புதுமணத்தம்பதிகளே.. திருப்பதி ஏழுமலையான் கொடுக்கும் பரிசு.. கல்யாண உற்சவம் பார்ப்பது எப்படி?
திருப்பதி: திருமலையில் மலையப்பசுவாமியின் கல்யாண உற்சவத்தில் புதுமண தம்பதிகள் பங்கேற்க டிக்கெட்டுகளை ஒதுக்கீடு செய்துள்ளது. அதே போல புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு திருப்பதி ஏழுமலையானின் திருமண ஆசீர்வாதம் பரிசு பொருள் வழங்கும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
திருமணம் முடித்த கையோடு மணக்கோலத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் புதுமண தம்பதிகளுக்கு திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையானை தரிசனம் செய்ய அரிய வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ஏழுமலையானின் கல்யாண உத்சவத்தில் புதுமண தம்பதிகள் பங்கேற்க டிக்கெட்டுகளை ஒதுக்கீடு செய்துள்ளது.

புதுமணத் தம்பதிகள் திருமலைக்கு வந்து ஸ்ரீவாரி கல்யாணத்தில் பங்கேற்றால், சகல சுகங்களும், திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் திருமஞ்சன சேவையில் கலந்து கொள்ள பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் TTD புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு நாளைக்கு 20 டிக்கெட்டுகளை ஒதுக்கியுள்ளது.
ஒவ்வொரு டிக்கெட்டும் 1000 ரூபாய் ஆகும். இந்த டிக்கெட்டுகள் திருமண விழாக்கள் மற்றும் பிரத்யேக தரிசனம் ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தலாம். இந்த டிக்கெட்டைப் பெறுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. புதுமணத் தம்பதிகள் முதலில் CRO அலுவலகத்தில் உள்ள ஆர்ஜிதா சேவா லக்கி டிப் கவுண்டருக்குச் செல்ல வேண்டும்.
அங்கு புதுமண தம்பதிகள் தங்களின் திருமண புகைப்படம் மற்றும் ஆதார் கார்டுகளை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். இந்த சிறப்பு சேவையை பெற புதுமணத் தம்பதிகள் திருமணம் செய்து ஒரு வாரத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். இந்த புதுமணத் தம்பதிகள் நேரடியாக கல்யாணோத்ஸவ டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதே போல புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு திருப்பதி ஏழுமலையானின் திருமண ஆசீர்வாதம் பரிசு பொருள் வழங்கும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. அந்த திட்டத்தின்படி, உங்கள் வீட்டில் யாருக்கேனும் திருமணம் நிச்சயம் நடந்து திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தால், அந்த திருமணத்திற்கான திருமண அழைப்பிதழை ஒரு மாதத்திற்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும்.
திருமண பத்திரிக்கை அனுப்ப வேண்டிய முகவரி : To, Sri Lord Venkateswara swamy, The Executive Officer TTD Administrative Building K.T.Road Tirupati - 517501. அப்படி அனுப்பப்படும் திருமண தம்பதிகளுக்கு திருப்பதி ஏழுமலையானின் பிரசாதம் மற்றும் பிற மங்கள பொருட்களை, தம்பதிகளுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் ஆசீர்வாதத்துடன் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுப்பி வைக்கும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications