தொட்டது துலங்கும்.. காரியத்தை ஜெயம் பெற பரிகாரம்.. அமாவாசையில் இதை போதும்.. ஜென்ம பாவம் நீங்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தை அமாவாசையில் புதிதாக ஒரு காரியம் தொடங்கினாலும் அது 100 சதவீதம் வெற்றி என்பார்கள்.. அதேசமயம், சில பரிகாரங்களை இந்த நாளில் செய்வதன் மூலமாகவும், உங்கள் ஜென்ம பாவங்கள் நீங்கும்.. கடன் பிரச்சனை நீங்கவும் சில பரிகாரம் உண்டு.. அதனை சுருக்கமாக பார்ப்போம்.

பொதுவாக, தை அமாவாசை தினங்களில், நாம் மேற்கொள்ளும் காரியம் லாபமும், வெற்றியும் கிட்டும் என்பார்கள்.. ஆனால், புதிதாக எந்த வியாபாரமும் துவங்க கூடாது.. அதாவது, நாம் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலில் போட்டிகளைச் சந்திக்கின்ற வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்துவது, அல்லது ஏற்கனவே தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் ஒரு செயல்பாட்டில் புதிய நடைமுறைகளை அமல்படுத்துவது முதலான செயல்களில் ஈடுபடலாம்.
ஆனால், புதிய வீட்டில் பால் காய்ச்சுதல், கிரகபிரவேசம், வரனுக்காக பெண் பார்ப்பது, பந்தல்கால் நடுவது, நிச்சயதார்த்தம், புதிய வியாபாரம் துவங்குவது, குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது இதையெல்லாம் செய்யக்கூடாது.

spirituality pariharam amavasai

ஜென்ம பாவங்கள்: அதேபோல, ஜென்ம பாவங்கள் நீங்க வேண்டுமானால், அமாவாசை தினத்தில் பசு மாட்டிற்கு அகத்திக்கீரையும், எள்ளு புண்ணாக்கு வாங்கி தர வேண்டும்.. காகத்திற்கு படையல் சாதம் அனைத்தையுமே கலந்து ஒன்றாக வைக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், காகத்திற்கு எள்ளை தூள் செய்து, அதில் ஏதாவது இனிப்பை சேர்த்து உருண்டையாக்கி எள்ளுருண்டையாக தானம் தரவேண்டும்.. இதனால், முன்னோர்கள் நம்முடன் தேவைகளை புரிந்து கொண்டு உதவிச் செய்வார்கள் என்பது நம்பிக்கையாகும். இதுபோன்ற அமாவாசை தினங்களில் தானம் செய்து வந்தாலே நம்முடைய ஜென்ம பாவங்களும் நீங்குமாம்.

மஞ்சள் தூள்: அதேபோல, பிறருக்கு கடனை தீர்க்க வேண்டுமானாலும், இந்த தை அமாவாசை சிறந்த நாளாகும். இதற்கு ஒரு எளிய பரிகாரமும் சொல்லப்பட்டுள்ளது. இதற்கு ஒரு புதிய மண்பானையில், மஞ்சள் தூள், குங்குமம், 1 ரூபாய் நாணயம் இந்த மூன்றையும் போட்டு , மகாலட்சுமி படத்திற்கு முன்பாக வைத்து பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு, தண்ணீரையும், இந்த பானையையும் அருகிலுள்ள ஆலமரத்தின் அடியில் எடுத்து செல்ல வேண்டும்- அங்கு பள்ளம் தோண்டி, கையோடு கொண்டு சென்ற நீரை, பானையில் ஊற்றி, பள்ளத்திற்குள் வைத்து மண்ணை போட்டு பானையை மூடிவிட வேண்டும். இப்போது மீண்டும், பானை புதைக்கப்பட்ட இடத்தில் கைகளை வைத்து, கடன் பிரச்சனை நீங்க வேண்டும் என்று பிரார்த்திக் கொள்ள வேண்டும். இதனால், விரைந்து உங்கள் இன்னல்கள் தீர வழிவகுக்கப்படும்.

கல் உப்பு : அதேபோல கல் உப்பு பரிகாரமும் உண்டு. 3 அகல் விளக்குகளில் கல் உப்பை நிரப்பி, வீட்டின் வாசலிலும், வரவேற்பறை, குளியலறையிலும் வெளியே வைக்க வேண்டும். 3 நாட்கள் கழித்து இந்த கல் உப்பை, நீரில் கரைத்து விட்டு, அகல் விளக்கை தனியாக பத்திரப்படுத்தி வைத்து கொள்ளலாம். இதனால், வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றல், திருஷ்டி நீங்கி, நன்மைகள் வீட்டுக்குள் பெருக தொடங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+