வாஸ்து டிப்ஸ்.. நல்ல அதிர்ஷ்டம், பாசிடிவ் எனர்ஜியை தரும் சூப்பர் பரிகாரம்.. கிராம்பு தரும் நன்மைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய வீட்டில் உள்ள பொருட்களை சரியாக நிர்வகித்தாலே, வறுமை நீங்கி, குடும்பத்தில் வளம் கொழிக்கும் என்கிறார்கள்.. அந்தவகையில், வீட்டில் செய்யக்கூடிய ஒருசில வாஸ்து விஷயங்கள், பாசிடிவ் எனர்ஜி பெருக செய்ய வேண்டியவைகள் குறித்து சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

எப்போதும் சுத்தமில்லாத வீட்டிற்குள் மகாலட்சுமி காலடி வைக்க மாட்டாள். அதனால், தினமும் பெருக்கி வீட்டை சுத்தப்படுத்த வேண்டும்.. விஷ பூச்சிகள், கரையான்கள் வீட்டுக்குள் சேரவிடக்கூடாது. அதற்காக சூரியன் மறைந்த பிறகு, வீட்டை பெருக்கி வெளியில் தள்ளக்கூடாது.

Spirituality Vastu tips Clove

கடிகாரங்கள்: குபேரன் ஆளும் இந்த திசையில் கடிகாரம் மாட்டினால் பொருளாதார நிலை உயரும். அதேசமயம், வீட்டிலுள்ளவர்களுக்கு நோய் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், அவர்களின் ஆரோக்கியம் அற்புதமாக தழைக்க வேண்டுமானால், வீட்டில் கிழக்கு பக்கம் உள்ள சுவற்றில் கடிகாரத்தை மாற்ற வேண்டும்.

நிதி நெருக்கடிகள் நீங்க வேண்டுமானால், ஒரு கிண்ணத்தில் 3 கற்பூரம் 5 கிராம்புகளை நெருப்பில் போட்டு எரிக்க வேண்டும். காலை 6 மணிக்குள்ளாகவோ மாலை 6 மணிக்கு மேலாகவோ இந்த பரிகாரத்தை செய்துவரும்போது, நிதி நிலைமை சீராகும்.

கிராம்பு: மாலை நேரத்தில், மகாலட்சுமி படத்திற்கு கற்பூர ஆரத்தி, ஊதுபற்றி ஏற்றி பூஜை அறையில் வைக்க வேண்டும். பிறகு, ஒரு கிண்ணத்தில் 5 கற்பூரம், 5 கிராம்பு, 5 ஏலக்காய் சேர்த்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை வீடு முழுக்க காட்ட வேண்டும். இதன் மூலம் வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றல் வெளியேறி, நேர்மறை ஆற்றல் பெருகும்.

அதேபோல, சிவப்பு நிற துணியில் கிராம்பு, பச்சைக்கற்பூரம் கட்டி வைத்து பணம் வைக்கும் பீரோவில் வைத்தால், பணம் வீடு தேடி வருமாம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கட்டாயம் சாம்பிராணி புகை போட்டு வர வேண்டும். சாம்பிராணியுடன் வெண் கடுகு, மருதாணி விதைகளையும் தூபம் போட்டால், வீட்டிலுள்ள வறுமை, திருஷ்டி மெல்ல நீங்கிவிடும்.. செல்வ வளமும் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.

அறுந்த செருப்புகள்: பயன்படுத்தப்படாத மற்றும் அறுந்துபோன செருப்புகளை வீட்டில் வைத்திருப்பது அசுபமாகும்.. இவற்றை உடனடியாக தூக்கி போட்டுவிட வேண்டும். அதேபோல உபயோகப்படுத்தும் செருப்புகளையும் தெற்கு அல்லது மேற்கு திசையில் தான் கழற்றி வைக்க வேண்டும். உபயோகப்படுத்தாத, கிழிந்த துணிகளை, மற்றும் சிறிய அளவாகிவிட்ட துணிகளை, அணியவும் கூடாது, வீட்டில் வைத்திருக்கவும் கூடாது.

பொதுவாக வீட்டின் தென்மேற்கு பகுதியை உயரமாகவும் வடகிழக்கு பகுதியை தாழ்வாகவும் திறந்த வெளியாக வைக்கவேண்டும்.. வீட்டில் வடக்கு திசையை எப்போதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பஞ்சபூத ஆற்றல் கிடைக்க ஈசானிய மூலை காலியாக இருக்க வேண்டும்.. இநத ஈசான்ய மூலையில் மாலை நேரத்தில் விளக்கேற்றினால் குடும்பத்துக்கு நல்லது. இந்த ஈசானிய மூலையில் மண் அமைத்து அருகம்புல், துளசி வளர்க்கலாம்.. அதனால், இந்த ஈசானிய மூலையில் குப்பை கூளங்களை குவித்து வைக்கக்கூடாது.

நன்மைகள்: அதேபோல, ஒரு வீட்டின் தெற்கு பகுதியில் தெற்கும், தென்மேற்கும் உயரமாகவும், வடக்கும், ஈசான்யமும் பள்ளமாகவும் இருந்தால் அந்த வீட்டிற்குள் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பார்கள்.. அதேபோல, தென்மேற்கும் மேற்கும், உயரமாகவும் இருந்தாலும், குடும்பத்துக்கு நன்மைகள் ஏற்படும்.

சமையலறையில் உப்பு, பால், சர்க்கரை, அரிசி உள்ளிட்ட பொருட்கள் முழுவதுமாக தீர்ந்துவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்... வீட்டில் வளர்க்கப்படும் பூக்களை வாடவிடக்கூடாது.. வீட்டின் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகளைத் தீர்க்கும்... அதேபோல, ஒற்றைக்கண் தேங்காயை வீட்டின் முன்புறம் மஞ்சள் துணியில் கட்டித் தொங்கவிட்டு பூஜை செய்தாலும், லட்சுமியின் அருளும், ஆசியும் கிட்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+