திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி! அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த "அந்த" மாலை!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியலில் ரூ 1 நாணய மாலை மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உண்டியலில் செப்டம்பர் மாதத்தில் ரூ 5.15 கோடியுடன் காணிக்கைகள் வந்த போதிலும் இந்த ரூ 1 நாணய மாலைதான் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். ஜாதகத்தில் ஏதேனும் பிரச்சினை, குடும்பத்தில் பிரச்சினை என எது இருந்தாலும் திருச்செந்தூர் முருகனை தரிசித்தால் அவை அங்குள்ள கடற்கரை காற்று போல் பறந்து போய்விடும் என்பது ஐதீகம்.

பிள்ளை வரம், திருமண தடை நீங்க, செல்வம் கொழிக்க, நோய் நீங்க என பல்வேறு காரணங்களுக்காக இவரை வந்து மக்கள் தரிசிக்கிறார்கள். அது போல் காணிக்கையும் ஏராளமாக வந்து குவிகிறது.
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாதந்தோறும் உண்டியல் வருமானம் எண்ணப்படுகிறது. அதன்படி உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் கோயில் வசந்த மண்டபத்தில் கோயில் தக்கார் அருள் முருகன் தலைமையில் இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் எண்ணப்பட்டது.
உண்டியல்கள் எண்ணும் பணியில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பதினென் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக் குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப் பணிக் குழுவினர், கோயில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்டியல் காணிக்கை எண்ணிய போது ரூ 5.15 கோடி ரொக்கம் கிடைத்தது.
அது போல் 2352 கிராம் தங்கம், 41,998 கிராம் வெள்ளி, 61,600 கிராம் பித்தளை, 5,129 கிராம் செம்பு, 13,739 கிராம் தகரம் மற்றும் வெளிநாட்டு பணம் 1,589 என பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இந்த காணிக்கையின் போது வழக்கத்தை விட உண்டியலில் 1 ரூபாய் நாணயங்களால் கோர்க்கப்பட்ட நாணய மாலையை பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியுள்ளார். அவர் யார் என்றும், என்ன வேண்டுதலுக்காக இது போல் செலுத்தியுள்ளார் என்பது தெரியவில்லை.
-
பக்தர்களுடன் பேசும் சிவன்மலை முருகன்! உலக மாற்றங்களை கணிக்கும் உத்தரவு பெட்டியின் ரகசியம் -
வைகாசி 2026: சுப முகூர்த்தங்கள், வாஸ்து நாட்கள் மற்றும் விசேஷ தினங்கள் முழு பட்டியல் -
Jananayagan: ஜனநாயகன் எப்போது ரிலீஸ்! திருச்செந்தூர் கோயிலில் தயாரிப்பாளர் கொடுத்த சூப்பர் அப்டேட்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications