வடலூரில் நாளை தைப்பூசம்! கலர் கலராக 7 திரைகளை விலக்கி வள்ளலாரின் ஜோதி தரிசன ரகசியம் தெரியுமா?
சென்னை: தைப்பூச திருநாளையொட்டி வடலூரில் 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுவதன் ரகசியம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரால் நிறுவப்பட்ட அருட்பிரகாச சத்திய ஞான சபை உள்ளது. "இறைவன் அன்பு வடிவமானவன். அவன் எங்கும் ஜோதி வடிவமாக நிறைந்திருக்கிறான்" என்ற சன்மார்க்க நெறியை தோற்றுவித்தவர் வள்ளலார்.

அவர் ஏற்படுத்தி தந்த சத்திய ஞான சபையில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும். தை மாதத்தில் பவுர்ணமி அன்று வரும் பூச நட்சத்திரமே தைப்பூசம் என அழைக்கப்படுகிறது. மாதாமாதம் பூச நட்சத்திரத்தன்று 6 திரை விலக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும்.
ஆனால் தைப்பூசத்தன்று மட்டும் 7 திரை விலக்கி, ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது. தைப்பூசம் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஏன் கொண்டாடப்படுகிறது என்றால், 1874ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை புனர்பூசமும் பூசமும் இணைந்த நாளில் அவர் சித்தி அடைந்தார்.
அதாவது ஜோதி வடிவமாக கலந்தார். இதை நினைவுக் கூறும் விதமாகவே ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பூச நட்சத்திரத்தன்று 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது. இந்த 7 திரைகளும் 7 நிறங்களில் அமைந்திருக்கும்.
இந்த ஒவ்வொரு திரைக்கும் பூஜை நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு ஒவ்வொரு திரையாக விலக்கப்படும். இந்த ஒவ்வொரு திரையும் ஒவ்வொரு சக்தியை குறிக்கிறது.
அந்த நிறங்கள் குறித்தும் சக்தி குறித்தும் காணலாம்:
கருப்பு திரை- மாயா சக்தி
நீலத் திரை- கிரியா சக்தி
பச்சைத் திரை- பராசக்தி
சிவப்புத் திரை- இச்சா சக்தி
பொன்மைத் திரை- ஞான சக்தி
வெண்மைத் திரை- ஆதி சக்தி
கலப்புத் திரை- சிற்சக்தி
அதாவது ஒவ்வொருவரும் 7 நிலைகளை கடந்தால் ஜோதி வடிவமான இறைவனை அடையலாம் என்பது பொருள். இந்த ஜோதி தரிசனம் நாளை அதிகாலையிலேயே நடைபெறும்.
154 ஆவது ஆண்டாக இந்த தைப்பூச ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என பாடியவர் வள்ளலார். ஜோதி தரிசனத்தை கண்ணாடியில் காணலாம். பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லா நற்பயன்களுக்கும் மேலானது என அறிவுறுத்திய வள்ளலார் அன்னதானச் சாலையையும் அமைத்தார்.
வடலூரில் பார்வதிபுரம் ஊர் மக்களிடம் 80 காணி நிலத்தை தானமாக பெற்று அங்கு 3 வேளையும் உணவளிக்கும் தொண்டு நடைபெறுகிறது. அன்று வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு இன்று வரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் உள்ளது. இந்த விழாவை காண லட்சக்கணக்கானோர் வருகை தருவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications