மல்லிகை மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா...வீட்டில் வைத்தால்.. பெண்கள் சூடினால் இத்தனை பலன்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மல்லிகை பூக்களின் மணம் மனதை மயக்கும். தலையில் மல்லிகை சூடிய பெண்களை பார்த்தாலே மகாலட்சுமியின் அம்சமாக இருக்கும். குடும்பம் சுபிட்சமாக இருக்கவும் பெண்கள் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கவும் வெள்ளிக்கிழமைகளில் தலையில் வைக்க வேண்டும் மல்லிகை பூக்களை வைக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். நம்முடைய வீட்டில் மல்லிகை செடிகளை வளர்ப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று ஆன்மீகம் சொல்வதை பார்க்கலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டில் உள்ள பெண்களை மகிழ்ச்சியோடு வைத்திருக்க வேண்டும். பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வீட்டில்தான் சுபிட்சம் நிறைந்திருக்கும். நம்முடைய வீட்டில் உள்ள பணத்தை நாம் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். எந்த பிரச்சினை என்றாலும் அதை தைரியத்தோடு சமாளிக்க வேண்டும்.

சந்தோஷமாக இருக்கும் குடும்பத்தில் சிலர் இடையில் புகுந்து எதையாவது சொல்லி குட்டையை குழப்பி விடுவார்கள். குடும்பத்தில் பிரச்சினை ஆரம்பித்தாலே எதைப்பற்றியும் கவலைப்படாமல் மல்லிகைப்பூக்களை வாங்கி வந்து மனைவியிடம் கொடுக்கலாம். மனைவியின் தலையில் ஒரு முழம் மல்லிகை சூடினாலே மகிழ்ச்சியும் குடும்ப ஒற்றுமையும் அதிகரிக்கும். அதே போல பூஜை அறையில் உள்ள குல தெய்வ படத்திற்கு போட்டு வணங்கலாம். மல்லிகை பூக்கள் சுக்கிரனின் அம்சம் மட்டுமல்ல மகாலட்சுமியின் அம்சமும் ஆகும்.

Vastu Tips Tamil: Jasmine flower Plant Direction Benefits Of Jasmine Plant As Per Vastu

பூக்கும் பூக்கள் எல்லாம் பூஜைக்கு மட்டுமல்ல பெண்களின் தலையில் சூடவும்தான். ரோஜா, மல்லிகை, முல்லை என எத்தனையோ மலர்கள் இருந்தாலும் மல்லிகை பூக்களை தலையில் வைப்பதற்கு தனி ஆர்வம் காட்டுவார்கள் பெண்கள். மன அழுத்தம் மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொஞ்சம் மல்லிகைப்பூக்களை தலையில் வைத்தாலே போதும் மன அழுத்தம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் என்கிறது ஆன்மீகம்.

மல்லிகை பூக்களை தலையில் வைப்பதால் மட்டுமல்ல வீட்டு தோட்டத்தில் மல்லிகை செடிகளை வளர்த்தாலே அந்த வீட்டிற்கு மகாலட்சுமி அம்சம் உண்டாகும். மல்லிகை சூடும் பெண்களின் ஆற்றல் அதிகரித்து மன அழுத்தம் குறைவதாக அறிவியலும் சொல்கிறது. பெண்களின் மன குழப்பம் நீங்கி முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கிறதாம். பெண்களின் நிர்வாகத்திறனும் அதிகரிக்கும் எந்த ஒரு பிரச்சினைகளையும் எளிதில் சமாளிக்கும் திறனையும் பெறுவார்களாம்.

திருமணமான புதுப்பெண்கள் தலைநிறைய மல்லிகை பூக்களை சூடினால் அந்த பெண்களுக்கு மட்டுமல்ல அதை பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையேயும் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். மல்லிகை பூக்களை தலையில் வைப்பது மட்டுமல்லாது வீட்டிலும் மல்லிகை செடிகளை வளர்ப்பதால் பலவித நன்மைகள் கிடைக்கின்றன.

வாஸ்து ரீதியாக மல்லிகை செடிகளை நம்முடைய வீட்டில் வளர்க்கும் போது பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தை தருகிறது. படிப்படியாக செல்வ செழிப்பும் அதிகரிக்கத் தொடங்கும். மல்லிகையின் நறுமணம் நல்ல உறக்கத்தை கொடுக்கும். மனம் ஒருமுகப்படும். வீட்டின் கிழக்குப் பகுதி வடகிழக்குப் பகுதியில் மல்லிகை செடியை வளர்ப்பதன் மூலம் அந்த வீட்டில் வசிக்கும் குடும்பத்தினரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். வீட்டில் வசிப்பவர்களின் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.

குழந்தைகள் படிக்கும் அறைக்கு அருகே மல்லிகை செடியை வளர்ப்பதன் மூலம் அவர்கள் படிப்பில் அக்கறையும் ஆர்வமும் செலுத்தும் அளவிற்கு மனம் ஒருமுகப்படும். நல்ல அதிர்வுகள் ஏற்படும் மாணவர்களின் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். இதன் மூலம் மாணவர்களுக்கு படிப்பதற்கான நல்ல சூழ்நிலையை உருவாக்க முடியும்.

வீட்டின் பிரதான வாசலிற்கு அருகே இடது பக்கம் மல்லிகை செடியை நட்டு வைப்பதன் மூலம் மகாலட்சுமியின் அருள் நிரந்தரமாக கிடைக்கும். பணத்திற்கு ஒருபோதும் குறைவிருக்காது. அதிர்ஷ்டமும் செல்வ வளமும் நிரந்தரமாக தங்கியிருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+