அழகென்ற சொல்லுக்கு முருகா! வைகாசி விசாகம் எப்போது? குழந்தை வரம் கிடைக்க என்ன விரதம் இருக்க வேண்டும்?
சென்னை: வைகாசி விசாகம் எப்போது என்பது குறித்தும், அன்றைய தினம் குழந்தை வரம் கிடைக்க விரதம் இருப்பது எப்படி என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம். முருகனுக்கு உகந்த நாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.
வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் ஆகும். அன்றைய தினம் தான் அவர் அவதரித்தார். வைகாசி என்ற பெயரில் புண்ணிய தலமான காசி என்பதும் வருவதால் அந்த மாதத்தில் காசிக்கு சென்று வருவது சிறப்பானதாக சொல்லப்படுகிறது.

காசிக்கு சென்று கங்கையில் புனித நீராட முடியாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு. வைகாசி பவுர்ணமியில் சிவனுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்மராக கற்களால் ஆன மாலை அணிவித்து, எள் சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
இந்த வைகாசி விசாகம், முருகன் கோவில்களில் 10 நாட்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று, பல பக்தர்கள் பால்குடம், காவடிகளை ஏந்தி, கந்தனின் அருளைப் பெற சுப்பிரமணியர் கோயில்களுக்கு பாதயாத்திரை மேற்கொள்கிறார்கள்.
அறுபடை வீடுகள் மட்டுமின்றி பிற முருகன் ஆலயங்களுக்கும் ஏராளமானோர் சென்று வழிபடுவது உண்டு. இந்த வைகாசி விசாகம், ஜூன் 9 ஆம் தேதி, நாளை கொண்டாடப்படுகிறது. நாளை விசாக நட்சத்திரம் மாலை 4.40 மணி வரை உள்ளது. ஆனால் ஜூன் 10 ஆம் தேதி பகல் 12.27 மணிக்குதான் பவுர்ணமி திதி தொடங்குகிறது.
இதனால் ஜூன் 9ஆம் தேதி நாள் முழுவதும் விசாகம் நட்சத்திரம் உள்ளதால் வைகாசி விசாகத்திற்கு விரதம் இருப்பவர்கள், அன்றைய தினம் விரதம், வழிபாடு, பூஜைகளை மேற்கொள்ளலாம். வைகாசி விசாகத்தன்று சந்திரன் துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்திற்கு செல்லவிருக்கிறார்.
முருகன் கோவில்களில் பால் குடம் எடுப்பது, காவடி எடுப்பது போன்றவைகளை செய்வார்கள். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் பகை விலகும், துன்பம் நீங்கும். இந்த நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும்.
குழந்தை பேறு உண்டாகும். நம் குலம் தழைத்து விளங்கும். குழந்தை வரம் வேண்டுவோர் முருகனுக்கு சஷ்டியில் விரதம் இருப்பார்கள். ஆனால் அவர் அவதரித்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால், அடுத்த ஆண்டு வைகாசி விசாகத்திற்குள் நிச்சயம் குழந்தைப் பேறு ஏற்படும் என நம்பப்படுகிறது.
நாளை விரதம் இருக்க விரும்புவோர் நாள் முழுவதும் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாவிட்டால் ஒரு வேளை உணவ மட்டும் சாப்பிடலாம். பால், பழம் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு விரதம் இருக்கலாம். கந்த சஷ்டி கவசம் , திருப்புகழ் படிக்கலாம். எனவே இந்த வைகாசி விசாகத்தில் விரதம் இருந்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
Vaikasi Visagam: வைகாசி விசாகம் 2026! திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
வைகாசி விசாக திருவிழா: உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில்.. கடல் மண் சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications