மருதாணியின் மகிமை தெரியுமா? அம்பிகையே சிறுமி ரூபத்தில் வந்த கதையும் இருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருதாணியின் மகிமை குறித்து உங்களுக்கு தெரியுமா? அம்பிகையே மருதாணி வைத்துக் கொள்ள சிறுமி ரூபத்தில் வந்தது தெரியுமா? கையில் சிவப்பு நிறத்துடன் அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து நானறிந்த ஆன்மீகம் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அம்பிகைக்கு உகந்த வாசனை பொருட்களில் ஒன்று மருதாணி ஆகும். வெறும் கைகளோடு பூஜை செய்வதை விட அம்பிகைக்கு உகந்த சிவப்பு வண்ணத்தோடும், நல்ல வாசனையோடும் நம் கைகளில் மருதாணி வைத்து கொண்டு அம்பாளுக்கு தூப, தீப, ஆராதனைகள் செய்யும் போது தேவி இன்னும் மகிழ்கிறாள். மற்ற காலங்களில் வைத்து கொள்ளாவிட்டாலும் நவராத்ரி காலங்களில் ஆவது அவசியம் வைத்துக் கொண்டு பூஜிக்கலாம்.

spirtuality maruthani

சிறந்த அம்பாள் பக்தையாக விளங்கிய ஒரு பெண்மணிக்கு தனது கணவருக்கு வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனைக்கு மருத்துவமனை அணுக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்றும் இருப்பினும் உயிர் பிழைப்பது கடினம் என்றும் தேதி வைத்துவிட்டனர். மிகவும் வருத்தப்பட அந்த பக்தை ஒரு ஸ்ரீவித்யா உபாசகரை நாடினார். அந்த பக்தையாக அம்பாளிடம் பிரார்த்தித்த உபாசகர் 5 வெள்ளிக்கிழமைகள் கோயிலுக்கு சென்று வரும் சுமங்கலி பெண்களுக்கு மருதாணி வைத்து வேண்டிகொள்ளுமாறு சொன்னார்.

4 வெள்ளிக்கிழமைகள் செய்தானது. 5 ஆம் வாரம் ஆலயத்திற்கு சோதனையாக ஒருபெண்களும் வரவில்லை, பயந்த பக்தை அம்பாளை பிரார்த்தித்தாள். கருணை கொண்ட அம்பிகை சிறு பெண் (பாலா) ரூபத்தில் கோயிலுக்குள் ஓடி வந்தாள். அக்கா எனக்கு மருதாணி வச்சிவிடறீங்களா? என கொஞ்சி மழலையாக கேட்டாள். சுமங்கலிக்கு தானே வைக்க வேண்டும், வந்ததோ சிறு பெண் என தயங்கிய பக்தை அம்பாள் மீது பாரத்தை போடு விட்டு, ஆடம் பிடித்த குழந்தைக்கு கைகளில் கொப்பி கொப்பியாக மருதாணி வைத்து விட்டு, நான் கொஞ்சம் மருதாணி தருகிறேன்.

நீ சென்று உன் அம்மாவுக்கும் வைத்து விடு என்று கேட்டுக்கொள்ள அப்படியே செய்யவதாக சொல்லிவிட்டு ஆலயம் விட்டு ஓடிவிட்டாள். வீட்டிற்கு வந்து அம்பாள் மீது பாரத்தை போடு விட்டு மறுநாள் அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டு, சோதனை செய்த போது மருத்துவர்கள் வியந்தனர்.

புற்றுநோயாக மாற இருந்த செல்கள் அனைத்தும் சாதாரண செல்களாக மாறிவிட்டதாகவும் அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும் கூறிவிட்டனர். வியந்த நன்றிப் பெருக்கோடு ஸ்ரீவித்யா உபாசகரிடம் சென்று சுவாமி நான் 5 ஆம் வாரம் பூர்த்தி செய்ய முடியவில்லை சுமங்கலிக்கு வைக்கல. ஆனாலும் அம்பாள் திருவருள் மூலம் கணவர் நலம் பெற்றார் என்றார்.

அப்போது சிரித்த ஸ்ரீவித்யா உபாசகர், வந்தது சாஃஷாத் அம்பிகை தான் என்றும், அவளுக்கே மருதாணி வைக்கும் பெரும் பேறு உன் பக்தியால் கிடைத்தது என்று கூறினார். கண்ணீர் மல்க அம்பிகைக்கு நன்றி சொன்னார் அந்த பக்தை.. நாமும் அம்பாளை பூஜிக்கும் தருணம் மருதாணி வைத்துக்கொள்ளலாம், நவராத்ரி காலங்களில் இல்லத்திற்கு வரும் பெண்களுக்கும் மருத்துவ குணம் நிறைந்த மருதாணி வைத்துவிடலாம். அம்பிகை அருள் பெறலாம்.. ஜெய ஜெய ஜெகதாம்பிகே ஜெய ஜெய காமாக்ஷி!

மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதை புரிந்துக் கொள்வாளாம். வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக் கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும். தேவி சரணம் ! ஸ்ரீ மாத்ரே நமஹ ! இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+