ஏழுமலையான் பக்தர்களே.. போலிகளிடம் ஏமாறாதீர்கள்.. திருப்பதி தரிசனத்திற்கு புது வெப்சைட் செக் பண்ணுங்க
திருப்பதி: ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் டிக்கெட் புக் செய்வதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் புது இணைய தள பக்கத்தை தொடங்கியுள்ளது. போலி இணைய தள பக்கங்கள் அதிகரித்துள்ளதால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது இணைய தள பக்க முகவரியை புதிதாக மாற்றியுள்ளது.
ஏழுமலையான் தரிசனம்: திருப்பதி சென்று ஏழுமலையானை ஆண்டுக்கு ஒருமுறையேனும் தரிசனம் செய்ய வேண்டும் என்று லட்சக்கணக்கான பக்தர்கள் விரும்புகின்றனர். இலவச தரிசனத்திற்காக மணிக்கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதே நேரத்தில் விரைவு தரிசனத்திற்காக ஆன்லைனில் 300 ரூபாய் டிக்கெட் முன் பதிவு செய்கின்றனர்.

ஆன்லைன் தரிசனம்: நான்கு மாதங்களுக்கு முன்பு டிக்கெட் புக்கிங் தொடங்கினாலும் பல பக்தர்களுக்கு கிடைப்பதில்லை. ஆன்லைனில் தரிசன டிக்கெட்கள் விற்பனை தொடங்கிய உடன் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. அதே போல அனைத்து சேவா டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலமே புக் செய்யப்படுகிறது. சிலருக்கு அதிர்ஷ்ட குலுக்கல் மூலமும் சேவா டிக்கெட் கிடைக்கும். சுப்ரபாத சேவை தொடங்கி சகஸ்ரநாம தீப அலங்கார சேவை வரைக்கும் ஆன்லைன் மூலமே புக் செய்ய முடியும்.
என்னென்ன சேவைகள்: அதே போல இலவசமாக புக் செய்யும் அங்கபிரதட்சணம், மூத்த குடிமக்கள் தரிசனம் என அனைத்திற்குமே ஆன்லைனில் டிக்கெட் வெளியாகும். இது தவிர தரிசனத்திற்காக பக்தர்கள் தங்கும் அறைகளையும் ஆன்லைன் மூலமே புக் செய்ய முடியும். ஆன்லைன் தரிசன டிக்கெட், தங்கும் அறைகள் அனைவருக்குமே கிடைப்பதில்லை.
ஏமாறும் பக்தர்கள்: இதனையடுத்து மோசடி கும்பல் சிலர், தேவஸ்தானம் பெயரில் போலி இணைய தளங்கள் தொடங்கி பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு போலி டிக்கெட் விற்பனையில் ஈடுபடுகின்றனர். இந்த மோசடி கும்பலிடம் ஏமாறும் பக்தர்கள் பணத்தை இழந்து தரிசனமும் செய்ய முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கடந்த ஆண்டு 19 போலி இணையதளங்களைக் கண்டறிந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் போலீஸில் புகார் அளித்து அந்த இணைய தளங்களை முடக்கின.
போலிகள் முடக்கம்: அதன்பிறகும் சிக்கல் உருவானது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 40 இணைய தளங்களுக்கும் மேலாகப் போலிகள் என அடையாளம் கண்டு அவற்றை முடக்க திருப்பதி தேவஸ்தானம், சைபர்கிரைம் போலீஸில் புகார் அளித்தது. அதோடு திருமலை திருப்பதி தேவஸ்தானம், தன் இணைய தளத்தின் வடிவத்தையும் முகவரியையும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிதாக மாற்றியது.
அச்சு அசலாக போலி: உடனே, பழைய இணைய தள வடிவிலேயே ஒரு போலி இணையதளத்தைத் தொடங்கிவிட்டனர் சமூக விரோதிகள். இணையத்தின் முகவரியையும் தேவஸ்தான இணைய முகவரிபோலவே வைத்துள்ளனர். அதாவது தேவஸ்தான இணைய முகவரி : tirupatibalaji.ap.gov.in என்று கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாற்றப்பட்டது. இதனையடுத்து போலியான இணைய முகவரி tirupatibalaji-ap-gov.org தொடங்கப்பட்டது. இதில் கடைசி .in என்பதை .org என்று மாற்றி இணைய தளம் தொடங்கியிருக்கிறார்கள்.
அதிகரிக்கும் போலிகள்: இது தொடர்பாகப் பல பக்தர்கள் தேவஸ்தானத்திடம் புகார் தெரிவித்ததின் அடிப்படையில் இந்த இணைய தளத்தை முடக்குமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சைபர் கிரைம் போலீஸிடம் புகார் அளித்துள்ளனர். சைபர் கிரைம் போலீஸார் இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்டு உடனடியாக இணைய தளங்களுக்கான டொமைன் வழங்கும் godaddy நிறுவனத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதன்படி உடனடியாக இந்த இணையத்தைத் தடை செய்ய வேண்டும். போலியான இந்த இணையதளம் யார்மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது... அதற்குப் பணம் எவ்வாறு செலுத்தப்பட்டுள்ளது ஆகிய விவரங்களைக் கேட்டுள்ளனர்.
புது இணைய தள முகவரி: இந்த நிலையில் தற்போது மீண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இணைய தள பக்கம் மாற்றப்பட்டுள்ளது. https://ttdevasthanams.ap.gov.in என்ற பெயரில் புது பொலிவுடன் தொடங்கப்பட்டுள்ளது. ஏழுமலையான் பக்தர்கள் போலிகளை கண்டு ஏமாறவேண்டாம் உண்மையான இணைய தள பக்கத்திற்கு சென்று பணம் செலுத்தி தரிசன டிக்கெட் பெற்றுக்கொள்ளுங்கள்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications