கார்த்திகை மாதம்.. திருப்பதியில் என்ன விஷேசம்.. ஏழுமலையான் பக்தர்களே.. நோட் பண்ணிக்கங்க
திருப்பதி: கார்த்திகை மாதத்தில் திருப்பதி, திருமலை, திருச்சானூர் ஆலயங்களில் என்னென்ன விஷேசங்கள், விழாக்கள் கொண்டாடப்படுகிறது என்று பார்க்கலாம். ஏழுமலையான் பக்தர்கள் இந்த தேதிகளை டைரியில் குறித்து வைத்துக்கொண்டு அதற்கேற்ப பயணங்களை திட்டமிடலாம்.
சந்திரனை அடிப்படையாகக் கொண்டு மாதப்பிறப்பு ஆந்திராவில் கொண்டாடப்படுகிறது. அமாவாசைக்கு மறுநாள் மாத பிறப்பு என்பதால் இன்றைய தினம் கார்த்திகை மாதம் பிறந்திருக்கிறது. தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி கார்த்திகை மாதம் பிறக்கிறது.

கார்த்திகை மாதத்தில் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. அதே போல பிரசித்தி பெற்ற சிவ ஆலயமான கபிலேஸ்வர சுவாமி ஆலயத்தில் கார்த்திகை சோமவாரம், கந்த சஷ்டி, கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
நவம்பர் 14: திருச்சானூர் பத்மாவதி தாயார் கஜ வாகனம்
நவம்பர் 15: சந்ரோதயம், திருச்சானூர் பத்மாவதி தாயார் கருட சேவை
நவம்பர் 17: நாக சதுர்த்தி திருமலை மலையப்பசுவாமி ஷேச வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா. திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் திருத்தேரோட்டம்.
நவம்பர் 18: திருமலை மலையப்பசுவாமி புஷ்பயாகம் அங்குரார்ப்பணம். திருச்சானூர் பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்தம்
நவம்பர் 19: திருமலை மலையப்பசுவாமி புஷ்பயாகம். திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்ப யாகம். திருப்பதி கபிலேஷ்வர சுவாமி சன்னதியில் கந்த சஷ்டி.
நவம்பர் 23: பிரபோதன ஏகாதசி
நவம்பர் 24: திருமலையப்பசுவாமி ஆலயத்தில் கைசிக துவாதசி ஆஸ்தானம். சாதுர்மாஸ்ய விரதம் நிறைவு.
நவம்பர் 26: திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி ஆலயத்தில் கார்த்திகை தீப உற்சவம். கார்த்திகை பவுர்ணமி. திருமலையப்பசுவாமி ஆலயத்தில் கார்த்திகை தீப உற்சவம்.
நவம்பர் 30: திருப்பதி கபிலேஸ்வர சுவாமி லட்ச வில்வ அர்ச்சனை
டிசம்பர் 10: திருப்பதி கோவிந்தராஜ சுவாமி திருவடி சன்னதிக்கு எழுந்தருளல்.
டிசம்பர் 11: கார்த்திகை சோமவார பிரதோஷம்.. கபிலேஸ்வர சுவாமி ஆலயத்தில் உற்சவம்.
இந்த விஷேச நாட்களை உங்கள் டைரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதற்கேற்ப உங்களின் பயணங்களை திட்டமிட்டு சாமி தரிசனம் செய்யுங்கள்.












Click it and Unblock the Notifications