குளியலறையில் இதை மட்டும் வெச்சு பாருங்க.. வீட்டில் பணப்பிரச்சனை வரவே வராது! கழிப்பறை வாஸ்து பரிகாரம்
சென்னை: நாம் வாழும் வீட்டின் ஹாலிலிருந்து படுக்கையறை, வாழ்க்கை அறை, படிக்கும் அறை, சமையலறை, குளியலறை வரை சரியான திசையில் அமையப்பெறுவது வாஸ்துவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.. ஒருவேளை வீட்டிலுள்ள பொருள்களில் ஏதேனும் தவறான திசையில் இருந்தால் வாஸ்து தோஷம் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.. அந்தவகையில், சென்னை கழிவறைகளில் சில பொருட்களை எக்காரணம் கொண்டும் வைக்கக்கூடாதாம். இதனால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது என்றும் எச்சரிக்கிறார்கள். இதுகுறித்து சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
கழிப்பறை சரியான வாஸ்து முறைப்படி அமைக்காவிட்டால் காரிய தடைகள், பதட்டம், விபத்துகள், உடல்நலம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

எப்போதுமே குளியலறை வீட்டின் வடக்கு அல்லது வடமேற்கு மூலையில் இருக்க வேண்டும்.. எக்காரணம் கொண்டும், தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் குளியலறையை அமைக்கவே கூடாது..
கிச்சனுக்கு எதிரே அல்லது அதற்கு அடுத்ததாக குளியலறை இருக்கக்கூடாது.. கிழிந்த பாய், பயன்படுத்தாத செருப்புகளை குளியலறையில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.. இதனால் எதிர்மறை ஆற்றலை வீட்டுக்குள் வந்துவிடும் என்பார்கள்.
படிகாரம் பரிகாரம்
இந்நிலையில், போபாலைச் சேர்ந்த ஜோதிடர் வாஸ்து ஆலோசகர் பண்டிட் ஹிதேந்திர குமார் ஷர்மா, குளியலறை வாஸ்து குறித்து பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருக்கிறார்..
அதில், குளியலறையை பயன்படுத்தி பிறகும்கூட, ஈரமாக வைத்திருக்கக்கூடாது.. இது வாஸ்து தோஷத்திற்கு வழிவகுத்துவிடும்.. நிதி நெருக்கடியையும் சந்திக்க நேரிடலாம்..
இந்த வாஸ்து தோஷத்தை குறைக்க, குளியலறையை பயன்படுத்திய பிறகு அது முற்றிலும் உலர்ந்திருக்கும்படி செய்ய வேண்டும். அதேபோல, வீட்டில் இடத்தை மிச்சப்படுத்த ஒரே இடத்தில் குளியலறை, கழிப்பறை கட்டினால், அதுவும் வாஸ்து தோஷத்திற்கு வழிவகுத்துவிடும்..
மேலும் ஆரோக்கிய குறைபாடுகளும் ஏற்படும். எனவே, ஒரே இடத்தில் குளியலறை, கழிப்பறையை தவிர்க்க வேண்டும். ஒருவேளை இரண்டுமே ஒன்றாக இருக்க வேண்டும்படி நேர்ந்துவிட்டால், இரண்டிற்கும் இடையே ஸ்கிரீன் போட வேண்டும்.
குளியலறையில் வாஸ்து
அதேபோல, குளியலறையில் படிகாரம் வைப்பது வாஸ்து குறைபாட்டை போக்க உதவும்.. இதனால் பூச்சிகளின் நடமாட்டமும் இருக்காது.. ஆனால், இந்த படிகாரத்தை யாரும் பார்க்காத இடத்தில் வைக்க வேண்டும். படிகாரம் வீட்டிற்குள் மகிழ்ச்சி மற்றும் அமைதி, செல்வத்தை பெருக்கக்கூடியது.
குளியலறை என்றில்லை, தூங்கும் முன்பு, கறுப்பு துணியில் படிகாரத்தை கட்டி தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கெட்ட கனவுகள் வராது.. இனம்புரியாத பயத்திலிருந்தும் விடுபடலாம்..
குளிக்கும் நீரிலும் படிகாரம்
அதேபோல, 50 கிராம் படிகாரத்தை வீடு அல்லது உங்களது சொந்த அலுவலகத்தின் ஒவ்வொரு அறையிலும் அல்லது மூலையிலும் வைக்கலாம்.. இதனால், திருஷ்டிகள், தீய சக்திகள் விலகி பண ஆதாயத்திற்கு வழிபிறக்கும்.. வீடு, அலுவலகத்தை கழுவி துடைப்பதாக இருந்தால், அந்த தண்ணீரில் படிகாரத்தை சேர்த்து கொள்ளலாம்.. குளிக்கும் நீரிலும் படிகாரத்தை சேர்ப்பதால், உங்கள் மீதான திருஷ்டி விலகும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
அதேபோல, வாஸ்து சாஸ்திரத்தில் ஆச்சார்யரான இந்து பிரகாஷ் சொல்லும்போது, :வீடு அல்லது அலுவலகத்தில் வாஸ்து தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், வாஸ்து தோஷங்களால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்க வேண்டுமானால், படிகாரத்தை வீட்டின் அனைத்து மூலைகளிலும் வைக்கலாம்.. சில நாட்களில் படிகாரத்தின் நிறம் மாறத் தொடங்கும். அப்போது, அந்த படிகாரத்தை மாற்றிவிட்டு புதிய படிகாரத்தை வைக்க வேண்டும்" என்கிறார்.
குழந்தைக்கு திருஷ்டி - படிகாரம்
வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்காவிட்டால், ஒரு சிறிய கருப்பு துணியில் படிகாரத்தை வைத்து கட்டி, வீட்டின் நுழைவாயிலில் வைக்கலாம்..
பிசினஸ் செய்யும் இடங்களிலும் கட்டி தொங்கவிடலாம். இதனால் தொழில் போட்டி, வியாபார தடங்கல் நீங்கும். அதேபோல, குழந்தைகளுக்கு திருஷ்டி என்றால், சிறு படிகார துண்டை, குழந்தைக்கு 7 முறை சுற்ற வேண்டும்.. இப்படி 3 நாட்களுக்கு செய்தால், எப்பேர்ப்பட்ட திருஷ்டியும் குழந்தையை விட்டு நீங்கிவிடும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications