யோகம் தரக்கூடிய வாஸ்து டிப்ஸ்கள்.. ஈசான்ய மூலை காலியா இருக்கா? வீடு, மனை வாங்கும்போது இதை கவனியுங்க
சென்னை: வீடு மனை கட்டிடப்பணிகள் சிறப்பாக அமைய வேண்டுமானால், வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்க வேண்டுமானால், வீடு, மனை வாங்கும்போது, சில முக்கிய விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள்.
வீடு, மனை வாங்க வேண்டும் என்பது பலருக்கும் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது.. எப்பேர்பட்டாவது முதலில் மனையை வாங்கிவிட்டால், அதற்கு பிறகு, படிப்படியாக வீட்டை கட்டி விடலாம் என்பதும் கனமான நம்பிக்கையாக இருந்து வருகிறது.

பாடுபட்டு பணம் சேர்த்து வீட்டு மனையை வாங்கும்போது, அதை தேர்வு செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.. நல்ல மனை அமைவதுதான், வளமான வாழ்க்கைக்கு அடிப்படையாகும்..
அந்தவகையில், கிழக்கு மனைகள், வடக்கு மனைகள், தெற்கு மனைகள், நைருதிய மனைகள், மேற்கு மனைகள், வாயுவிய மனைகள் என எட்டு வகையான மனைகள் இருக்கின்றன. இவைகளில் எந்த மனைகளை தேர்ந்தெடுத்தாலும், மனையின் பொதுத் தன்மை, சிறப்புத் தன்மையை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட மனையின் மேடு பள்ளங்களையும் நன்கு அறிய வேண்டும்.
வடக்கு பள்ளம்: குறிப்பாக, மனையானது தெற்கே உயர்ந்து வடக்கே பள்ளமாக இருக்கவேண்டும். அதேபோல, மேற்கு உயர்ந்து, கிழக்கு பள்ளமாக இருக்க வேண்டும்.,. அதாவது, நைருதியம் உயர்ந்து ஈசான்யம் பள்ளமாக இருப்பது கூடுதல் சிறப்பு கொண்ட மனைகளாகும்.. தென்மேற்கு மூலை 90 டிகிரி சரியாக இருக்க வேண்டும். வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும்.
மற்றபடி, கிழக்கு உயர்ந்து மேற்கு சரிவாக இருந்தால், குடும்ப தலைவருக்கு சிக்கல் வந்துவிடுமாம். உடல்நல பாதிப்பு, பொருளாதார தடங்கல், இளைய மகனுக்கு கல்வியில் மந்தம் இப்படி பல்வேறு பாதிப்புகள் வரலாம். அதேபோல, வடக்கு உயர்ந்து தெற்கு சரிவாக இருக்கக்கூடாது. அப்படி அமைந்துவிட்டால், குடும்பத்தில் பெண்ணுக்கு உடல்நல பாதிப்பு, மகளுக்கு செலவுகள், சண்டைகள், பகைகள் ஏற்படலாம். கிடைக்கக்கூடிய கடனுதவி உட்பட எதுவுமே கிடைக்காமல் போய்விடுமாம்.
செவ்வகம், சதுரம் வடிவம்: மொத்தத்தில், ஒரு மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டிடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் அவசியம்... மனை இடத்தின் தெருக்குத்து மற்றும் தெரு தாக்கம் இருக்கக்கூடாது. கட்டிடம் கட்டும்போது தெற்கு மற்றும் மேற்கு பகுதியைவிட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல் வேண்டும்.
வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம். மழைநீர் ஈசானிய மூலை வலியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருந்தால் குடும்பத்துக்கு நல்லது. வீட்டுக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது.
கோபுரத்தின் நிழல்: அதேபோல, மனையின் எதிரில் ஒற்றை பனைமரம், கிணறு, ஆலமரம் எருக்கன் செடி, இல்லாமல் இருக்க வேண்டும்... கோவில் கோபுரத்தின் நிழல், அல்லது ஸ்தூபியின் நிழலோ மனை மீது விழக்கூடாது.. பாம்பு புற்று, ஆமையின் ஓடு, உடும்பின் சடலம் போன்றவையும் மனையில் இருக்க கூடாது. பெருமாள் கோவிலின் பின்புறம், சிவன் / கணபதி கோவில் முன் புறமும் வீடு கட்டவே கூடாது.
வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருந்தால் நல்லது... மனையில் வீடு கட்டும்போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில் கிணறு அல்லது பம்ப் அமைத்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தலாம்.. ஆனால், வீட்டின் நடுவிலோ அல்லது மற்ற திசைகளிலோ அமையும் கிணறு, பம்ப் கெடுதலையே தரும்.
ஈசானிய மூலை: ஈசானிய மூலை காலியாக இருந்தால் பஞ்சபூத ஆற்றல் கிடைக்கும்.. வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள் இருக்கலாம்.. ஆனால், அவைகள் இரட்டைப்படையில் இருக்கும்படி பார்த்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications