செல்வ வளம் தரும் செம்பருத்தி பூ.. மகிழ்ச்சி நிறைய இப்படி பயன்படுத்தலாம்.. வாஸ்து டிப்ஸ்
சென்னை: சிவப்பு நிறமான செம்பருத்தி பூ மருத்துவ குணம் கொண்டது மட்டுமல்ல வாஸ்து சாஸ்திரப்படி செல்வ வளத்தை அதிகரிக்கக் கூடிய சக்தி கொண்டதாக இருக்கிறது சித்தர்கள் செம்பருத்தியை தங்கபஸ்பம் என்று அழைக்கிறார்கள். நம்முடைய வீட்டின் தோட்டத்தில் செம்பருத்தி பூ செடியை எங்கு நட்டு வைத்து வளர்க்கலாம் என்று பார்க்கலாம்.
பச்சை நிற இலைகளுக்கு இடையே மலர்ந்து சிரிக்கும் சிவப்பு நிற பூக்களான செம்பருத்தி பூக்களை பார்க்கவே அழகாக இருக்கும். வீட்டு தோட்டத்தில் செம்பருத்தி பூக்களை வளர்ப்பது மகாலட்சுமியின் அம்சம் நிறைந்ததாக போற்றப்படுகிறது.

இதயநோய்க்கு செம்பருத்திப்பூ நல்லதொரு மருந்தாகப் பயன்படுகிறது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த பூக்களின் இதழ்களை மென்று தின்று வந்தால் காலப்போக்கில் இதய நோய் குணமாகும். வெறுமனே சாப்பிட பிடிக்காதவர்கள், செம்பருத்திப்பூவை ஜூஸ் செய்து குடிக்கலாம்.
4-5 செம்பருத்திப்பூக்களின் இதழ்களை எடுத்துக்கொண்டு அதனுடன் விதை நீக்கப்பட்ட ஒரு நெல்லிக்காய், இரண்டு கொத்து கறிவேப்பிலை, தோல் நீக்கிய இஞ்சித்துண்டு சிறிது சேர்த்து மையாக அரைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதில் தேன், நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட இதய நோய் குணமாகும்.
செம்பருத்திப்பூக்கள் வெறும் இதய நோய் என்றில்லாமல், அவர்களுக்கு வரக்கூடிய படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு என்று அத்தனை பிரச்னைகளில் இருந்தும் நிவாரணம் தரக்கூடியது. செம்பருத்திப்பூக்களை சிகைக்காய்ப் பொடியுடன் சேர்த்துப் பயன்படுத்துவதால் பொடுகு, முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்னைகள் சரியாகும்.

சிலர் காயவைத்த செம்பருத்திப்பூக்களுடன் ஆவாரம்பூ, பாசிப்பயறு, கறிவேப்பிலை சேர்த்துப்பொடியாக்கி சோப்புக்குப் பதிலாக தலை முதல் கால் வரை பூசிக் குளிப்பார்கள். இதனால் தோல் நோய்களில் இருந்து விடுபடுவதோடு, நோய் வராமலும் காத்துக்கொள்ளலாம்.
நரைமுடி, பொடுகுத்தொல்லை, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் தீர செம்பருத்திப்பூக்களுடன் இதன் இலைகள், கறிவேப்பிலை, மருதாணி இலை போன்றவற்றைச்சேர்த்து மையாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இதை வாரம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் செய்து வந்தால் நாளடைவில் பிரச்னைகள் தீரும். இது கண், உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சூட்டினால் வரக்கூடிய நோய்களில் இருந்தும் காத்துக்கொள்ளலாம். செம்பருத்தி செடி இலையை வெறுமனே அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறும். ஷாம்புகளை தலையில் தேய்த்து பக்க விளைவுகளால் அவதிப்படுவோர் அதுக்கு மாற்றாக செம்பருத்தியைப் பயன்படுத்தலாம்.
தொழில் வியாபாரத்தில் நிறைய லாபமும் பணமும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் செம்பருத்தி பூவை வைத்து பரிகாரம் செய்யலாம். வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தை அடைய வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும். கடனை சீக்கிரம் அடைக்க வேண்டும். என்று நினைப்பவர்கள் செம்பருத்தி பூவை வைத்து பரிகாரம் செய்யலாம்.
உங்கள் வீட்டு தோட்டத்தில் பூத்த செம்பருத்தி பூவை பறித்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் இறைவனுக்கு வைத்து, உங்களுடைய பணம் சம்பந்தப்பட்ட வேண்டுதலை வைத்துவிட்டு, அதன் பின்பு உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகின்ற மாற்றங்களை நீங்களே தெரிந்து கொள்வீர்கள். 48 நாட்கள் என்பது ஒரு கணக்கிற்காக சொல்லப்படுவது தான். அதோடு விட்டுவிடாமல் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்து வரும் பட்சத்தில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.
உங்களுடைய வீட்டின் மேற்கு அல்லது தெற்கு திசைகளில் செம்பருத்தி பூ செடி வைப்பது மிகவும் நல்லது. செம்பருத்தி பூ செடி சிவப்பு நிறம் கொண்ட ஒற்றை செம்பருத்தி பூ செடியாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சிவப்பு நிற செம்பருத்தி பூக்களை பறித்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் இறைவனுக்கு வைத்து மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்களது வேண்டுதலை இறைவன் நிறைவேற்றுவார். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கான வேண்டுதல்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். எதையுமே நம்பிக்கையோடு செய்து பாருங்கள், இறைவன் நிச்சயம் வேண்டுதலை நிறைவேற்றுவார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications