வாஸ்து டிப்ஸ்.. செல்வ வளம் பெருக 12 ராசிக்காரர்கள் வளர்க்க வேண்டிய மரங்கள் என்ன தெரியுமா?
சென்னை: வீட்டு தோட்டங்களில் மரங்களை வளர்த்தால் செல்வ வளம் மட்டுமல்ல மழை வளமும் பெருகும். விலவ மரம் இலந்தை மரம் துளசிசெடி ஆகியவற்றில் மஹாலட்சுமி வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன. நவ கிரகங்களும் 12 ராசிகளில் பயணம் செய்கின்றன. ஜோதிட சாஸ்திரப்படி வீட்டு தோட்டங்களில் எந்த ராசி, நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் என்ன மரம் வளர்க்கலாம் என்று பார்க்கலாம்.
மரங்களும் ஜோதிடமும்: மரங்களுக்கும் ஜோதிடத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவே தோன்றுகிறது. நமக்கு தேவையான நீருக்கு காரக கிரங்கள் சுக்கிரனும் சந்திரனும்தான். அதே போல மரங்களுக்கு விவசாயத்திற்கும் காரக கிரகம் சுக்கிரன் தான் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
விவசாயத்திற்கு சுக்கிரனே பிரதான கிரகம் என்றாலும் பன்னிரெண்டு ராசிகளை வீடுகளாக கொண்ட நவகிரகங்களுக்குமே விவசாயத்தின் வாழ்க்கை சுழற்சிக்கு காரணமாகின்றது நில ராசிகளான ரிஷபம், கன்னி மற்றும் மகர ராசிகளும் அதன் அதிபதிகளான சுக்கிரன்,புதன் மற்றும் சனி ஆகிய கிரகங்களே பயிர் விளைய ஆதாரமான நிலத்தை தந்து பயிர் முளைத்தல் மற்றும் விளைதலை செய்கின்றன.

மரம் வளர தேவையானவை: காற்று ராசிகளான மிதுனம்,துலாம் மற்றும் கும்ப வீடுகளும் அதன் அதிபதிகளான புதன், சுக்கிரன் மற்றும் சனி ஆகிய மூன்று கிரகங்களும் பயிர் செழிப்பாக வளரவும் அதற்கு தேவையான காற்று மற்றும் வெளிச்சத்தை அளிக்கின்றனர். ஜல ராசிகளான கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிகளும் அதன் அதிபதிகளான சந்திரன், செவ்வாய், மற்றும் குரு ஆகிய மூவரும் பயிருக்கு தேவையான நீராதாரத்தை அளிக்கின்றனர். நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ராசிகளும் அதனதிபதிகளான செவ்வாய், சூரியன் மற்றும் குரு விதைகள் மற்றும் பழங்கள் பழுக்க தேவையான வெப்பத்தை அளிக்கின்றனர்.
12 ராசிகளின் மரங்கள்: மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது. மேஷம் - செஞ்சந்தனம் மரம், ரிஷபம் - அத்தி மரம், மிதுனம் - பலா மரம், கடகம் -புரசு மரம், சிம்மம் - குங்குமப்பூ மரம், கன்னி - மா மரம், துலாம் - மகிழ மரம், விருச்சிகம் - கருங்காலி மரம், தனுசு - அரச மரம், மகரம் - ஈட்டி மரம், கும்பம் - வன்னி மரம், மீனம் - புன்னை மரம் வளர்க்கலாம்.
27 நட்சத்திரங்களின் மரங்கள்: அஸ்வினிக்கு எட்டி மரம், பரணிக்கு நெல்லி மரம், கார்த்திகைக்கு அத்திமரம் வளர்க்கலாம். ரோகிணிக்கு நாவல்மரம், மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் கருங்காலி மரமும், திருவாதிரை காரர்கள் செங்கருங்காலி மரம் வளர்க்கலாம். புனர்பூசம் மூங்கில் மரம், பூசம் அரசமரம், ஆயில்யம் புன்னை மரம் வளர்க்கலாம். அதேபோல மகம் ஆலமரம், பூரம் பலா மரம், உத்திரம் அலரி மரம், அஸ்தம் அத்தி மரம் வளர்க்கலாம். சித்திரை நட்சத்திரக்காரர்கள் வில்வ மரம், சுவாதி மருத மரம், விசாகம் விலா மரம் வளர்க்கலாம். அனுஷம் மகிழ மரம், கேட்டை பராய் மரம், மூலம் மராமரம், பூராடம் வஞ்சி மரம், உத்திராடம் பலா மரம், திருவோணம் எருக்க மரம் வளர்க்கலாம். அதேபோல அவிட்டம் வன்னி மரம், சதயம் கடம்பு மரம், பூரட்டாதி தேமமரம், உத்திரட்டாதி வேம்பு மரம், ரேவதி இலுப்பை மரம் போன்றவைகளை வளர்க்கலாம். இந்த மரங்களை வளர்க்க முடியாதவர்கள் ஆலய தோட்டங்களில் வளர்க்கப்படும் நட்சத்திர மரங்களை ஜென்ம நட்சத்திர நாளில் சென்று வணங்கலாம்.
வளம் தரும் வாஸ்து திசை மரங்கள்: மரங்கள் வீட்டில் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் வளர்க்கலாம். வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் பெரிய மரங்கள் வளர்வதை அறவே தவிர்க்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் எந்த ஒரு கொடி படர்தலும் இருக்கக் கூடாது. நாம் சமையல் அறை தண்ணீர் வெளியேறும் இடத்தில் அங்கு நிறைய வீட்டில் வாழை மரம் வளர்க்கும் பழக்கம் உள்ளது இது சிறந்தது அல்ல, இதை தவிர்ப்பது நல்லது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications