தப்பித் தவறியும் துளசியை இப்படி பறிக்காதீங்க.. பணம், மகிழ்ச்சிக்கு துளசி இலையின் பரிகாரம்.. சிறப்பு
சென்னை: வீட்டுக்குள் ஆரோக்கியமும், செல்வமும் தழைக்க வேண்டுமானால், ஒரு சில செடிகளை வளர்க்க வேண்டும் என்பார்கள்.. அதிலும் மூலிகை செடிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இயல்பாகவே, மரம், செடிகள் வீட்டை சுற்றியிருந்தாலேஆரோக்கியம் பெருகும்.. சுத்தமான காற்று கிடைப்பதுடன், காற்றிலுள்ள மாசுக்களும் நீஙகிவிடும். அதனாலேயே வீட்டிற்குள்ளும், வீட்டை சுற்றிலும் சிலவகையான தாவரங்களை வளர்க்க சொல்கிறார்கள். அதில் மிக முக்கியமானது துளசி.
ஆன்மீகத்தில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது துளசி செடிகள.. இந்து மத நம்பிக்கையின்படி ஒருவர் தன்னுடைய வீட்டின் முற்றத்திலோ, தோட்டத்திலோ துளசிச்செடியை நட்டு வைத்தால், அந்நபரின் பூர்வஜென்ம பாவங்கள் முற்றிலும் விலகிவிடுமாம்.. செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியின் உறைவிடமாக இந்த துளசி விளங்குகிறது.

துளசி செடிகளின் மகத்துவம்
வீட்டில் துளசியை வளர்ப்பது நிதி நெருக்கடியை தீர்த்து மன மகிழச்சியை தரும் என்று நம்பப்படுகிறது. துளசியின் வாசனை வீட்டையே சுற்றி சுற்றி வரும்போது, எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் வெளியேறி, பாசிட்டிவ்வான ஆற்றல் வீடு முழுவதும் கிடைக்கும்.
துளசிச் செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றி வந்தாலே கஷ்டங்கள் விலகும்.. துளசி செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றுவது ஆன்மீக ரீதியாக நல்ல விஷயம்தான். ஆனாலும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஏகாதசியில் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்ற கூடாது என்பார்கள்.. இந்த நாட்களில் துளசி இலைகளை பறிக்க கூடாது.
நிதி சிக்கல்கள் தீரும்
நீண்ட காலமாக குடும்பத்தில் பிரச்சனை இருந்தால், நான்கைந்து துளசி இலைகளை கழுவி, தண்ணீர் நிறைந்த ஒரு பித்தளை பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். தினமும் காலை குளித்ததுமே, அந்த தண்ணீரில் வாசலை தெளித்து வரவேண்டும். இதனால் வீட்டிலுள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகும்..
அதேபோல, அமாவாசையில் குளிர்ந்த நீரில், துளசி மரத்துண்டை போட்டு சிறிது நேரம் கழித்து, அந்த மரத்துண்டை வெளியே எடுத்து ஒரு சுத்தமான இடத்தில் வைத்துவிட்டு, அந்த தண்ணீரில் குளிக்கலாம்.
உலர்ந்த துளசி இலைகளும் மகத்துவம் நிறைந்தவை.. சில காய்ந்த துளசி இலைகளை சுத்தமான சிவப்பு நிற துணியில் கட்டி, பீரோ அல்லது பணப்பெட்டியில் வைத்தால், மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். கிரகத்தில் தோஷம் இருந்தால், துளசியின் வேர் எடுதது, ஒரு சிவப்பு நிற துணியில் கட்டி வைக்கலாம். கையில் தாயத்து இருந்தால், தாயத்திலும் வைத்து அதனை கையில் கட்டிக் கொள்ளலாம். இதனால் தோஷங்கள் நீங்கும் என்பார்கள.
துளசி பூக்கள் தரும் நன்மைகள்
வீட்டில் யாராவது நீண்ட காலமாக படுக்கையில் நோய்வாய்ப்பட்டிருந்தால் அல்லது அடிக்கடி நோயில் அவதிப்பட்டால், அவர்களின் ஆரோக்கியத்துக்கு துளசி பூக்கள் உதவுகின்றன.
அதேபோல நீண்ட காலமாக இன்னலிலும், துன்பத்திலும் அவதிப்பட்டு வரும்போது, திடீரென துளசி பூக்கள் பூத்தால், உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீரப்போகிறது என்று அர்த்தம்.. அந்தவகையில், துளசி பூக்கள் பூத்துவிட்டால், நீங்கள் கையிலெடுக்கும் வேலை, துரிதமாகவும், வெற்றிகரமாகவும் அமையும் என்பது ஐதீகம். அதேபோல வீட்டில் மகிழ்ச்சிகரமான சம்பவம் நடக்க போகிறது என்றும் பொருள்..
துளசி பூக்களை பறித்துவிட்டால் கீழே போடாமல் ஒரு சிவப்பு துணியில் சுற்றி கோவிலும் வைக்கலாம். அல்லது வீட்டின் கிழக்கு திசையில் வைக்கலாம். இதனால் வீட்டின் நிதி நிலைமை சீராகும்.. துளசி பூக்களை குளிக்கும் நீரில் போட்டால், வாஸ்து தோஷங்கள் நீங்கி நிவாரணம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications