Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறந்தும் கூட வீட்டில் இந்த படங்களை மாட்டிவிடாதீர்கள்..தீராத சிக்கல் வந்து விடும்..வாஸ்து டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடுகளில் அழகுக்காக கண்ட கண்ட படங்களை மாட்டி வைத்திருப்பார்கள். அந்த படங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சில சிக்கல்களையும் உடல் நலக்கோளாறுகளையும் ஏற்படுத்தி விடும். அழகிய ஓவியங்கள் என்பதை விட மனஅமைதியைத் தரக்கூடிய படங்களை மட்டுமே நாம் வீட்டின் ஹாலிலும் படுக்கை அறையிலும் மாட்டி வைக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரப்படி எந்த மாதிரியான படங்களை வீட்டு ஹாலில் மாட்டி வைக்க வேண்டும் எந்த மாதிரியான படங்களை மாட்டி வைக்கக் கூடாது என்று பார்க்கலாம்.

வீட்டின் ஹாலில் மாட்டி வைக்கப்படும் புகைப்படங்கள், ஓவியங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, சரியான திசையில் வைக்கப்படும் ஓவியங்கள் செல்வத்தையும் புகழையும் தருகின்றன.

Vastu Tips: Wall decor art painting 10 points you need to know

நம்முடைய வீட்டில் நாம் மாட்டி வைக்கும் ஓவியங்கள் நம்முடைய நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் வகையில் இருக்க வேண்டும். மகிழ்ச்சியையும் மனதிற்கு நிம்மதியையும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். பிரகாசமான ஓவியங்களை மாட்டி வைக்க வேண்டும். பசுமையான இயற்கை காட்சிகள் படங்களை தென் கிழக்கு திசையில் மாட்டி வைக்கலாம்.

உதய சூரியன் அதிர்ஷ்டத்தை தரக்கூடியது. கிழக்கு திசையில் ஏழுகுதிரையில் வலம் வரும் சூரிய தேவன் ஓவியத்தை மாட்டி வைக்கலாம். கிழக்கு சுவற்றில் பொதுவாக பசுமை வண்ண நிறங்களை பயன்படுத்தலாம். குழந்தைகள் அறைக்கு படிக்கும் அறைக்கும் இளம் சிவப்பு, ஊதா அல்லது நீல நிறத்தையோ க்ரீம் வெள்ளை நிறங்களை கொண்ட ஓவியங்களை வால் பேப்பர்களை பயன்படுத்தலாம்.

பறந்து செல்லும் பறவைகள் படங்கள் நிதி நிலையை அதிகரிக்கும். நம்முடைய வீட்டு ஹாலில் நதி அல்லது கடலின் அழகிய ஓவியங்கள், அல்லது பாயும் நீர் வீழ்ச்சியின் ஓவியம் மற்றும் கடற்பரப்பின் சூரிய உதயமாகும் நிலையில் உள்ள ஓவியங்களை கிழக்கு பகுதியில் மாட்டி வைப்பது அதிர்ஷ்டத்தை தரும்.

வீட்டில் நாம் வசிக்கும் பகுதியான ஹாலின் கிழக்கு சுவரில் ஏழு குதிரைகள் ஓடுவது போன்ற ஓவியங்கள் வைக்கலாம். இது தவிர படுக்கையறை மற்றும் வரவேற்பறையில் பசுமையான இயற்கை காட்சி அடங்கிய ஓவியங்களை வரையலாம். இந்த ஓவியங்கள் மனதிற்கு நிம்மதியை தருகின்றன. செல்வ வளத்தை அதிகரித்து பொருளாதார நிலையை உயர்த்தும்.

புதுமணத்தம்பதியர் பயன்படுத்தும் படுக்கை அறையில் இளஞ்சிவப்பு நிறங்களை அதிகம் பயன்படுத்தலாம். நீருற்றுகள் நிறைந்த ஓவியங்கள், ரதி மன்மதன் கொண்ட காதல் ஓவியங்களை மாட்டி வைக்கலாம். ஜோடியாக இருக்கும் படத்தை படுக்கை அறையின் தெற்கு சுவற்றில் தொங்க விடலாம்.
நம்முடைய குடும்ப புகைப்படத்தை ஹாலில் கிழக்கு திசை சுவற்றில் மாட்டி வைக்க குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

Vastu Tips: Wall decor art painting 10 points you need to know

உங்களுடைய வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க வேண்டும் என்றால் வடக்கு திசை சுவற்றில் ஓம், ஸ்வஸ்த்திக் போன்ற சின்னங்களையும் மாட்டி வைக்கலாம். வடகிழக்கு திசையில் வடக்கு சுவற்றில் இந்த சின்னங்களை கொண்ட ஓவியங்களை மாட்டி வைக்கலாம். இது வீட்டிற்குள் மன அமைதியை ஏற்படுத்தி செல்வ வளத்தை அதிகரிக்கும்.

வீட்டில் யாருக்காவது இதயம் தொடர்பான நோய் இருந்தாலோ அல்லது அவருக்கு மனஅழுத்தம் இருந்தாலோ வீட்டில் சிவப்பு வண்ணம் பூசக்கூடாது. பச்சை நிறம் ஒரு நபரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. நம்முடைய வீட்டில் தெரியாமல் தவறான ஓவியங்களை மாட்டி வைத்தால் அது எதிர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தும். பயங்கரமான வீடுகளை கொண்ட படங்கள், கருமையான அடர்த்தியான வண்ணங்களை கொண்ட ஓவியங்கள், பயங்கர மிருகங்கள், போர் கள காட்சிகள், குருஷேத்திர போர்கள் காட்சிகள் கொண்ட ஓவியங்களை வீட்டில் வைக்கக்கூடாது அது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். எனவே சரியான ஓவியங்களை மாட்டி வைத்து வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+