திருப்பதிக்கு பிப்ரவரி மாசம் போக திட்டமா? இன்று காலை 10 மணிக்கு ஆதாருடன் காத்திருங்கள்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை பிப்ரவரி மாதம் தரிசனம் செய்வதற்கான ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ரிலீஸாகிறது. இதை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அது போல் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். இந்த நிலையில் ஏழுமலையானை தரிசிக்க மாதந்தோறும் 24 ம் தேதி ரூ 300 தரிசன டிக்கெட்டுகளும் சேவா டிக்கெட்டுகளும் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

அதாவது 90 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால் மட்டுமே ஏழுமலையானை கட்டண தரிசனத்திலோ சேவையிலோ தரிசிக்கலாம். இல்லாவிட்டால் நடைபாதை தரிசனம் அல்லது இலவச தரிசனத்தில்தான் செல்ல முடியும்.
இந்த நிலையில் 2024-ஆம் ஆண்டுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தது. அது போல் ஜனவரி மாதத்திற்கும் டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான டிக்கெட்டுகளின் அட்டவணை கடந்த 21 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அந்த வகையில் பிப்ரவரி மாதத்திற்கான கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை உள்ளிட்டவைகளுக்கான டிக்கெட்டுகளை நேற்று தேவஸ்தானம் வெளியிட்டது.
அது போல் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளை 100-லிருந்து 200 ஆக உயர்த்தியுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு அங்கப்பிரதட்சண சேவைக்கும் 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை சேவைக்கும் பிற்பகல் 3 மணிக்கு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி பக்தர்களுக்குமான ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியானது.
அது போல் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் வெளியாகிறது. பிற்பகல் 3 மணிக்கு தேவஸ்தான விடுதிகளில் தங்குவதற்கான முன் பதிவு தொடங்குகிறது. பக்தர்கள் ttdevasthanams.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்துமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications