திருமலை பிரம்மோற்சவம்.. மோகினியாய் உலா வந்த மலையப்பசுவாமி.. கருட வாகன சேவை காண குவிந்த பக்தர்கள்
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலின் ஐந்தாம் திருநாளான இன்று காலையில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி அணிந்து மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார். இரவு கருட வாகனத்தில் உலா வரும் மலையப்பசுவாமியை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
பிரம்மோற்சவம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோயில் முழுவதும் பல்வேறு வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயிலின் ராஜகோபுரம் முற்றிலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

தினசரியும் மலையப்பசுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சேஷவாகனம், அன்னவாகனம், சிம்ம வாகனம், முத்துப்பந்தல், கற்பக விருட்சம், சர்வ பூபால வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார் மலையப்பசுவாமி. மாட வீதிகளில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
5ஆம்நாளன்று கருட வாகன சேவையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். பெரிய திருவடி என்று போற்றப்படும் கருடவாகனத்தில் கம்பீரமாக அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் மலையப்பசுவாமி. பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் திருநாளில் ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, ஆண்டாள் அணிந்திருந்த வஸ்திரம் ஆகியவை மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பின்னர் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை திருமலை தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

ஐந்தாம் நாளான இன்று காலை உற்சவர் மலையப்பசுவாமி மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். அப்போது ஆண்டாள் சூடிக்கொடுத்த கிளி, மாலை அணிந்து நான்கு மாட வீதிகளில் உலா வந்தால் மலையப்பசுவாமி. அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். பாற்கடலில் மந்திரகிரி என்ற மலையை வாசுகி என்ற பாம்பை கொண்டு தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்தனர். அப்போது கிடைத்த அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் கிடைக்க செய்யும் விதமாக மகா விஷ்ணு மோகினி அலங்காரத்தில் தோன்றி அசுரர்களை ஏமாற்றினார். அதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் பிரமோற்சவத்தின் 5வது நாள் காலை மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.

இன்று இரவு கருடசேவை நடைபெறுகிறது. கருடசேவையில் எழுந்தருளும் மலையப்பசுவாமியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள். இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். எங்கும் கோவிந்தா முழக்கம் எதிரொலிக்கிறது. பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடு திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

மலையப்ப சுவாமி இன்றைய தினம் மகரகண்டி, லக்ஷ்மி ஆரம், சகஸ்ரநாம மாலை என மூலவரான ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர, வைடூரிய, மாணிக்க, மரகத, பவள, முத்து என நவரத்தினங்கள் மற்றும் நவமணிகளால் ஆன ஆபரணங்களை அணிந்து கொண்டு, கருடன் மேல் மகா விஷ்ணுவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

சென்னையில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது. இன்றைய தினம் கருட வாகனத்தில் அருள்பாலிக்கும் மலையப்பசுவாமிக்கு புதிய திருக்குடைகள் நிழல் தர உள்ளன.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications