தப்பித் தவறிகூட இதை வீட்டில் வைக்காதீங்க.. வெள்ளிக்கிழமை ஸ்பெஷாலிட்டி.. மறந்தும் செய்ய கூடாத மேட்டர்
சென்னை: பெரும்பாலும் குடும்பத்தில் பெண்கள் அறியாமல் செய்யும் சில தவறுகள்தான் கடன் பிரச்சினைகளுக்கு பிரதான காரணமாகி விடுகின்றன. சிறுசிறு விஷயங்களில் காட்டும் அலட்சியம்கூட, வறுமையை, இன்னலை, கடன் தொல்லையை, போராட்ட வாழ்க்கையை தந்துவிடலாம். எனவேதான், வாஸ்து வாஸ்திரத்தில் பல்வேறு விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.. இதில் ஒருசிலவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.
குடும்பத்தில் நிதி நிலைமை சீராக வேண்டுமானால், பெண்கள் சில விஷயத்தை கடைப்பிடிக்க வேண்டும்.. வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் செய்வதால், அன்றைய தினம் பூஜை பொருட்களை கழுவ கூடாது. முன்தினமே பூஜை பொருட்களை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அடுப்பு மேடையையும் சுத்தம் செய்ய வேண்டும்.

என்னென்ன செய்யக்கூடாது
சேதமடைந்த, அறுந்துபோன, உபயோகமில்லாத செருப்புகள், கிழிந்த பாய், ஓடாத கடிகாரம், போன்றவற்றை அப்புறப்படுத்திவிட வேண்டும். விஷ பூச்சிகள், கரையான்களை வீட்டில் சேராமல் பார்க்க வேண்டும். ஈர துணிகளை வீட்டில் வைக்க கூடாது.. குழாய்களில் தண்ணீர் சொட்டக்கூடாது. ஒட்டடை அடிப்பது, வீட்டை சுத்தம் செய்வது என எதுவானாலும் வெள்ளிக்கிழமைகளில் செய்யக்கூடாது. அழுக்கு துணிகளை துவைப்பதையும் வெள்ளிக்கிழமைகளில் தவிர்க்கலாம்..
அமாவாசை - சமையல்
காலையில் வாசலில் கோலம் போடும்போது, தெற்கு திசையில் நின்று கோலம் போடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல, அமாவாசை அல்லது திதி தரும நாட்களில் கோலம் போடக்கூடாது. அன்றைய தினம் முட்டைக்கோஸ், நூக்கல், முள்ளங்கி, பீன்ஸ், கத்தரிக்காய், காலிஃபளவர், ப்ரெக்கோலி, பட்டாணி போன்ற காய்கறிகளை தவிர்க்கலாம்.. அதேசமயம், விசேஷ நாளில் கசப்பான உணவுகளை சமைக்க கூடாது..
காலில் 3 மெட்டி அணிய கூடாது.. மாதவிலக்கு நாட்களில் தலையில் பூ வைப்பதை தவிர்க்க வேண்டும்.. கோவில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது. வியாழன் மற்றும் ஏகாதசியில் தலைமுடி நகங்களை வெட்டக்கூடாது.
ரோஜா, மருத்துவ தாவரங்கள் தவிர, கற்றாழை, முள் செடிகளை வீட்டில் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.. குளியலறை மற்றும் கழிவறையை சமையலறையுடன் சேர்த்து வைப்பதையும் தவிர்க்கலாம்..தெற்கு திசையில் தலை வைத்து தூங்ககூடாது..
என்னென்ன செய்ய வேண்டும்
பெண்கள், சூரிய உதயத்தில் கண் விழித்துவிட வேண்டும். பிரம்ம முகூர்த்தத்தில் கண்விழித்தால் நேர்மறை ஆற்றல் குடும்பத்துக்குள் வரும்.. சுத்தமில்லாத வீட்டிற்குள் மகாலட்சுமி வரமாட்டாள்.. எனவே, தினமும் பெருக்கி சுத்தப்படுத்த வேண்டும்.. கிச்சனில் எப்போதுமே உப்பு, பால், சர்க்கரை, அரிசி போன்றவற்றை நிரப்பி வைத்திருக்க வேண்டும்.
வீட்டில் கிழக்கு பக்கம் சுவர் கடிகாரத்தை மாட்டி வைப்பதால், வீட்டிலுள்ளவர்களுக்கு நோய் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்கும்.. பொதுவாக, வடக்கு திசையில் கடிகாரத்தை வைப்பது சிறந்தது.. குபேரன் ஆளும் இந்த திசையில் கடிகாரம் மாட்டினால் பொருளாதார நிலை உயரும். வீட்டில் வளர்க்கப்படும் வாஸ்து செடிகள் வாடிவிடாமல் இருக்க வேண்டும்.
வீட்டின் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகளைத் தீர்க்கும். அதேபோல, ஒற்றைக்கண் தேங்காயை வீட்டின் முன்புறம் மஞ்சள் துணியில் கட்டித் தொங்கவிட்டு பூஜை செய்தாலும், லட்சுமியின் அருள் குடும்பத்திற்கு கிடைக்கும்
-
50 ஆண்டுகளில் நடக்காத ஒன்று.. தென் மாநிலங்களுக்கு தண்டனையா! 1971 vs 2026.. அனல் பறக்கும் அரசியல்! -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... தண்ணீர் ஊற்றி சரி செய்யும் டெலிவரி ஊழியர்! கொடுமையை பாருங்க! -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
₹10,000 இழப்பு அபாயம்? இந்த திசையில் மணி பவுலை வைத்தால் செல்வம் போய்விடும்! பணப்பை வாஸ்து வார்னிங் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications