சமையலறையில் இதை வைக்காதீங்க.. கிச்சனில் அந்த பொருளை மட்டும் வெளியே வீசிடுங்க! தடையின்றி பணம் வருமாம்
சென்னை: பொதுவாகவே நம்முடைய வீடுகளில் ஒவ்வொரு அறைகளையும் வாஸ்துப்படி நிவர்த்தி செய்து கொள்வது நல்லது என்பார்கள். அந்தவகையில், சமையலறை எப்படி அமைய வேண்டும்? எந்த பொருட்கள் சமையலறையில் இருக்கவே கூடாது என்பதை பற்றியும் வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளது. அவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
ஒருவீட்டின் சமையலறை அமைப்பு சரியாக இருந்தாலே, அந்த வீட்டின் பணவரமும், முன்னேற்றமும் தங்குதடையின்றி நடைபெறும்.. எனவே, அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கு பகுதியில்தான் கிச்சன் வைத்திருப்பார்கள்.. தெற்கு பார்த்த வாசல் அமைந்திருக்கும் வீடுகளில் வட மேற்கில் வைத்திருப்பார்கள்.

அடுப்பு வைக்கும் மேடையானது, தெற்கு சுவரையும், கிழக்கு சுவரையும் இணைக்கும் வகையில் வைக்க வேண்டும்.. அதேபோல சூரிய வெளிச்சம் கிச்சனுக்குள் நேராக விழும் வகையில் கிழக்கு பகுதியில் ஜன்னல் இருப்பது நல்லது.
கன்னி மூலை: கிச்சன் மட்டும் எப்போதுமே ஈசான்யம் என்று சொல்லும் வடகிழக்கில் இருக்கவே கூடாது. அப்படி இருந்தால், அந்த வீட்டின் அமைதி கெடுவதுடன், குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையும் பாதிக்கப்படலாம். அதேபோல, தென்மேற்கு என்று சொல்லும் கன்னி மூலையில் கிச்சன் இருந்தாலும், உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.
சப்பாத்தி, பூரி செய்வதற்காக கோதுமை மாவு பிசையும்போது, அந்த மாவு மீந்துவிடாமல் பிசைய வேண்டுமாம்.. காரணம், பிசையப்பட்ட மாவில் மில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள் உருவாகி, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவித்துவிடும்.. எனவே, வாஸ்து சாஸ்திரத்தின்படி, நீண்ட நேரம் வைக்கப்படும் மாவு, கெடுதியை தந்துவிடுமாம்.
உடைந்த பாத்திரங்கள்: அதேபோல, உடைந்த பொருட்கள், அல்லது சேதமடைந்த, நசுங்கிய பாத்திரங்களை கிச்சனில் வைக்கக்கூடாது.. இதனால் குடும்பத்தில் பணக்கஷ்டம் அதிகமாகிவிடும்.. குடும்பத்தில் நிறைய தகராறும் வரலாம். எனவே, பயன்படுத்தப்படாத பாத்திரங்களை கிச்சனிலிருந்து அப்பறப்படுத்திவிட வேண்டும்.
கிச்சனில் கண்ணாடியையும் வைக்கக்கூடாது.. அடுப்பிலிருந்து நெருப்பின் பிரதிபலிப்பு கண்ணாடியில் படக்கூடாது என்று வாஸ்துவில் குறிப்பிடப்பட்டுள்ளதாம். மருந்துகளையும் கிச்சனில் வைக்கக்கூடாது.
அதேபோல, குழாயில் தண்ணீர் சிந்தக்கூடாது. குழாய் தண்ணீர் கசிவு என்பது துரதிருஷ்டத்தின் அறிகுறி என்பார்கள். பாத்ரூம் என்றில்லை, வீட்டில் எந்த குழாய்களிலும் தண்ணீர் கசியாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஒருவேளை குழாய்கள் ரிப்பேராகியிருந்தால், அதை உடனடியாக சரி செய்துவிட வேண்டும். தண்ணீரில் சிக்கனம் இருந்தாலே, அதிர்ஷ்டம் வீட்டிற்குள் தாராளமாக கிடைக்குமாம்.
அஞ்சறைப்பெட்டி: எனவே, எப்போதுமே சமையலறையில் குப்பைகள் இல்லாமல், அடைப்புகள் இல்லாமல் வைத்திருக்க வேண்டும்... அஞ்சறைப்பெட்டியில் மகாலட்சுமியும், ஊறுகாய் ஜாடியில் குபேரனும், உப்பில் அன்னை லட்சுமியும், அரிசியில் சிவனும் பெருமாளும், துவரம்பருப்பில் செவ்வாய் பகவான் வசிக்கிறார்கள் என்பது ஐதீகம். அதனால், சமையலுக்கு இவைகளை உபயோகிக்கும்போது சுத்தமாகவே எடுத்து பயன்படுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications