திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் எப்போது சனிப்பெயர்ச்சி! கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு
திருநள்ளாறு: காரைக்கால் சனீஸ்வர பகவான் கோயிலில் வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறும் என பஞ்சாங்கம் வாசித்து கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தனி சன்னதியில் உள்ளவர் சனீஸ்வர பகவான். இந்த கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும்.

இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்த சனீஸ்வரரை தரிசனம் செய்து வருவது வழக்கம். சனிப்பெயர்ச்சி இல்லாத நாட்களிலும் சனீஸ்வர பகவான் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என சொல்லப்பட்டது. தனது சொந்த வீடான கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரம் 3ஆம் பாதத்தில் இருந்து மீனத்தில் உள்ள பூரட்டாதி 4ஆம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார் என சொல்லப்பட்டது.
இந்த நிலையில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு அன்றைய தினம் திருநள்ளாறு சனீஸ்வர கோயிலில் எந்த சிறப்பு விசேஷ பூஜையும் செய்யப்படாது என கோயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரம்பரிய கணக்கு முறைப்படி, 2025 மார்ச் மாதம் 29ஆம் தேதி நிகழாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 29ஆம் தேதி, திருநள்ளாறு கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும். 2026 ஆம் ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. சனிப்பெயர்ச்சி நடைபெறும் தேதி பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழ் புத்தாண்டு தினத்தன்று திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடந்தது. அப்போது வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். இவ்வாறு கோயில் நிர்வாகம் சார்பில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கம் வாசித்தனர்.
கடந்த மார்ச் 29ஆம் தேதி நடந்தது திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சியாகும். அது போல் அடுத்த ஆண்டு நடைபெறுவது வாக்கிய பஞ்சாங்கத்திப்படி நடக்கும் சனிப்பெயர்ச்சியாகும். கடந்த முறை நடந்த சனிப்பெயர்ச்சியின் போது திருநள்ளாறில் விசேஷ பூஜை இல்லாவிட்டாலும் பல்வேறு தரப்பினரும் அங்கு குவிந்து சனீஸ்வரரை வழிபட்டனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications