வாஸ்து டிப்ஸ்.. கடன்.. நிதி நெருக்கடியா? கிச்சனில் இருக்கும் பொருள் போதும்.. பண மழை பொழியும்
சென்னை: நன்றாக வாழ்ந்தவர்கள் வசதியாக இருந்தவர்களுக்கு சில நேரங்களில் கடன் பிரச்சினைகள் வரும். தொழில் நஷ்டம் ஏற்பட்டு நிதி நெருக்கடிகளில் சிக்கித்தவிக்க நேரிடும். நம்முடைய பண பிரச்சினையை தீர்க்க வீட்டின் கிச்சனில் உள்ள சில பொருட்களே போதும் வாஸ்து தோஷத்தை நீக்கி, பண வருமானத்தை அதிகரிக்க செய்யும்.
சில வீடுகளில் வாஸ்து குறைபாடுகள் இருக்கும். அப்படி இருப்பதனால் தொழில் முடக்கம், காரியத்தடைகள், நஷ்டம், நிதி பிரச்சினைகள் வரக்கூடும். அந்த வாஸ்து தோஷங்களை போக்க வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளவைகள் நாம் பின்பற்ற வேண்டும்.

நாம் தினமும் செய்யும் சில செயல்கள் வாஸ்து தோஷத்தை போக்கக் கூடியவை என்று நம்மில் பல பேருக்கு தெரியாது. சாதாரணமாக நாம் கற்பூரத்தை வீட்டு வாசலில் வைத்து எரிப்போம். அந்த கற்பூரத்துடன் சில பொருட்களை சேர்த்து எரித்தாலோ, சாம்பிராணி புகை போடும் போது சில பொருட்களை சேர்த்து தூபம் போடுவதாலோ கண் திருஷ்டி பிரச்சினைகள் நீங்கும் வாஸ்து குறைபாடுகள் நீங்கும். இதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
நம்முடைய சமையல் அறையில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் 3 கற்பூரம் 5 கிராம்பினை எடுத்து நெருப்பில் போட்டு எரிக்க வேண்டும். காலை 6 மணிக்குள்ளாகவோ மாலை 6 மணிக்கு மேலாகவோ இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதன் மூலம் நிதி நெருக்கடிகள் நீங்கும்.
நாம் கடனாக கொடுத்த பணம் நமக்கு திரும்ப வராமல் இருக்கும் இதனால் மன அழுத்தமும் ஏற்படும். அப்படி கொடுத்த பணம் திரும்ப வருவதற்கு நாம் சிவப்பு ரோஜா இதழ்களுடன் கற்பூரத்துண்டுகள் சேர்த்து அதனுடன் கிராம்பு வைத்து துர்க்கைக்கு அர்ச்சனை செய்யலாம். சிவப்பு நிற துணியில் கிராம்பு, பச்சைக்கற்பூரம் கட்டி வைத்து பணம் வைக்கும் பீரோவில் வைக்கலாம். இதன் மூலம் பணம் வீடு தேடி வரும்.
மகாகலட்சுமி படம் அனைவரின் வீட்டிலுமே இருக்கும். மாலை நேரத்தில் நாம் பூஜை அறையில் விளக்கேற்றி மகாலட்சுமி படத்திற்கு கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். ஊதுபற்றி ஏற்றி பூஜை அறையில் வைக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் 5 கற்பூரம், 5 கிராம்பு, 5 ஏலக்காய் சேர்த்து எரிக்க அதில் இருந்து வரும் புகையை வீடு முழுக்க காட்ட வேண்டும். இதன் மூலம் எதிர்மறை ஆற்றல் குறைந்து நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கி பண வருமானம் அதிகரிக்கும்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நாம் கட்டாயம் சாம்பிராணி புகை போடுவது அவசியம். சாம்பிராணியுடன் வெண் கடுகு, மருதாணி விதைகள் சேர்த்து தூபம் போட வீட்டில் செல்வ வளம் பெருகும். நம்முடைய வீட்டில் தெய்வ அருள் வரும். கண் திருஷ்டி நீங்கும். செய்யும் தொழில்களில் முன்னேற்றம் வரும். குடும்பத்திற்குள் இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நோய் பாதிப்புகள் நீங்கும். செல்வ வளம் பெருகும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications