ஆடி 18 தாய்மாமன்கள் தினம்.. தியாகத்தின் திரு உருவம்.. தாய்மாமனை தினமும் கொண்டாடுவோம்
மதுரை: ஆடி பதினெட்டாம் பெருக்கு நாள் தாய்மாமன் தினமாக கொண்டாடப்படுகிறது. தொப்புள் கொடி உறவுக்கு அடுத்தபடியாக தொட்டில் முதல் மணமேடை வரை தொடரும் ஒரு உறவு உண்டு என்றால் அது தாய்மாமன் உறவுதான். தமிழகத்தில் தாய்மாமன் உறவை போற்றுவதைப் போல வேறு எங்கும் கொண்டாடி மகிழ்வதில்லை. மொட்டை போட்டு காது குத்தும் போது மடியில் வைக்கும் உரிமை தாய்மாமனுக்கு மட்டுமே உண்டு.
தாய்மாமன் தினம்: அன்னையர் தினம், தந்தையர் தினம், சகோதரர்கள் தினம் கொண்டாடி மகிழ்கின்றனர். ஏன் சில நேரங்களில் கொழுந்தியாள் தினம் கூட இன்றைய கால கட்டத்தில் கொண்டாடுகின்றனர். தாய்க்கு சமமான உறவான தாய் மாமனை போற்ற ஒரு நாள் உண்டு என்றால் அது தாய்மாமன்தான் அந்த தாய் மாமனுக்கு மரியாதை செய்வதற்காகவே தாய்மாமன் தினம் தமிழக தென் மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது. உடன் பிறந்த தங்கைக்கோ... அக்காவிற்கோ பிள்ளை பிறந்தால் முதல் ஆளாய் சீர் கொண்டு வருவது தாய் மாமன்தான். பிள்ளை பிறந்த உடன் குழந்தையின் நாக்கில் சீனி தண்ணீர் தொட்டு வைப்பதில் தொடங்குகிறது தாய் மாமன் உறவு.

தாய் மாமன் உரிமை: மடியில் அமரவைத்து மொட்டையடித்து காது குத்துவது தொடங்கி பெண் குழந்தைகள் என்றால் வயது வந்த உடன் குடிசை கட்டுவது வரை தாய் மாமன் உறவை யாராலும் விட்டுத்தர முடியாது. கிழக்கு சீமையிலே படத்தில் வரும்...தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி... பாடல்தான் எந்த விஷேசம் என்றாலும் பல ஆண்டு காலமாக பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தென்மாவட்டங்களில் தாய்மானுக்கு என்று தனி மரியாதையே உள்ளது. தாய்க்கு நிகராக உரிமை கொண்டாடும் தாய்மாமன்தான் எல்லாமே. எந்த ஒரு விசயத்திற்காகவும் தாய் மாமனை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுக்கொடுத்து விட மாட்டார்கள். மண மேடையில் மாப்பிள்ளையோ பெண்ணோ கழுத்தில் மண மாலையை போடுவது தாய்மாமன்தான்.
உரிமையான உறவு: பிறந்த பிள்ளையை திருமணம் செய்து கொடுக்கும் போது தாய்மாமன் சம்மதம் சொன்னால்தான் நிச்சயமே நடக்கும். அந்தளவுக்கு தாய்மாமன் உறவு வலுவானது. தாய்மாமன் வீட்டு சீதனம் முக்கியமானது. எத்தனையோ பேர் சீர் செய்தாலும் ஊர் மெச்ச தாய் மாமன் செய்யும் சீர்தான் சபையை நிறைக்கும். எத்தனையோ சொந்தங்கள் வீட்டு விசேஷத்திற்கு வந்தாலும் தாய்மாமன் வந்தால்தான் வீடு நிறையும்.
விட்டுப்போகாத சொந்தம்: ஆடி பதினெட்டாம் பெருக்கன்று தாய் மாமன் தினமாக கொண்டாடும் மக்கள் அந்த தாய் மாமனுக்கு கிடா விருந்து எல்லாம் வைத்து அமர்களப்படுத்துகின்றனர். தாய் மாமன் காலில் விழுந்தும் ஆசி பெற்றுக்கொள்கின்றனர். எத்தனை எத்தனை உறவுகள் இருந்தாலும் விட்டுப்போகாத சொந்தம்தான் தாய் மாமன் பந்தம் என்று சொல்லி மகிழ்க்கின்றனர் தமிழக பெண்கள். தனது சகோதரன் உயிரிழந்து விட்டான் என்பதற்காக அவரைப்போலவே மெழுகுச்சிலை செய்து தாய் மாமனின் உறவை புரிய வைத்தவர்கள் தென் மாவட்ட பெண்கள். சும்மாவா சொன்னாங்க தாய் மாமன் உறவுங்கிறது தாய்க்கு சமமான உறவு என்று. தாய்மாமனை போற்றும் அனைவருக்கும் இனிய தாய் மாமன் தின நல் வாழ்த்துக்கள். தாய்மாமனின் சிறப்புக்களை ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அழியாத உறவு: அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்கு போனேன் என்று தான் சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தால் யாருடா வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான். எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்" என்பது சொல்வடை. உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா,அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித முன் தொடுப்பும் இல்லாது வருவது.
தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப் உற்ற பாதுகாவலனாய், நண்பனாக அந்த குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து அதன் முகத்தில் அதிக மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன் தான். இன்றும் மாமா வருகிறார் என்றால் குழந்தையின் சந்தோசத்தை சொல்லிமாளது..
தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல கவனிப்பான். அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது. காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும் தாய்மாமனே முன்னிற்பான். தங்கையின் அல்லது அக்காவின் கணவருக்கு அதிக உதவிகள் செய்வது எங்கள் மாமா என்று உரிமையோடு
அவருக்கு துணையாக செல்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
தியாகத்தின் திரு உருவம்: தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுபவன், அண்ணன் தனக்காக தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக வாழ வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தாள் என்றால் அண்ணன் மாடி மீது மாடி கட்டி வாழ்வான். எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ அவன் எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது. சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின் மகளோ இயற்கை குறையோடு இருந்தால் தாய்மாமனுக்குத் தான் கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி விட்டால் அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். தாய்மாமன் உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை தந்தையோ, தனயனோ செய்ய முடியுமா? அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன் அல்லவா? உறவுகளில் மிகச் சிறந்த உறவு " தாய்மாமன்" என்று அடித்துச் சொல்லலாம். ஆனால் இன்று குழந்தைகளின் பெற்றோர் தனது வேலை காரணமாக வெளியூர்களில் இருப்பதால் குழந்தைகளும் அவர்களுடனே இருக்கும் அதனால் இப்போதெல்லாம் தாய்மாமன் உறவு முறை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது என்பதுதான் சோகம்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications