Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏழுமலையானை தரிசிக்க அக்டோபர் மாதம் திருப்பதி போறீங்களா?.. மூத்த குடிமக்களே குட்நியூஸ் உங்களுக்கு

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: அக்டோபர் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை வழிபட விரும்பும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தங்களுக்கு தேவையான டோக்கன்களை இம்மாதம் 24ஆம் தேதி மாலை 3 மணிக்கு துவங்கி தேவஸ்தான வெப்சைட்டில் முன்பதிவு முறையில் பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி சென்று திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தாலே வாழ்வில் மாபெரும் திருப்பம் உண்டாகும் என்பது ஐதீகம். அதனால் தான் அரசியல்வாதிகளும், விஐபிக்களும், ஏழை, நடுத்தர மக்களும், பணக்காரர்களும் ஏழுமலையானை மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

Tirupati Elumalayan temple October month Anga Pradakshinam quota will be released on July 24

சாதாரண மக்கள் வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். இதனிடையே விஐபி தரிசன டிக்கெட்டில் பல ஆயிரம் கொடுத்து புக் செய்து ஏழுமலையானை தரிசனம் செய்பவர்களும் இருக்கின்றனர்.

அக்டோபர் மாதம் ஏழுமலையானை வழிபடுவதற்கு தேவையான ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கட்டுகள் இம்மாதம் 24ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா 10,000 ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் ஆன விஐபி பிரேக் தரிசன டிக்கெட் ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி டிக்கெட் வாங்கி விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை அக்டோபர் மாதம் வழிபட விருப்பமுள்ள பக்தர்கள் இம்மாதம் 24ஆம் தேதி காலை 11 மணி முதல் தேவஸ்தான வெப்சைட்டில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி திருமலை ஏழுமலையானை நாம் தரிசிக்கும் முன் திருச்சானுரில் உள்ள பத்மாவதி தாயாரை தான் முதலில் தரிசிக்க வேண்டும். பத்மாவதி தாயாரை தரிசித்த பிறகு திருமலைக்கு சென்று பெருமாளை தரிசிப்பதால் விசேஷ பலன் கிடைக்கும் . திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார். கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை நீங்குவதோடு சந்ததி விருத்தி உண்டாகும்.

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பல மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம் அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டடுள்ளனர். அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம்.

ஒவ்வொரு தமிழ் மாதம். தமிழ் மாதம் முதல் திங்கட்கிழமை அன்று,காலை நேரத்தில், ஏழுமலையானை வழிபட்டால் கண்டிப்பாக வாழ்வில் நடக்கும் பல அற்புதங்களை கண் கூடாக பார்க்க முடியும்.12 மாதங்கள் இதனை கடைபிடிக்க வேண்டுமாம். தை மாதம் தொடங்கி மார்கழியில் முடிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் படிப்படியாக சென்று வர கண்டிப்பாக செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்துள்ளது.
ஜாதகத்தில் சந்திர தசை மற்றும் சந்திர புக்தி நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு ஏழுமலையான் ஆலயம் சிறந்த பரிகார தலமாகும். திருமலையில் திங்கட்கிழமை இரவு தங்குவது சிறப்பாகும்.

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு வங்கி கவுண்டர் மூலம் தினமும் குலுக்கல் முறையில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம் ஆகியவை உள்ளிட்ட கட்டண சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. பக்தர்கள் தங்களுடைய மொபைல் எண், ஈமெயில் ஐடி ஆகியவற்றை குறிப்பிட்டு குலுக்களில் பங்கு பெறலாம். டிக்கெட்களை ஒதுக்கீடாக பெரும் பக்தர்களுக்கு அது தொடர்பான தகவல் குறும் தகவலாக அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் பக்தர்கள் வங்கி கவுண்டரில் நேரடியாக பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்று கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் டிக்கெட்டுகளை ஒதுக்கீடாக பெரும் பக்தர்களின் மொபைல் எண்ணுக்கு பேமென்ட் லிங்க் ஒன்றை அனுப்பி அதன் மூலம் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளும் வசதியை தேவஸ்தான நிர்வாகம் சோதனை அடிப்படையில் இன்று முதல் திருப்பதி மலையில் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

அந்த பேமென்ட் லிங்க் மூலம் பக்தர்கள் தங்களுடைய யு பி ஐ ஐ டி, நெட் பேங்கிங், கிரெடிட் கார்ட்,டெபிட் கார்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பணம் செலுத்தலாம். பணம் அனுப்பியவுடன் பக்தர்களின் ஈமெயில் ஐடிக்கு டிக்கெட் வந்து சேரும். பின்னர் பக்தர்கள் அந்த டிக்கெட்டை பிரிண்ட் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம். சோதனை அடிப்படையில் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் சரியான பலனை அளித்தால் தொடர்ந்து விஐபி பிரேக் தரிசன டிக்கெட்களுக்கும் இதே நடைமுறையை அமலுக்கு கொண்டுவர தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இதனிடையே ஏழுமலையானுக்கு அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்த விரும்பும் பக்தர்களுக்கு வரும் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு டிக்கெட் ரிலீஸ் செய்யப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+