திருப்பதி ஏழுமலையான் தரிசனம்..ஆன்லைனில் டிக்கெட் ரிலீஸ்.. எப்படி புக் செய்யலாம் - முழு விபரம்
திருப்பதி: ஏழுமலையானை தரிசிக்க தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட், கட்டண சேவை டிக்கெட், மெய்நிகர் சேவை டிக்கெட், அங்கப்பிரதட்சணம் டிக்கெட் போன்றவற்றை தேவஸ்தான இணைய தளத்தில் வரும் 20, 21, 24, 25 ஆகிய தேதிகளில் வெளியிட உள்ளது. டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் வழிமுறைகளுக்கு ஏற்ற வகையில் அவற்றை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கோடை விடுமுறையை முன்னிட்டு திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர். இலவச தரிசனம் மட்டுமல்லாது விரைவு தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்கின்றனர்.

மே மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் இம்மாதம் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தான வெப்சைட்டில் வெளியிடப்பட உள்ளன. திருப்பதி மலையில் உள்ள தங்கும் அறைகளை முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 26 ஆம் தேதி காலை 10 மணி முதல் முன்பதிவு செய்யலாம். திருப்பதியில் உள்ள தங்கும் அறைகளை முன்பதிவு செய்ய வரும் பக்தர்கள் வரும் 27ஆம் தேதி காலை 10 மணி முதல் அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மே மாதம் ஏழுமலையான் கோவிலில் நடைபெற இருக்கும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரமோற்சவம், சகஸ்ரதீப அலங்கார சேவை ஆகிய சேவைகளில் மெய்நிகர் அடிப்படையில் பங்கு பெற டிக்கெட்களை இம்மாதம் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கும், ஜூன் மாதம் மெய் நிகர் சேவைகளை முன்பதிவு செய்த பக்தர்கள் ஏழுமலையான வழிபடுவதற்கான டிக்கெட்டுகளை இம் மாதம் 24 ஆம் தேதி மாலை 3 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளில் ஒரு சில சேவைகளுக்கான டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ஜூலை மாத கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பெற விரும்பும் பக்தர்கள் வரும் 20ஆம் தேதி காலை 10 மணி முதல் 22 ஆம் தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். 22 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய கட்டண சேவைகளை, மெய்நிகர் சேவைகளாக ஆன்லைனில் தரிசிக்க வசதிகள் உள்ளன. ஜூலை மாதம் நடைபெற இருக்கும் இந்த மெய் நிகர் சேவைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் வரும் 20ஆம் தேதி காலை மணி 11.30 மணிக்கு துவங்கி ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

ஜூலை மாதம் ஏழுமலையான் கோவிலில் அங்க பிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள் வரும் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு துவங்கி தேவஸ்தான வெப்சைட்டில் அங்கப் பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்களை இலவசமாக முன்பதிவு செய்யலாம். 21 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் மாற்றத்திறனாளிகள் மூத்த குடிமக்கள் உள்ளிட்டோர் ஜூலை மாதம் ஏழுமலையானை வழிபட தேவையான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும்.அவற்றையும் பக்தர்கள் இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
விஐபி தரிசன டிக்கெட் பெற விரும்பும் பக்தர்கள் நாளை மறுநாள் 20ஆம் தேதி மாலை 3 மணிக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை செலுத்தி ஸ்ரீவாணி அறக்கட்டளை விஐபி தரிசன டிக்கெட் தேவஸ்தான வெப்சைட்டில் முன்பதிவு செய்யலாம். டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் www. tirupathibalaji.ap.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications