பாசிடிவ் எனர்ஜி.. வாசலில் கற்றாழை செடி வைக்கலாமா? இதுதான் சரியான திசை.. காசு, பணம் நிக்காமல் வரும்
சென்னை: அளவுக்கு அதிகமான மருத்துவ குணங்களை கொண்டது கற்றாழை.. இந்த கற்றாழை ஆன்மீகத்திலும் மிக முக்கிய இடத்தை பெற்று வருகிறது. அந்தவகையில், வீடுகளில் கற்றாழை செடிகளை வைக்கும்போது சில முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
கற்றாழை செடிகளுக்கு தீய சக்திகளை தடுக்கும் சக்தி உண்டு. எனவேதான், வீட்டின் வாயிலிலேயே இந்த கற்றாழைகள் வைக்கப்படுகின்றன. ஆக்ஸிஜனை அதிகளவில் பரப்பும் சக்தி, இந்த கற்றாழைக்கு உள்ளது . அத்துடன், மண் எதுவுமே இல்லாமலே, செழிப்புடன் வளரக்கூடிய செடியாகும்.

காற்றிலுள்ள பிராணவாயுவை ஈர்த்துக்கொள்வதால்தான், கற்றாழையின் செழுமை நீடித்து காணப்படுகிறது.. கற்றாழை எங்கு இருக்கிறதோ, அங்கெல்லாம் லட்சுமிதேவி வாசம் இருப்பதாக நம்பப்படுகிறது. கற்றாழை மங்களகரமான செடியாக கருதப்படுவதால்தான் வீடுகளில் ஆர்வத்துடன் வளர்க்கப்படுகிறது.. கற்றாழை செடி வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரக்கூடிய செடியாக கருதப்படுகிறது...
வடமேற்கு திசை:
கற்றாழை செடியை வீட்டில் சரியான திசையில் நடுவது மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கற்றாழை செடி பயனுள்ளதாக இருக்கும்.. வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தாலும் அதனை கற்றாழை நீக்கிவிடும்.. அதுடன், அன்பு, முன்னேற்றம், செல்வம், பதவி உயர்வு, கௌரவம் அதிகரிக்கும் என்பது வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கையாக உள்ளது.
ஆனால், வீட்டில் கற்றாழை செடியை நடும் போது திசையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் மகாலட்சுமியின் அருளை முழுமையாக பெற முடியும். அந்தவகையில் கற்றாழை செடியை, வடமேற்கு திசையில் நடக்கூடாது.. அப்படி செய்தால், மோசமான பலன்கள் கிடைத்துவிடும். எப்போதுமே வீட்டின் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் கற்றாழை செடியை நடலாம்.
மகிழ்ச்சி வாழ்வு:
முன்னேற்றம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெற வேண்டுமானால் மேற்கு திசையிலும் கற்றாழை செடியை நடலாம். அதாவது, தென்கிழக்கு மூலையில் கற்றாழை செடியை வைத்தால் வருமானம் அதிகரிக்கும். மேற்கு திசையில் வைத்தால் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
குடும்பத்திலிருக்கும் நிதி சுமைகள் நீங்குவதுடன், பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் வரக்கூடும்.. வீட்டிலும் நேர்மறை ஆற்றல் அதிகரித்து காணப்படும்.. அதுமட்டுமல்ல, வீடுகளில் கற்றாழைகளை வளர்த்தால், காதல் வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் தீரும்.... தடைகளை நீக்கும் திறன் கொண்டது கற்றாழைகள்.. எனவே, இந்த செடியை நுழைவாயிலில் வைப்பதால், ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தில் உள்ள தடைகளை நீக்கி வெற்றிக்கான பாதை அமையும் என்பது நம்பிக்கையாகும்.
கற்றாழை பூக்கள்:
அதேபோல, கற்றாழை செடியை ஒரே இடத்தில் வைத்து வளர்க்கக்கூடாது. அவ்வபோது இதை வெட்டி எடுத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கற்றாழையில் பூ பூக்கும் தருணத்தில் வீட்டில் சுபகாரியங்களும், நல்ல விஷயங்களும் நடக்கும் என்பார்கள்... பிரிந்தவர்களும் ஒன்று சேர்வார்களாம்.. சண்டை, சச்சரவுகள் நீங்கி குடுமபத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications