தங்கம் வாங்கணுமா? வீட்டில் செழிக்கணுமா? அப்ப கிச்சனில் "இதை" உடனே தூக்கி போடுங்க.. வாஸ்து டிப்ஸ்
சென்னை: கிச்சனில் சில பொருட்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதைவிட, சில பொருட்கள் கண்டிப்பாக இருக்கவே கூடாது என்கிறார்கள்.. இதுகுறித்து வாஸ்து சாஸ்திரத்திலும் விரிவாகவே சொல்லப்பட்டுள்ளது.
பொதுவாக வீடு கட்டும்போது, ஒவ்வொரு அறையும் அதற்கேற்ற திசைகளில் இருக்கும்படி கட்டுவது இயல்பான விஷயமாகும்.. அதிலும், கிச்சனில் கேஸ் ஸ்டவ் வைக்கும் மேடை, எப்போதுமே தென்கிழக்கு மூலையில், தெற்கு கிழக்கு சுவரை ஒட்டித்தான் அமைக்க வேண்டுமாம்.

காரணம் அப்போதுதான், சூரிய ஒளிக்கதிர்கள் கிச்சனுக்குள் நேராக வரும்.. எனவே, சூரிய ஒளி கிச்சனில் வரும்படியாக, ஜன்னலையும் அமைக்க வேண்டும்.. அந்தவகையில், சமையல் செய்யும்போது, கிழக்கு நோக்கியே நின்று சமைக்க வேண்டும்...
வடகிழக்கு மூலை: அதேபோல, பாத்திரம் கழுவும் குழாய், வடகிழக்கில் மூலையில் இருக்க வேண்டும். இந்த இடம் மாறியிருந்தால், பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடு வரலாம். மேலும், குழாயில் தண்ணீர் கசிவு இருக்கக்கூடாதாம். அதேபோல, உப்பு எப்போதுமே நம்முடைய வலது கை பக்கத்தில்தான் வைக்க வேண்டும்.
சில பொருட்கள் கிச்சனுக்குள் இருந்தால், அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.. குறிப்பாக கிச்சனில் மருந்து பொருட்களை வைக்கக்கூடாதாம். பிசைந்த மாவையும் நீண்ட நேரம் வைக்கக்கூடாதாம்.
பாத்திரங்கள்: பாத்திரங்களை கழுவாமல் அப்படியே வைத்திருக்கக் கூடாதாம்.. இதனால் நிதிப்பற்றாக்குறை ஏற்படலாம். உடைந்த பாத்திரங்களையும் கிச்சனில் வைத்திருக்கக்கூடாது. கத்திகள் போன்ற கூர்மையான பொருட்களை தொங்கவிடாதீர்கள்.. இது தீய ஆற்றலை தந்துவிடுமாம்..
மாவு பிசைந்து மீதமாகிவிட்டால், அதனை ஃபிரிட்ஜில்கூட வைக்கக்கூடாதாம். இது ராகு, சனியின் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று அறிவுறுத்துகிறார்கள். எக்காரணம் கொண்டும் அழுகிய துர்நாற்றம் வீசும் பொருட்களை கிச்சனில் வைத்திருக்க கூடாதாம். அதேபோல, சிலர் கிச்சனில் கண்ணாடியை வைத்திருப்பார்கள். இதுவும் எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்துவதுடன், மனஅமைதியும் குடும்பத்தில் கொண்டுவந்துவிடும்.
பண வரவு: கிச்சன் எந்த அளவுக்கு அகலமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு பண வரவு இருக்குமாம். எப்போதுமே கிச்சனை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எப்போதுமே கிச்சனில் நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.. மஞ்சள் நிறம் கிச்சனுக்கு சிறந்தது என்கிறார்கள்..
அதேபோல, கிச்சனில் எப்போதுமே புத்தம்புதிதாக மலர்ந்த பூக்களை வைக்கலாம்.. அதேபோல, செடிகள், பழங்கள், காய்கறிகள் என புதிதாக வைக்கலாம்..
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications