பாத்ரூமில் இந்த 1 பொருள் வைத்தாலே போதும்.. பணக்கஷ்டம் நீங்குமாம்.. கழிவறையின் பெஸ்ட் வாஸ்து டிப்ஸ்
சென்னை: வீடுகளில் கழிவறைகளை எப்படி அமைக்கலாம்? எந்த திசையில் அமைக்க கூடாது? கழிவறைகளில் பயன்படுத்தக்கூடாத பொருட்கள் என்னென்ன? என்பது குறித்தெல்லாம் வாஸ்து சாஸ்திரத்தில் ஏற்கனவே விரிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது.. எனினும், குடும்பத்தில் கஷ்டம் சேராமல் இருக்க வேண்டுமானால், எளிய பரிகாரம் ஒன்றை செய்தால் போதும். அது என்ன?
வாஸ்து சாஸ்திரத்தை கடைப்பிடித்து, சொந்தமாக வீட்டை கட்டி குடியேறும்போது அந்த வீட்டில் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும், செல்வமும் நிறைந்து இருக்கும் என்பார்கள்.. ஆனால், வாடகை வீடுகளில் நம் விருப்பம்போல் எதிர்பார்க்க முடியாது.
எனினும் சிலவற்றையாவது, வாஸ்து சாஸ்துவில் உள்ளதை போலவே கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.. அந்தவகையில், வீட்டிலுள்ள ஒவ்வொரு அறைக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். இதில் கழிவறை, குளியலறையையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

கழிவறை: கன்னி மூலை எனப்படும் தென் பகுதியில் வீட்டின் உள்ளேயும், வெளியேவும் கழிவறை கட்டக் கூடாது என்பார்கள்.. வீட்டின் மையப்பகுதி என்று சொல்லப்படும் பிரம்மஸ்தானத்திலும் கழிவறை அமைக்ககூடாது. வடகிழக்கு என்று சொல்லக்கூடிய ஈசான்ய மூலையில் வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் கழிவறை அமைக்கக்கூடாது.. வீட்டிற்குள் நுழையும் கதவுக்கு நேராகவும், சமையலறை, பூஜையறை பக்கத்திலும் கழிவறை அமைக்கக்கூடாது.
அதேபோல, எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்துள்ள உடைந்த கண்ணாடிகளை பாத்ரூமில் பொருத்தி வைக்கக்கூடாது. உடைந்த பக்கெட்டுகள், ஈரமான துணிகள், அழுக்கு படிந்த துணிகள், வைத்திருந்தாலும் வாஸ்து தோஷத்தையும், சூரிய தோஷத்தையும் ஏற்படுத்திவிடுமாம்.. காலி பக்கெட்டுகளாக வைக்காமல், அவைகளில் எப்போதுமே தண்ணீர் நிறைந்து இருக்கும்படி செய்ய வேண்டும். கழிவறைக்குள் வைக்கும் செடிகள் வாடிவிடவே கூடாது என்றெல்லாம் வாஸ்துவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குளியலறை: இந்நிலையில், போபாலை சேர்ந்த ஜோதிடர் வாஸ்து ஆலோசகர் பண்டிட் ஹிதேந்திர குமார் ஷர்மா, குளியலறையை எப்படி வைத்து கொள்ள வேண்டும் என்பது பற்றி விரிவாக பேசியிருந்தார்.
அதில், "வாஸ்து தோஷத்தைக் குறைக்க, குளியலறையைப் பயன்படுத்திய பிறகு, அது முற்றிலும் உலர்ந்திருக்க வேண்டும். இப்படி செய்வதால் வாஸ்து தோஷம் ஏற்படாது. ஒரே இடத்தில் குளியலறை, கழிப்பறை இரண்டையும் கட்டினால், அதுவும் வாஸ்து தோஷத்திற்கு வழிவகுக்கும். உடல்நல பாதிப்பையும் குடும்பத்துக்கு ஏற்படுத்திவிடும். எனவே, ஒரே இடத்தில் குளியலறை மற்றும் கழிப்பறை இருநதாலும், இரண்டிற்கும் நடுவில் திரை போட வேண்டும்.
பூச்சிகள்: அதேபோல, குளியலறையில் படிகாரம் ஒன்றை வைக்கலாம். இதனால், படிகாரத்தின் பயன்பாடு பண ஆதாயத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.,, அத்துடன் பூச்சிகள் குளியலறைக்குள் நுழையாது. எனவே, குளியலறையில் படிகாரம் வைப்பது வாஸ்துதோஷத்தை நீக்கும். ஆனால் இது யாரும் பார்த்திராத இடத்தில் தான் வைக்க வேண்டுமாம்.
இதே படிகாரத்தை, ஒரு கறுப்பு துணியில் கட்டி தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கெட்ட கனவுகள் வராது என்பார்கள்.. உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் வாஸ்து தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அதை நீக்க, 50 கிராம் படிகாரத்தை எடுத்து, வீட்டின் அல்லது அலுவலகத்தின் ஒவ்வொரு அறையிலும் அல்லது மூலையிலும் வைக்கலாம்.
படிகாரங்கள்: அதேபோல, வீட்டை துடைக்கும்போதும் படிகாரத்தை பயன்படுத்தலாம். சில சமயங்களில் குளிக்கும் தண்ணீரிலும் படிகாரத்தை சேர்க்கலாம்" என்று வாஸ்து ஆலோசகர் பண்டிட் ஹிதேந்திர குமார் ஷர்மா அறிவுறுத்துகிறார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications