண்டுமானாலும் பணத்தை வைக்கக்கூடாது.. நீங்கள் பீரோ அல்லது பணப்பெட்டியில் பணம் வைப்பவராக இருந்தாலும் இதற்கான குறிப்பிட்ட திசையில் வைக்க வேண்டும்.

அந்தவகையில், பணப்பெட்டி அல்லது பீரோவை வடக்கு திசையில் வைக்க வேண்டும்.. ஒருவேளை வடக்கு திசையில் வைக்க முடியாவிட்டால், கிழக்கு திசையில் பணப்பெட்டி அல்லது பீரோவை வைக்கலாம். இருட்டான இடத்திலோ அல்லது காற்று புகாத இடத்திலோ பணத்தை வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது வீட்டினில் வறுமையையும், நிதி பற்றாக்குறையையும் மேலும் அதிகமாக்கிவிடும். அதேபோல, கழிப்பறை, பாத்ரூம்களில் பணத்தை வைக்கக்கூடாது.
உரிய திசைகள்: அதேபோல, தெற்கு திசையில் பணத்தை வைப்பதும் தவறு. தென்கிழக்கு, தென்மேற்கு, தெற்கு திசைகளில் பணத்தை வைக்கக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் பணத்தை வைப்பதற்கு வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு திசைகள் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த திசைகள் நேர்மறை ஆற்றல் நிறைந்தவை அதோடு வீட்டில் செழிப்பையும் கொண்டு வருகின்றன.
அதேபோல, பணம் வைத்திருக்கும் பெட்டியில் எப்போதும் 1 ரூபாய் நாணயம் போட்டு வைக்க வேண்டும். பணப்பெட்டியில் அல்லது பீரோவில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, மாதுளை குச்சி போன்ற லக்ஷ்மி அம்சம் பொருந்திய பொருட்களை வைக்கவேண்டும். இதனால், வாசனை பரவும் என்பதுடன், செல்வமும் நிலையாக தங்கும்.
பணப்பெட்டி: பிசினஸ் செய்பவராக இருந்தால், நீங்கள் உட்கார்ந்திருக்கும் இருக்கை, வட மேற்கு திசையை நோக்கியவாறும், பணம் வைக்கும் பெட்டி உங்களுக்கு இடது புறத்தில் இருக்குமாறும் பார்த்து கொள்ள வேண்டும். ஒருவேளை, கிழக்கு திசையை நோக்கியவாறு இருக்கை இருந்தால் வலதுபுறத்தில் பணத்தை வைக்கும் இடம் அமைத்துக்கொள்ளலாம்.
அதேபோல, உங்கள் பூஜையறையில் 1 வெள்ளி நாணயம் எப்போதுமே வைத்திருப்பது, குடும்பத்தில் செழிப்பையும், பொருளாதார பலத்தையும் ஏற்படுத்தும். இதனால், லட்சுமி தேவியின் அருளும் வீட்டிற்குள் எப்போதும் இருக்கும். காரணம், வெள்ளிநாணயம் நேர்மறையான ஆற்றலை வெளியிடுகிறது... அத்துடன் பணத்தை ஈர்க்கும் தன்மைகொண்டது.. வீட்டின் பூஜை அறையில் வெள்ளி நாணயத்தை சரியான இடத்தில் வைத்திருந்தால், தெய்வங்களின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும்.
வெள்ளி நாணயம்: ஆனால், இதற்கும் திசைகள் உள்ளன.. அதன்படி, வெள்ளி நாணயத்தை பூஜை அறையின் வடகிழக்கு மூலையில்தான் வைக்க வேண்டும்.. இதுவே செல்வம் மற்றும் செழிப்புக்கான திசையாகும்.. புதிய வெள்ளி நாணயம் வாங்க விரும்புவோர், வெள்ளிக்கிழமைகளில் வாங்கி வீட்டிற்கு கொண்டு வரலாம். அப்படி பூஜையறையில் நாணயத்தை வைக்கும்போது, மேல்நோக்கியே வைக்க வேண்டும். கோயிலிலும் வெள்ளி நாணயத்தை வைக்கலாம். ஆனால், அதற்குமுன்பு நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications