டிசம்பரில் திருப்பதி செல்ல பிளானா? ரூ 300 டிக்கெட்டுகள் தீர்ந்தாலும் இன்று காலை 10 மணிக்கு பெறலாமே

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதிக்கு டிசம்பர் மாதம் போற பிளான் இருக்கா, அப்போ ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் புக்கிங் முடிந்தாலும் கிடைக்குமே. இன்று சரியா 10 மணிக்கு ரெடியா இருங்க.

திருமலை திருப்பதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அது போல் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். இந்த நிலையில் ஏழுமலையானை தரிசிக்க மாதந்தோறும் 24 ம் தேதி ரூ 300 தரிசன டிக்கெட்டுகளும் சேவா டிக்கெட்டுகளும் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

tirupati spirtuality tirumala

அதாவது 90 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால் மட்டுமே ஏழுமலையானை கட்டண தரிசனத்திலோ சேவையிலோ தரிசிக்கலாம். இல்லாவிட்டால் நடைபாதை தரிசனம் அல்லது இலவச தரிசனத்தில்தான் செல்ல முடியும்.

இந்த நிலையில் 2024-ஆம் ஆண்டுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தது. அது போல் ஜனவரி மாதத்திற்கும் டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான டிக்கெட்டுகளின் அட்டவணை கடந்த 21 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் நேற்று வெளியானது. மொத்தம் 4.09 லட்சம் டிக்கெட்டுகள் ரிலீஸ் செய்து அத்தனையும் 10 நிமிடங்களுக்குள்ளாக விற்றுத் தீர்ந்தன. இதைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு அறைகள் புக்கிங் தொடங்கியது.

அதிலும் 37 ஆயிரத்து சொச்சம் எண்ணிக்கையிலான அறைகள் திருமலையில் மட்டும் ரிலீஸ் ஆனது. அவையும் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. எனவே இனி திருப்பதிக்கு செல்ல வேண்டுமானால் இலவச தரிசனம், இலவச தரிசன டோக்கன், நடைபாதை தரிசனம் போன்றவற்றில்தான் செல்ல வேண்டும் என நீங்கள் நினைத்தால் தவறு.

tirupati tirumala

டிசம்பர் மாதம் ரூ 300 தரிசன டிக்கெட்டில் செல்லலாமே! எப்படி தெரியுமா? அதாவது ஸ்ரீனிவாச திவ்ய அனுகிரக விசேஷ ஹோமம் என்பது அலிபிரி அருகே இருக்கும் கோயிலில் நடைபெறும். இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஆன்லைனில் புக் செய்ய வேண்டும். இதற்கு ஒவ்வொரு மாதமும் 24 அல்லது 25 தேதிக்கு பிறகு புக்கிங் செய்யப்படுகிறது. ரூ 1600 செலுத்தி ஹோமத்தில் கலந்து கொள்ளலாம். ரூ 1000 ஹோமத்திற்கு போக மீதமுள்ள ரூ 600 இல் இரு ரூ 300 சிறப்பு தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இந்த ஹோமத்தில் கண்டிப்பாக கலந்து கொண்டால் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஹோமமானது தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது.

அந்த வகையில் இந்த ஹோமத்திற்கான டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. இந்த டிக்கெட்டுகளை புக் செய்து கொண்டால் டிசம்பர் மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் கிடைக்கும். இவற்றை கொண்டு நீங்கள் செல்லும் தினத்தில் மாலை 3 மணிக்கு நேராக ரூ 300 தரிசனத்திற்கு செல்லும் வரிசையில் நின்றுவிடலாம். சீக்கிரம் தயாராகுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+