ஜனவரி 20ல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க புதிய விதிமுறைகள்! தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பரமபத வாசல் வழியாக ஏழுமலையானை தரிசிக்கும் நிகழ்வு நாளையுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து வரும் 20ஆம் தேதி முதல் இலவச தரிசன பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
வைகுண்ட ஏகாதசி கடந்த 10-ஆம் தேதி நடந்தது. இதையொட்டி அனைத்து வைஷ்ணவ கோயில்களிலும் பரமபதவாசல் திறக்கப்பட்டது. இந்த வாசல் வழியாக வந்து பெருமாளை தரிசித்தால் நம் பாவங்கள் நீங்கி புண்ணியம் ஏற்படும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் திருமலை திருப்பதியில் பக்தர்கள் சொர்க்க வாசலை தரிசிக்க கடந்த 10 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் கூறியிருந்தது. இந்த வைபவத்தை எளிய பக்தர்கள் தரிசிக்கும் வகையில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் கடந்த 9ஆம் தேதி முதலே சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என தேவஸ்தானம் அறிவித்தது.
மேலும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இந்த 10 நாட்களுக்கு மட்டும் ரூ 300 தரிசன டிக்கெட் கடந்த டிசம்பர் மாதமே விற்பனை செய்யப்பட்டது. 10 நாட்களுக்கும் சேர்த்து 1.40 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இது மட்டுமல்லாமல் நடைபாதை தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இலவச தரிசனத்தில் வருவோர் டோக்கன் பெற்றால்தான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்திருந்தது. அந்த வகையில் கடந்த 9 நாட்களாக ரூ 300 தரிசனம், இலவச தரிசன டோக்கன்களை பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
தினமும் கோயில் கோபுரம் உள்ளிட்ட இடங்களில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அது போல் மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாளையுடன் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் முடிவடைகிறது.
இதனால் அடுத்த நாள் 20ஆம் தேதி முதல் டோக்கனின்றி இலவச தரிசனத்திற்கு வரிசையில் செல்வோர் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்காக புதிய அறிவிப்பையும் தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
அதாவது ஜனவரி 20ஆம் தேதி திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்கு எஸ்எஸ்டி டோக்கன்கள் விநியோகம் செய்யப்படாது. அன்று சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசன வரிசையில் மட்டுமே சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.
ஜனவரி 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் சர்வ தரிசனத்திற்கு வரிசையில் மட்டுமே வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. அது போல் ஜனவரி 19ஆம் தேதி, 20 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையாணை தரிசனம் செய்ய ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் இந்த இரு நாட்களும் ஆஃப்லைனில் வழங்கப்படமாட்டாது.
ஜனவரி 20ஆம் தேதி திருப்பதியில் புரோட்டோகால் தவிர மற்ற விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விஐபி பிரேக் தரிசனத்திற்கு சிபாரிசு கடிதங்களுடன் வருபவர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications