வீட்டில் இந்த திசையில் மட்டும் பீரோவை வைத்து விடாதீர்கள்..பணம் காற்றாய் கரையுமாம்.. வாஸ்து டிப்ஸ்!
சென்னை: பஞ்சபூதங்களின் அம்சம் நிறைந்தது வீடு. சக்தி நிறைந்த வீட்டில் செல்வமும் அதிர்ஷ்டமும் சேர்ந்தே வரும். அந்த வீட்டில் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். பஞ்சபூத சக்திகள் நிறைந்த வீட்டில் பணம் சரளமாக வரும். வாஸ்து குறை உள்ள வீட்டில் கஷ்டங்களும் சங்கடங்களும் மட்டுமே வரும் பணம் வரவே வராது. வீட்டில் உள்ள குறைகளை நீக்கினால் செல்வம் தாராளமாக வரும். நம்முடைய வீட்டில் பணம் வைக்கும் பீரோவை எந்த திசையில் வைக்கலாம் எந்த திசையில் வைக்கக்கூடாது என்று பார்க்கலாம்.
வளம் தரும் வாஸ்து: நாம் வசிக்கும் வீடு என்பது அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ முடியும். பணம் குறைவின்றி வரும். சிலரது வீட்டில் கடன்கள் அதிகமாகும் விரைய செலவுகள் ஏற்படும். இதற்குக் காரணம் வாஸ்து குறைபாடுதான். ஒருவரின் வீட்டின் பீரோவில் வைத்த பணம் செலவு ஆகாது. ஒருவரின் வீட்டின் பீரோவில் வைத்த பணம் வைத்த வேகத்தில் காணாமல் போகும். நாம் வசிக்கும் வீட்டை அதிர்ஷ்டகரமானதாக மாற்றினால் பணம் குறைவின்றி வரும். நோய் நொடிகள் எதுவும் இன்றி சந்தோசமாக வாழலாம். வீட்டின் மூலைப்பகுதி சரியாக அமைந்து அந்த மூலையில் சரியான பொருட்களை வைத்தால் செல்வம் பெருகும் என்று பார்க்கலாம்.

குபேரன் பார்வை: பணம் எல்லோருக்கும் முக்கியம். வசதியாக சேர்த்து வைப்பதற்கு வருவதை விட தினசரியும் செலவு செய்ய குறைவு இன்றி பணம் கிடைக்க நடு வடக்கு நன்றாக இருக்க வேண்டும். அங்கே எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாது. சமையலறை, படிக்கட்டு எதுவும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பணம் வருவது தடைபடும். குபேரன் பார்வை தெளிவாக விழும் பகுதி அதுதான். அந்த பகுதி அடைபட்டால் பணம் வருவது தடைபடும்.
எதிர்மறை எண்ணங்கள்: நம் வீட்டின் ஈசான்யம் எனப்படும் வடகிழக்கு மூலைப்பகுதி காற்றும் வெளிச்சமும் கொண்டதாக இருக்க வேண்டும். ஈசான்யம் எனப்படும் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய அந்த மூளைப்பகுதியில் படிக்கட்டு வந்தாலோ அந்த வீடு சரியிருக்காது. நைருதி மூலை. சேகரிப்பு இடம். அந்த பகுதியில் நுழைவு இருக்கக்கூடாது. திறப்பு இருந்தால் அதை முதலில் அடைக்க வேண்டும். தென்மேற்கு மூலையில் வாசல் வரக்கூடாது. எதிர்மறையான எண்ணங்களை கொடுக்கும்.
பணம் பெருக: வடக்கு குபேர மூலை. தென்மேற்கு கன்னி மூலை. குபேர மூலை வேறு. கன்னி மூலையில் பாரமான பொருள் வைக்கலாம். குபேர மூலை வடக்கு மூலை. வடக்கில் இருந்து பார்வையிடுவார் குபேரன். இந்த இடத்தில் பீரோ வைத்து பணம் வைத்தால் செல்வம் பெருகும். வடக்கு நோக்கி பீரோ வைத்தால் குபேரன் பார்வை கிடைக்கும் எதிர்பாராத அளவிற்கு பணம் நகை கிடைக்கும். குபேர மூலை முக்கியமானது.
பீரோ வைக்கும் இடம்: பணம் வைக்கும் பீரோவை எப்போது வடக்கு திசை அல்லது கிழக்கு திசை பார்த்துதான் வைக்க வேண்டும். வடக்கு, கிழக்கு பார்த்து வைத்த பீரோவில் வைத்து நகை பணம் வைக்கலாம். வடக்கு மத்தி சரியான இடம். இந்த பகுதியில பீரோ வைத்து நகை, பணம் வைக்கலாம். கஜானா வைக்கலாம். திரும்ப திரும்ப பணம் வரும்.
பணம் வரும் திசை: வடக்கு திசையில் நடு பகுதியில் வடக்கு பார்த்து பீரோ வைக்கவும். வருமானம் அதிகம் இருக்கும். தெற்கு பார்த்த வீடு. கிழக்கை ஒட்டிய வடக்கு பகுதியில் வைக்கலாம். தென் மேற்கு பீரோ வைக்க சொல்வார்கள். அது ஸ்டோர் ரூம். அதிர்ஷ்டம் தரக்கூடியது வடக்குதான். மேற்கு பார்த்த வீடு, கிழக்கு பார்த்த வீடு இது சரியாக இருக்கும். கிழக்கு ஒட்டிய பகுதியில் பீரோ வைக்கலாம்.
பணம் வர டிப்ஸ்: பீரோவிற்குள் தங்க தகடு சேர்த்த பிரமீடு, வெள்ளியில் செய்த பிரமீடு, புதன்கிழமை வியாழன் வெள்ளி கிழமைகளில் பீரோவிற்குள் வைக்கலாம். நிறைய அதிர்ஷ்டத்தை தரும் பாசிட்டிவ் எனர்ஜியை தரும். லட்சுமி படம் போட்ட தங்க நாணயங்களை வைக்கலாம். பணம் பெருகும். குபேர சிலையை பணப்பெட்டிக்குள் வைக்கலாம். அப்படி வைத்தால் பணம் வரும்.
காற்றாய் கரையும் பணம்: தென்மேற்கு படுக்கை அறையில் வைக்கும் பீரோவில் உடைகள் வைக்கலாம். தெற்கு பகுதியில் பீரோ வைக்கலாம் பணம் சேரும். வடமேற்கு பகுதியில் பீரோ வைக்கக் கூடாது பணம் காற்று போல போய்விடும். வீட்டில் சமையல் செய்யும் அக்னி மூலையில் கஜானா வைத்தால் பணம் எரிந்து போகும். செலவு அதிகம் வரும். சமையல் அறைக்குள் பணம் சேமிக்கும் பீரோவை வைக்கக் கூடாது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications