இறந்தவர்களின் ஆன்மா சாந்தி.. வீட்டில் கஷ்டம் தீர உதவும் துளசி மஞ்சரி பரிகாரம்! துளசி இலை தரும் நன்மை
சென்னை: ஆன்மீகத்தில் துளசியின் முக்கியத்துவம் என்ன? துளசி மஞ்சரி பரிகாரம் என்றால் என்ன? துளசி செடியை எவ்வாறு பாதுகாப்பது? இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய துளசியில் என்ன பரிகாரம் செய்யலாம்? ஒன்றுக்கு மேற்பட்ட துளசியை வீட்டில் வளர்க்கலாமா? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பாப்போம்.
திருமாலின் மார்பில் நீங்காது நின்றாடும் துளசியானது, எப்போதுமே தன்னுடனிருக்கும் பொருளின் மதிப்பை, பல மடங்கு பெருக்கக்கூடிய சக்தி கொண்டது.. கெட்ட சக்தியே என்றாலும், தோஷமே என்றாலும் அவைகளை சரிசெய்யும் தன்மை துளசிக்கு உண்டு..

எங்கெல்லாம் துளசி இருக்கிறதோ, அங்கெல்லாம் அமைதி, செல்வம் பெருகுமாம்.. துளசி இருந்தாலே, அது புண்ணிய தலமாக கருதப்படும். அகால மரணம், நாட்பட்ட நோய் போன்றவை அண்டாது..
துளசியின் மகிமை
கங்கை நீரில் துளசி இலையை கலந்து, வீட்டின் வடக்கு திசையில் வைத்துவிட வேண்டும்.. பிறகு இந்நீரை வீடு முழுவதும் தெளிக்கும்போது, துர்சக்திகள், நெகட்டிவ் ஆற்றல்கள் விலகிவிடும்.. கண் திருஷ்டி இருந்தாலும் விலகிவிடும்.
பரிகாரத்துக்கும் துளசி பயன்படுகிறது.. ஒருவரது ஜாதகத்தில் கிரக தோஷம் இருந்தால், துளசி வேர் வைத்து பரிகாரம் செய்யலாம்.
சிறந்த பரிகாரம்
இதற்கு வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை காலையில், சுத்தபத்தமாக குளித்து முடித்து துளசி செடியினை நன்றாக வேண்டி பிரார்த்திக் கொள்ள வேண்டும்.. பிறகு துளசியிலிருந்து வேர் எடுத்து, சிவப்பு நிற துணியில் கட்டி கைகளில் கட்டி கொள்ளலாம். அல்லது தாயத்து இருந்தால் அதிலும் வைத்து கட்டிக் கொள்வதால், கிரக தோஷங்கள் நீங்கும் என்பார்கள்.
அதேபோல, வீடு கட்டும்போது குறைகள் இருந்தால், துளசி செடியின் அடிப்பகுதியில் வெள்ளி அல்லது செம்பினால் ஆன நாணயத்தை புதைத்து வைக்கலாம். இதனால் இறந்தோர்களின் ஆன்மாவும் சாந்தியடையும் என்பது நம்பிக்கையாகும்.
ஒற்றைப்படை துளசி
அதேபோல, மஞ்சள் நிற துணியில், துளசி வேரினை கட்டி வீட்டு வாசலில் கட்டிவிட்டால், நிதி தொடர்பான சிக்கலிலிருந்து விடுபடலாம். இதனால் வீட்டிடிலுள்ள எதிர்மறையான ஆற்றல்களும் வெளியேறிவிடும்.. துளசியின் வேர், அரிசி இரண்டையும் சிறிது எடுத்து, சிவப்பு நிற துணியில் கட்டி வாசலில் கட்டிவிடுவதால் கிரக தோஷங்களில் இருந்து மெல்ல விடுபடலாம்.
துளசி இலைகள் மற்றும் துளசி மஞ்சரி அதாவது துளசி பூக்களை, விஷ்ணுவுக்கு அர்ப்பணித்தால், வருமானம் பெருகுமாம்.
கிழக்கு திசையில் துளசிச்செடி வளர்க்கலாம்.. அல்லது வடகிழக்கு திசையில் வைக்கலாம். வடகிழக்கிலும் வளர்க்க முடியாவிட்டால் வடதிசையில் துளசிச்செடியை வளர்க்கலாம். ஆனால் தெற்கு திசையில் வளர்க்கக்கூடாது.
பெஸ்ட் திசை
துளசி மாடம் வைப்பதாக இருந்தால், ஈசானிய திசையில் வடகிழக்கு திசை அல்லது வீட்டின் முற்றம் அல்லது தோஷம் இல்லாத இடத்தில் வைக்கலாம்.
எக்காரணம் கொண்டும், கழிவறை, சமையலறை, படிக்கட்டுகளுக்கு அடியில், , தாழ்வான இடங்களில் துளசியை வைக்கக் கூடாது. இது குடும்பத்தின் வளர்ச்சியை, செழிப்பை தடுத்து நிறுத்திவிடுமாம். ஒன்றுக்கு மேற்பட்ட துளசி செடிகளை வைத்தாலும், 3, 5, 7 என்ற ஒற்றைப்படை எண்களில்தான் வைத்து வளர்க்கலாம்.
ஆனால் துளசி மாடத்தை வைக்கும்போது, அங்கு குப்பை அல்லது அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துளசி வளரும் இடத்தை சுத்தமாகவும், அமைதியாகவும் பராமரிக்க வேண்டும். துளசி செடிக்கு விளக்கேற்றி வழிபடுவது மிகவும் நல்லது..












Click it and Unblock the Notifications