வாஸ்து டிப்ஸ்.. 7 வெள்ளை நிற குதிரைகள்.. வீட்டில் எந்த திசையில் வைக்கலாம்.. என்ன நன்மைகள்
சென்னை: நம்முடைய வீட்டில் இயற்கை ஓவியங்களையும் பறவைகள், விலங்குகள் படங்களை மாட்டி வைத்திருப்போம். சில ஓவியங்கள் நேர்மறை சக்தியை அதிகரிக்கும். வாஸ்து சாஸ்திரப்படி ஏழு குதிரைகள் ஓடும் படத்தை வீட்டின் எந்த திசையில் மாட்டி வைக்க வேண்டும் அதன் மூலம் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
நேர்மறை ஆற்றல்: என்னதான் உழைத்தாலும் அலுவலகத்தில் கடினமாக உழைப்பை கொட்டினாலும் அதற்கேற்ப பலன் கிடைக்கவில்லையே என்று பலரும் கவலைப்படுவார்கள். யார் யாருக்கோ பதவி உயர்வு வருகிறது. சம்பள உயர்வு வருகிறது நமக்கு மட்டும் ஏன் இப்படி எந்த நல்லதும் நடக்கவில்லையே என்ற ஏக்கம் பலருக்கும் இருக்கும். எதிர்மறை ஆற்றல் அதிகம் இருந்தால் அதை நேர்மறை ஆற்றலாக மாற்றும் சக்தி பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

ஏழு குதிரைகள்: நம்முடைய வீட்டிலும் நம்மை சுற்றியும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடிய சில விசயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும். அதில் முக்கியமானது ஏழு குதிரைகள் கொண்ட புகைப்படங்களை வீட்டில் வைப்பதன் மூலம் நமக்கு நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. 7ஆம் எண்ணிற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. சப்தரிஷிகள், தினங்கள், வானவில் வண்ணங்கள், ஏழு லோகங்கள், ஏழு ஸ்வரங்கள் போல ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரிய பகவான் வலம் வருகிறார் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவேதான் ஏழு குதிரைகள் ஓடி வருவது போன்ற புகைப்படத்தை நம்முடைய வீட்டில் வைப்பதன் மூலம் நமக்கு செல்வ வளம் அதிகரிக்கும். வேலையில் உயர்வும் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
சூரியபகவான்: சூரிய பகவான் ஏழு குதிரை ரதத்தில் சவாரி செய்யும் படத்தை வீட்டில் வைத்தால் வீடு சுபிட்சமாக இருக்கும். வீட்டில் நல்ல காரியங்கள் நடப்பதற்கு, நாம் கிழக்கு திசையை நோக்கி அந்த படத்தை மாட்டிவைக்க வேண்டும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வுக்காகக் காத்திருந்தால் வடக்குத் திசையில் ஓடும் குதிரைகளின் படத்தை மாட்ட வேண்டும்.
எந்த திசை சிறப்பு: வாழ்க்கையில் பெயர், புகழ், மரியாதை பெற வேண்டுமானால் வீட்டின் தெற்கு திசையில் ஓடும் குதிரைகளின் படத்தை மாட்டி வைக்கலாம். இது உங்களுக்கு வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தைத் தரும் உங்களின் புகழும் செல்வமும் பாராட்டப்படும்.கடன் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள் ஒரு ஜோடி குதிரை பொம்மைகளை மேற்கு திசையில் வைக்கலாம். இதனால் மகாலட்சுமியின் அருள் வீட்டில் தங்கும் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
சூரியனும் ஏழு குதிரைகளும்: ஏழு குதிரை ஓவியங்களின் பின்னணியில் சூரியன் உதிக்கும் வகையில் இருப்பது மங்களகரமாக கருதப்படுகிறது. இது ஒருவருடைய வாழ்க்கையில் வெற்றியையும் செல்வ வளத்தையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கச் செய்யும். சிவப்பு நிற பின்னணியோடு இருக்கக்கூடிய ஏழு குதிரைகளின் ஓவியம் செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தை ஏற்படுத்தும். சமூகத்தில் ஒருவருக்கு மரியாதையை அதிகம் ஏற்படுத்திக் கொடுக்கும். நீல நிறப் பின்னணியில் இருக்கக்கூடிய ஏழு குதிரைகள் ஓவியம் சனி கிரகத்தை குறிக்கிறது. இது நல்லிணக்கத்தையும் அமைதியையும் அதிகரித்துக் கொடுக்கும்.
எங்கு வைக்கக்கூடாது: வெள்ளை குதிரைகள் நேர்மறை ஆற்றலின் சின்னங்கள். வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடிய சக்தி இந்த படத்திற்கு உள்ளதாக வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. படுக்கையறையில் இந்த ஏழு குதிரைகளின் ஓவியத்தை வைக்கலாமா என பலருக்கும் கேள்வி எழும். படுக்கையறையில் இந்த ஏழு குதிரைகள் அடங்கிய ஓவியத்தை வைக்கக்கூடாது. பூஜை அறை, படிக்கும் அறை, கழிப்பறையை எதிர்கொள்ளும் சுவர்கள், பிரதான கதவு ஆகியவற்றில் ஏழு குதிரை ஓவியத்தை வைப்பது வாஸ்து சாஸ்திரத்தின்படி சரியானதல்ல. ஏழு குதிரைகள் அடங்கிய இந்த ஓவியத்தை உங்களுடைய வரவேற்பறையில் வைக்கலாம். இந்த குதிரைகள் தண்ணீரில் ஓடாமல் திறந்த நிலத்தில் ஓடுவதுபோல இருக்க வேண்டும்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications