வீடெங்கும் ஆனந்தம்... நிம்மதியும் மகிழ்ச்சியும் குடியேற இதை செய்யுங்கள்.. வாஸ்து டிப்ஸ்
சென்னை: ஒரு சில வீடுகளில் ஆடம்பரத்திற்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குவித்திருப்பார்கள். பணமும் பொருளும் அதிகம் நிறைந்திருக்கும் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்காது. மகிழ்ச்சியாக இருக்கும் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள். மகிழ்ச்சியும் நிம்மதியும் குடியேற என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் சுத்தம், தூய்மை இருக்கிறதோ, அங்கு மகாலட்சுமி தாயாரை காணலாம். எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவு, கூச்சல் இல்லாமல் சந்தோஷம், நிம்மதி இருக்கிறதோ அங்கே அவள் நிரந்தரமாக வாசம் செய்வாள்.

சண்டை இல்லாத வீட்டில்தான் மகாலட்சுமி தங்குவாள். எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன் என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.
வீட்டில் சில்லறை நாணயங்களை ஒருபோதும் ஆங்காங்கே சிதற விடக்கூடாது. நாணயங்கள் கீழே தரையில் தூக்கி வீசக்கூடாது. தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் தவறு நமக்கு வறுமையை கொண்டு வந்து விடும். அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
ரூபாய் நோட்டுகளை விட சில்லறை நாணயங்களுக்கு மதிப்பு அதிகம். செல்வாதிபதி குபேரனுக்கு கூட சில்லரை நாணயங்களால் அர்ச்சனை செய்தால் நம்முடைய வீட்டில் செல்வ வளம் பெருகும். அதே போல மகாலட்சுமிக்கும் நாணய அர்ச்சனை மிகவும் பிடிக்கும். 5 ரூபாய் நாணயம் கொண்டு அர்ச்சனை செய்தால் அன்னை மகாலட்சுமியின் மனம் மகிழ்ச்சியடையும்.
சிலர் சண்டை போடும் போது உணவையோ, பணத்தையோ தூக்கி வீசுவார்கள். சிலர் ஆணவத்தில் பணத்தை கிழிப்பார்கள். எனவே ஒருபோதும் அந்த தவறை செய்யாதீர்கள். குடும்பத்தில் வருமான தடை, தொழில் பாதிப்புகள், புதிய தொழில் துவங்கியிருந்தால் அதில் நஷ்டங்கள், இழப்புகள் போன்றவை ஏற்படக்கூடும் எனவே நாணயங்களை கண்டிப்பாக தூக்கி எறிய கூடாது.
சில்லறை நாணயங்களுக்கு பணத்தை ஈர்க்கக்கூடிய தன்மை உண்டு. ரூபாய் நோட்டுகளை விட உலோகத்தால் ஆன இந்த நாணயங்கள் மகாலட்சுமிக்கு ரொம்பவும் இஷ்டமான பொருளாக இருக்கிறது. இதன் ஓசை எங்கெல்லாம் கேட்கிறதோ, அங்கெல்லாம் குபேர வாசம் உண்டாகும். மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
சில்லரை நாணயங்கள், கொலுசு சத்தம், மெட்டி தரையில் படும் ஓசை, வளையல் ஓசை, பூஜை மணி அடிக்கும் ஓசை, மழலை சத்தம், பெண்களின் சிரிப்பு சத்தம் இவை எல்லாம் ஒரு வீட்டில் மகாலட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணும் சத்தங்கள் ஆகும். எந்த வீட்டில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் நிறைந்திருக்கிறதோ அந்த வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும்.
மணம் வீசும் மலர்கள்.. நறுமணம் வீசும் இடங்களிலும் அன்னை மகாலட்சுமி வாசம் செய்வாள். நாம் பேசும் வார்த்தைகள் நேர்மறை எண்ணங்களை வெளிப்படுத்துபவையாக இருக்க வேண்டும். முடியாது நடக்காது என்று ஒருபோதும் சொல்லக்கூடாது. எல்லோருக்கும் உதவும் எண்ணத்தோடு செய்யும் செயல்களும் அன்னை மகாலட்சுமியின் அருளை நமக்கு கிடைக்கச் செய்யும்.
அதே நேரத்தில் நாம் சில பொருட்களை தானம் செய்யக்கூடாது. மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய துடைப்பத்தை தானமாக கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் வீட்டில் பணப்பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். கூர்மையான பொருட்களான கத்தி, கடப்பாறை, ஊசி போன்ற பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுத்தீர்கள் எனில் கெட்ட பலன்கள் உங்கள் வீட்டை தேடி வரும். பழைய உணவுகளை தானமாக கொடுத்தீர்கள் எனில் வரவுக்கு மீறிய செலவுகள் வரும். எனவே எந்த சூழ்நிலையிலும் இந்த மூன்று பொருட்களையும் தானமாக கொடுத்து சிரமங்களை விலை கொடுத்து வாங்கி கொள்ளாதீர்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications