குபேர மூலை.. ஈசான்ய மூலை.. வாஸ்து தோஸ்து ஆகி பணம் பெறுக.. மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்
சென்னை: நாம் வசிக்கும் வீட்டை அதிர்ஷ்டகரமானதாக மாற்றினால் பணம் குறைவின்றி வரும். நோய் நொடிகள் எதுவும் இன்றி சந்தோசமாக வாழலாம். வீட்டின் மூலைப்பகுதி சரியாக அமைந்து அந்த மூலையில் சரியான பொருட்களை வைத்தால் செல்வம் பெருகும். எந்த மூலையில் பீரோவை வைக்க வேண்டும் எந்த திசையைப் பார்த்து வைக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
வளம் தரும் வாஸ்து: பஞ்சபூதங்களின் அம்சம் நிறைந்தது வீடு. அந்த வீடு அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கவேண்டும். சக்தி நிறைந்த வீட்டில் செல்வமும் அதிர்ஷ்டமும் சேர்ந்தே வரும். அந்த வீட்டில் இருப்பவர்கள் அதிர்ஷ்டமாக இருப்பார்கள். பஞ்சபூத சக்திகள் நிறைந்த வீட்டில் பணம் சரளமாக வரும். சிலர் வீட்டில் கஷ்டங்களும் சங்கடங்களும் சேர்ந்தே வரும் பணம் வரவே வராது. இதற்குக் காரணம் வாஸ்து குறைபாடுதான். குறைகளை நீக்கினால் செல்வம் தாராளமாக வரும். நாம் வசிக்கும் வீடு என்பது அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ முடியும். பணம் குறைவின்றி வரும். சிலரது வீட்டில் கடன்கள் அதிகமாகும் விரைய செலவுகள் ஏற்படும். இதற்குக் காரணம் வாஸ்து குறைபாடுதான். ஒருவரின் வீட்டின் பீரோவில் வைத்த பணம் செலவு ஆகாது. ஒருவரின் வீட்டின் பீரோவில் வைத்த பணம் வைத்த வேகத்தில் காணாமல் போகும்.

ஈசான்ய மூலை: நம் வீட்டின் ஈசான்யம் எனப்படும் வடகிழக்கு மூலைப்பகுதி காற்றும் வெளிச்சமும் கொண்டதாக இருக்க வேண்டும். ஈசான்யம் எனப்படும் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய அந்த மூலைப்பகுதியில் படிக்கட்டு வந்தாலோ அந்த வீடு சரியிருக்காது. அக்னி மூலை சமையல் செய்யும் மூலை. அந்த மூலைப்பகுதி தெற்கும் கிழக்கும் இணைக்கும் மூலையில் கிச்சன் வைக்க வேண்டும். அக்னி மூலையில் நீரும் நெருப்பும் வைக்கக் கூடாது. இது பெண்களுக்கு உடல்நிலையில் பாதிப்பை தரும்.
குபேர மூலை: பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று வள்ளுவரே கூறியுள்ளார். வாழ்க்கையில் பணம் எல்லோருக்கும் முக்கியம். வசதியாக சேர்த்து வைப்பதற்கு வருவதை விட தினசரியும் செலவு செய்ய குறைவு இன்றி பணம் கிடைக்க நடு வடக்கு நன்றாக இருக்க வேண்டும். அங்கே எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாது. சமையலறை, படிக்கட்டு எதுவும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பணம் வருவது தடைபடும். குபேரன் பார்வை தெளிவாக விழும் பகுதி அதுதான். அந்த பகுதி அடைபட்டால் பணம் வருவது தடைபடும். செல்வம் சேகரிப்பு இடமான அந்த பகுதியில் நுழைவு இருக்கக்கூடாது. திறப்பு இருந்தால் அதை முதலில் அடைக்க வேண்டும். தென்மேற்கு மூலையில் வாசல் வரக்கூடாது. எதிர்மறையான எண்ணங்களை கொடுக்கும்.
செல்வம் பெருகும்: தென்மேற்கு கன்னி மூலை. குபேர மூலையில் பொதுவாக பாரமான பொருட்களை வைக்கலாம். குபேர மூலை வடக்கு மூலை. வடக்கில் இருந்து பார்வையிடுவார் குபேரன். இந்த இடத்தில் பீரோ வைத்து பணம் வைத்தால் செல்வம் பெருகும். வடக்கு நோக்கி பீரோ வைத்தால் குபேரன் பார்வை கிடைக்கும் எதிர்பாராத அளவிற்கு பணம் நகை கிடைக்கும். குபேர மூலை முக்கியமானது.
பீரோ வைக்கும் இடம்: தென்மேற்கு படுக்கை அறையில் பீரோவில் உடைகள் வைப்போம். ஒரு சில நேரங்களில் பீரோவில் உடுத்திய ஆடைகளை கூட துவைக்காமல் வைத்து விடுவோம். எனவே அழுக்கு உடைகளை பீரோவில் வைக்க நேரிட்டால் அது கூடவே நகை பணத்தை வைக்கக் கூடாது. வடக்கு, கிழக்கு பார்த்து வைத்த பீரோவில் வைத்து நகை பணம் வைக்கலாம். வடக்கு மத்தி சரியான இடம். இந்த பகுதியில பீரோ வைத்து நகை, பணம் வைக்கலாம். கஜானா வைக்கலாம். அப்படி பணம் வைத்தால் திரும்ப திரும்ப பணம் வரும்.
பணம் வரும் திசை: பொதுவாகவே வடக்கு திசை பார்த்து பீரோ வைக்கவும். வருமானம் அதிகம் இருக்கும். தெற்கு பார்த்த வீடு. கிழக்கை ஒட்டிய வடக்கு பகுதியில் வைக்கலாம். பீரோவிற்குள் தங்க தகடு சேர்த்த பிரமீடு, வெள்ளியில் செய்த பிரமீடு, புதன்கிழமை வியாழன் வெள்ளி கிழமைகளில் பீரோவிற்குள் வைக்கலாம். நிறைய அதிர்ஷ்டத்தை தரும் பாசிட்டிவ் எனர்ஜியை தரும். லட்சுமி படம் போட்ட தங்க நாணயங்களை வைக்கலாம். பணம் பெருகும். குபேர சிலையை பணப்பெட்டிக்குள் வைக்கலாம். அப்படி வைத்தால் பணம் வரும்.
தவறு செய்யாதீர்கள்: தெற்கு பகுதியில் பீரோ வைக்கலாம் பணம் சேரும்.சமையல் அறைக்குள் ஒரு சிலர் பூஜை ரூம் வைத்திருப்பார்கள் அப்படி வைக்கக் கூடாது. அது தவிர சமையல் செய்யும் அக்னி மூலையில் கஜானா வைத்தால் பணம் எரிந்து போகும். செலவு அதிகம் வரும். அதே போல வடமேற்கு பகுதியில் பீரோ வைக்கக் கூடாது பணம் காற்று போல வந்த வேகத்தில் செலவாகி விடும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications