Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி தேவஸ்தானத்தில் சூப்பர் சான்ஸ்.. திருமலை பக்தர்களுக்கு லட்டு நியூஸ்.. பெருமாளை காண ரெடியா?

Subscribe to Oneindia Tamil

திருமலை: திருப்பதி தேவஸ்தானத்தில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. இந்த சூப்பர் சான்ஸை, ஏழுமலையானை சந்திக்க வரும் பக்தர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டுமானால, 3 மாதங்களுக்கு முன்பாகவே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட வேண்டும்.

Tirumala Tirupati Devasthanams

எனவே, ஆன்லைன் முன்பதிவுகள் துவங்கும் தேதியையும், நேரத்தையம் தேவஸ்தான நிர்வாகம் மாத மாதம் முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது.. அதிலும், எந்த தேதியில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் உள்ளிட்ட பிற சேவைகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்பதை 90 நாட்களுக்கு முன்னதாகவே அறிவித்தும் வருகிறது.

அந்தவகையில், ஜூலை மாத இறுதி வரையிலான தரிசன டிக்கெட் முன்பதிவுகள் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவுகள் துவங்கும் தேதி, நேரம் குறித்த விபரங்களை சமீபத்தில் தேவஸ்தானம் வெளியிட்டிருந்தது,

நவம்பர் டோக்கன்: அதேபோல, வரும் நவம்பர் மாதம் அங்கபிரதட்சணம் செய்பவர்களுக்கான எண்ணிக்கையும் ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளதாக தெரிகிறது... அப்படியானால், நவம்பரிலிருந்து ஆயிரம் டோக்கன்கள் அதிகமாகவே வழங்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாகவும் பக்தர்கள் வருகை இன்னும் அதிகமாகும் என கணிக்கப்படுகிறது.

அந்தவகையில், நவம்பர் மாதம் ஏழுமலையானை தரிப்பது, திருமலையில் தங்குவது உள்ளிட்டவைகளுக்காகவே ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. கடந்த வாரமும், 19ம் தேதி காலை 10 மணிக்கு, டிக்கெட் ஓபன் துவக்கப்பட்டது. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கான ஆகஸ்ட் 19 துவங்கி, ஆகஸ்ட் 21 ம் தேதி காலை 10 மணி வரை லக்கி டிப் டிக்கெட்கள் முன்பதிவுகள் நடைபெற்றன..

அங்க பிரதட்சணம்: அதேபோல, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைகளுடன், வருடாந்திர புஷ்ப யாகத்திற்கான டிக்கெட்கள், ஆகஸ்ட் 22ம் தேதி காலை 10 மணிக்கு துவங்கி நடந்தது.. ஆகஸ்ட் 23ம் தேதி காலை 10 மணிக்கு அங்கபிரதட்சணம் டோக்கன்களும், காலை 11 மணிக்கு ஸ்ரீவாணி டிரஸ்ட் நன்கொடையாளர்களுக்கான தரிசனம் மற்றும் தங்குமிட முன்பதிவுகளும், மூத்த குடிமக்கள், மாற்று திறன் கொண்ட பக்தர்கள் உள்ளிட்டோருக்கான தரினச டிக்கெட்களும் வெளியிடப்பட்டன..

இந்நிலையில், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் முன்பதிவு இன்று அதாவது ஆகஸ்ட் 24ம் தேதி காலை 10 மணிக்கு ஆரம்பித்து நடந்து வருகிறது.. திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் ஒதுக்கீடு முன்பதிவுக்கான டிக்கெட் இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பக்தர்கள் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். பிரம்மோற்சவத்திற்கு பிறகு நடக்கும் வருடாந்திர உற்சவங்களும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதால், பக்தர்களுக்கு இந்த முன்பதிவு டிக்கெட் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

பரகாமணி சேவை: இதனிடையே, ஆகஸ்ட் 27 ம் தேதி திருமலை - திருப்பதி ஸ்ரீவாரி சேவை ஒதுக்கீடு காலை 11 மணிக்கும், நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை மதியம் 1 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும். பக்தர்கள் தேவஸ்தான இணையதளம் மூலம் (ttdevasthanams.ap.gov.in) ஆர்ஜித சேவைகள், தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக https://ttdevasthanams.ap.gov.in/home/ என்ற தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மூலம் முன்பதிவு செய்வார்கள்.. ஆனால், இதற்கு இரண்டு அல்லது 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து விட்டு, காத்திருக்க வேண்டும். ஆனால், ஆர்டிசி மூலம் திருப்பதி தரிசன டிக்கெட்களை வெறும் 5 அல்லது 6 நாட்களுக்கு முன்பேயே முன்பதிவு செய்து கொள்ளலாம்.. அதனால்தான், திருப்பதி செல்லும் ஏராளமான பக்தர்கள் இந்த சேவையை அதிகமாகவே பயன்படுத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+