திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிரடி மாற்றங்கள்.. பக்தர்கள் தங்குவதற்கு இனி கவலைப்பட வேண்டாம்
திருப்பதி: ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசல் காலத்தில் தங்குவதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. நடமாடும் கன்டெய்னர் மொபைல் ரூம்கள் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரூம்களில் படுக்கைகள், குளியல் அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முன்பதிவு செய்து வருவார்கள். தங்கும் அறைகளையும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யாத பக்தர்கள் நேரடியாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அறைகளை புக் செய்வார்கள்.

விடுமுறை நாட்கள், விழா நாட்கள் என்றால் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். சர்வ தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருக்கும் வைகுந்தம் காம்ப்ளக்ஸின் அனைத்து கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழியும். அதையும் தாண்டி பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் கால்கடுக்க காத்திருப்பார்கள். மழையானாலும் சரி, வெயிலானாலும் சரி, அதை பற்றியெல்லாம் பொருட்படுத்தாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளனர்.
இரவு பகல் என இல்லாமல் எப்போதும் திருப்பதியில் கூட்டம் அலைமோதும். விடுமுறை நாட்களிலும் விழா நாட்களிலும் பக்தர்கள் கூட்டத்தால் திருப்பதி ஏழுமலையானுக்கே ஓய்வு கிடைக்காது. விடுமுறை நாட்கள் மற்றும் பிரம்மோற்சவ நாட்களில் தங்குவதற்கு அறை கிடைக்காமல் பக்தர்கள் மண்டபங்களிலும் மரங்களுக்கு அடியிலும் சாலை ஓரமாகவும் பூங்காக்களிலும் பக்தர்கள் தங்கியிருப்பார்கள்.
திருமலையில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்குவதற்கு அறைகள் குறைவாக உள்ளது. சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அதிக ஓய்வு இல்லங்கள் கட்ட வனத்துறை அனுமதி இல்லை. பல இடங்களில் உள்ள பழைய ஓய்வு இல்லங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இடம் கிடைக்காத பக்தர்கள் ஆங்காங்கே கிடைக்கும் இடங்களில் தங்கியிருப்பார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது தற்காலிகமாக தங்குவதற்கு விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த காணிக்கையாளர் மூர்த்தி என்பவர் கன்டெய்னர் வடிவ மொபைல் ஓய்வறைகளை காணிக்கையாக வழங்கினார். அதில் ஒன்று திருமலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. அது சோதனை அடிப்படையில் திருப்பதி தேவஸ்தான டிரைவர்கள் இரவில் தங்குமிடமாக ஒதுக்கப்பட உள்ளது. மற்றொன்று ராம் பகீச்சா 3வது விடுதி அருகே அமைக்கப்பட்டுள்ளது அதில் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுக்கலாம்.
கன்டெய்னர் வடிவில் நடமாடக்கூடிய தங்கும் ஓய்வறையில் ஒரே நேரத்தில் 12 பேர் தங்கும் வகையில் படுக்கைகள், குளியல் அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளன. அவை இரண்டும் சேர்ந்து மொத்தம் ரூ.25 லட்சம் ஆகும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது திருப்பதியில் உள்ள பல்வேறு இடங்களில் வைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. மேலும் கன்டெய்னர் அறைகளை ஏற்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நடமாடும் கண்டெய்னர் ரூம்களால் சுற்றுச் சூழலுக்கு பெரிதாக மாசு ஏற்படாது. இதனால் இதுபோல் மேலும் பல கன்டெய்னர் ரூம்களை உருவாக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில் விசேஷ காலங்களில் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் இந்த அறைகளை அமைக்கும் போது பக்தர்களுக்கும் அது வசதியாக இருக்கும். சுற்றுச்சூழலுக்கும் எந்த ஆபத்தும் வராது. தேவஸ்தானத்தின் இந்த மொபைல் ரூம் திட்டத்திற்கு பக்தர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications