செல்வத்தை பெருக்கும் மா இலை.. பணம், மகிழ்ச்சிக்கு உதவும் மாவிலை தோரணம்.. வாஸ்து குறைபாட்டை நீக்கும்
சென்னை: மாவிலைகளை வாசலில் கட்டி வைப்பது ஏன் தெரியுமா? வீட்டில் நடக்கும் சுபகாரியங்களுக்கும், பூஜைகளிலும் மாவிலைகளின் முக்கியத்துவங்கள் என்னென்ன தெரியுமா? ஆன்மீகம் மட்டுமல்ல, அறிவியல் நன்மைகளையும் இந்த மாவிலைகள் தருகின்றன. பல்வேறு எளிய பரிகாரங்களுக்கும் உதவியாக திகழ்ந்து வருகின்றன. இவைகளை பற்றியெல்லாம் சுருக்கமாக பார்ப்போம்.
மாவிலைகள். காய்ந்துபோனாலும்கூட, அதன் மகத்துவத்தை இழப்பதில்லை.. அதாவது மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சுழலை பாதுகாக்கும் சக்தி மாவிலைக்கு இருக்கிறதாம். மாவிலைகள் பொதுவாக, காற்றை சுத்தப்படுத்தக்கூடியது. எனவே, மாவிலைகள் உள்ள இடத்தில் சுத்தமான காற்றை நம்மால் சுவாசிக்க முடியும், இது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

மருத்துவ ஆச்சரியங்கள்
மாவிலைகள் மிகச்சிறந்த கிருமிநாசினியும்கூட.. அதனால்தான், வீட்டு வாசலில் மாவிலைகளை தோரணமாக கட்டி வைக்கும் பழக்கத்தை முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர். வாசலில் இந்த இலைகளை கட்டுவதால், தோஷங்கள், கண்திருஷ்டிகள் நீங்கிவிடும். வீட்டிற்குள் வரும் காற்றும் நச்சுத்தன்மை இல்லாமல் இருக்கும்.
எதிர்மறை எண்ணங்களையும் விலக்கிவிடும். உடலிலுள்ள நெகடிவ் எனர்ஜியையும் கிரகித்துக் கொண்டு, வீட்டிற்குள் பாசிட்டிவ் எண்ணத்தை படரச் செய்யும் ஆற்றல் மாவிலை தோரணத்திற்கு உண்டு
அதாவது, மாவிலை தோரணம் உள்ள வீட்டை பார்க்கும் தேவர்கள், அந்த வீட்டிற்குள் நுழைய முடிவு செய்வார்களாம்.. இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அதிஷ்டம் கிடைக்கும் என்பதுடன், வீட்டில் யாருக்காவது வாஸ்து குறைபாடுகள் இருந்தாலும் இந்த தோரணம் நீங்க செய்துவிடும் என்பது ஐதீகமாக உள்ளது.
மகாலட்சுமியின் வாசம்
மாவிலைகளில் மகாலட்சுமி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. அதனால்தான், கலசம் வைத்து பூஜையின் முடிவில் மாவிலை மூலம் கலச நீரை தெளிப்பது, கலச நீரை குடிப்பது, போன்ற செயல்கள் நிகழ்த்தப்படுகின்றன. மாவிலைகள் போடப்பட்ட கலச நீரில் பிராண வாயுவின் அளவு நிறைந்திருப்பதால், இதை குடிப்பது சிறந்த ஆரோக்கியமாகும்.
மந்திரத்தை உள்வாங்கி வைத்துக் கொள்ள கூடிய சக்தி மாவிலைகளுக்கு இருப்பதால்தான், கலசத்தில் உள்ள தீர்த்தங்கள் தெளிப்பதற்கும், தோஷங்களை போக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஆஞ்சநேயர், விநாயகர் அருளை பெற
அதற்காக வீட்டின் நிலைவாசலில், பிளாஸ்டிக் இலைகளை தோரணமாக கட்டக்கூடாது. நிலைவாசலில மட்டுமல்லாமல, பூஜையறையிலும் மாவிளக்குகளால் அலங்கரிக்கலாம்.. அதேபோல, பிள்ளையார் சிலைக்கு அருகில் மா இலைகளை செலுத்தி வந்தால், பணக்கஷ்டம் இருக்காது என்பார்கள். ஆஞ்சநேயர் கோயிலில் தினமும் ஒரு மா இலையை சந்தனத்தால் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதி அர்ச்சனை செய்து வந்தால், ஹனுமனின் ஆசியை பெறலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications