Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருட வாகன சேவை.. பிரமோற்சவத்திற்கு தயாராகும் திருமலை.. புஷ்கரணியில் நீராட 1 மாதம் பக்தர்களுக்கு தடை

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருமலையில் ஆகஸ்ட் மாத பௌர்ணமி கருட சேவை கோலாகலமாக நேற்று நடைபெற்றது. கருட பஞ்சமி நாளிலும், மாத இறுதியில் வரும் பௌர்ணமி நாளிலும் கருட வாகன சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதை முன்னிட்டு மற்றொரு முக்கிய அறிவிப்பினையும் தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆகஸ்ட் மாத உற்சவங்கள் மற்றும் விழாக்களுக்காகவும், அடுத்தடுத்து நடக்க பிரம்மோற்சவ விழாக்களுக்காகவும் தயாராகி வருகிறது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளான நேற்றைய தினம் பௌர்ணமி கருட சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். வரும் 12 ஆம் தேதி மடாத்ரேய ஏகாதசி கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் வருஷ திருநட்சத்திரம், ஸ்ரீ பிரதிவார பாயங்கர அன்னன்கரச்சாரிய வருஷ நட்சத்திரம் ஆகஸ்ட் 21 கருட பஞ்சமி கருட சேவை அன்றைய தினம் கருட வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருவார்.

Tirumala Balaji temple getting ready for brahmotsavam Devotees banned from bathing in Pushkarani for 1 month

ஆகஸ்ட் 22 ஸ்ரீ கல்கி ஜெயந்தி, ஆகஸ்ட் 25ஆம் தேதி ஸ்ரீ வரலட்சுமி விரதம், மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா வர்தந்தி, ஆகஸ்ட் 27 ,28 ஆம் தேதிகளில் பவித்ரோற்சவம், ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஸ்ரவண பெளர்ணமி, ராக்கி பண்டிகை, ஸ்ரீ விகனாச மகாமுனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஸ்ரீ ஹயக்ரீவ ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

வழக்கமாக திருப்பதியில் பெளர்ணமி தினங்களில், மாதத்திற்கு ஒரு முறை தான் கருட சேவை உற்சவம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மூன்று முறை கருட சேவை உற்சவம் நடைபெற உள்ளது மிகவும் சிறப்பானதாகும். ஹயக்ரீவர் ஜெயந்தி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல முக்கிய விழாக்களும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற உள்ளதால் வழக்கத்தை விட பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இந்த ஆண்டு திருமலையில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சலகட்லா பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதே போல் நவராத்திரி பிரம்மோற்சவம் வழக்கம் போல அக்டோபர் மாதம் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரம்மோற்சவம் நடைபெறும் பத்து நாட்களும் தினசரியும் காலையும் மாலையும் மலையப்பசுவாமி வீதி உலா வருவார். லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் என்பதால் ஏழுமலையான் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பக்தர்களுக்காக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. திருமலை திருப்பதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்த ஆண்டிற்கான வருடாந்திர பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன. இதற்காக புனித புஷ்கரணி தீர்த்தத்தை சுத்தம் செய்யும் மற்றும் குறைபாடுகள் சரிசெய்யும் பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகள் சுமார் ஒரு மாத காலம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஆகஸ்ட் 01 ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 31 ம் தேதி வரை புனித புஷ்கரணி தீர்த்தம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tirumala Balaji temple getting ready for brahmotsavam Devotees banned from bathing in Pushkarani for 1 month

இதன் காரணமாக இந்த மாதம் முழுவதும் பக்தர்கள் திருக்குளத்தில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்குளத்திற்கு தினமும் நடத்தப்படும் புஷ்கரணி ஆரத்தி சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் திருக்குளம் பராமரிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருக்குள பராமரிப்பு பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதற்காக குளத்தில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு குளம் சுத்தம் செய்யப்பட்ட பின் மீண்டும் தண்ணீர் விட்டு நிரப்பப்படும். இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு அடுத்த மாதம் முதல் மீண்டும் திருக்குளத்தில் புஷ்கரணி சேவை தொடங்கும் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் வராகசுவாமி கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள புனித புஷ்கரணி தீர்த்தத்தில் தினமும் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை புனித நீராடுவது வழக்கம். பிரம்மோற்சவம் உள்ளிட்ட முக்கிய விழா காலங்களில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி-பூதேவி சமேத மலையப்ப சுவாமி இந்த தீர்த்தத்திற்கு எழுந்தருளி சக்ர ஸ்நானம் காணுவது வழக்கம்.

புனித புஷ்கரணி, ஸ்வாமி புஷ்கரணி என பல பெயர்களாலும் அழைக்கப்படும் இந்த தீர்த்தம் பூலோகத்திலேயே மிகவும் புனிதமான தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது. பூமியில் உள்ள அனைத்து தீர்த்தங்களும் இந்த திருக்குள தீர்த்தத்தில் சங்கமிப்பதாக ஐதீகம். கங்கை போன்ற புனித நதிகளுக்கு இணையாக பாவங்களை போக்கும் தன்மை இந்த தீர்த்தத்திற்கு உண்டு.

பொதுவாக புஷ்கரணி தீர்த்தத்தில் தண்ணீர் தேங்குவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இந்த தீர்த்த குளத்தில் உள்ள தண்ணீர் மறுசுழற்சி முறையில் தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்டுக் கொண்டே இருப்பதால் இந்த குளத்தில் எப்போதும் சுத்தமான நீர் மட்டுமே இருக்கும். இருந்தாலும் பிரம்மோற்சவ காலத்தில் சக்ர ஸ்நானம் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறும் என்பதால் சாஸ்திர முறைப்படி தீர்த்த குளம் சுத்திகரிக்கப்பட்டு, சீரமைப்பு பணிகளும் நடத்தப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நீர் பராமரிப்பு துறை பணியாளர்கள் கோவில் குளத்தில் உள்ள நீரின் தன்மை ஆகியவற்றை ஆராயும் பணிகளையும் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+