ஆந்தை பொம்மை வீட்டில் வைக்கலாமா? யானை சிலை காலில் தங்க சங்கிலி கட்டி பாருங்க.. சூப்பர் வாஸ்து டிப்ஸ்
சென்னை: வீட்டிலுள்ள குழந்தைகளுக்காகவே விதவிதமான பொம்மைகளை வாங்கி வைத்திருப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்த பொம்மைகள் வாஸ்துவுடனும் தொடர்புபடுத்தி பார்க்கப்படுகிறது.. அந்தவகையில், சில பொம்மைகளை வீட்டில் வைக்கக்கூடாது என்பார்கள்.. சில வீட்டில் வைத்திருப்பது நன்மைகளை பெருக்கி தரும் என்பார்கள்.. இதில், ஆந்தை, யானை பொம்மைகளை வீட்டில் வைக்கலாமா? என்ற சந்தேகம் நிறைய பேருக்கு உண்டு.. இதுகுறித்து வாஸ்துவில் என்ன சொல்லப்பட்டுள்ளது? இவைகளை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
ஆந்தையை பொறுத்தவரை, சகுனம் சொல்லக்கூடிய பறவையாகவும் பார்க்கப்படுகிறது. ஒருவருக்கு வரக்கூடிய நன்மை தீமைகளை முன்கூட்டியே சொல்லக்கூடிய தன்மை ஆந்தைகளுக்கு உண்டு என்கிறார்கள்.

மங்களகரமான பறவை
புறாவை போலவே ஆந்தைகள் அமைதியின் சொரூபமானவை.. ஜோதிட சாஸ்திரத்தின்படி வீட்டில் ஆந்தை பொம்மைகளை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.. ஆந்தை சிலைகளையும் வீட்டிற்குள் வைப்பது பணவரவை தரக்கூடியது.. ஏனென்றால், ஆந்தைகள் மகாலட்சுமியின் வாகனமாக பார்க்கப்படுகிறது.
ஆந்தையின் சிலையை வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரித்து, செல்வம், முன்னேற்றம், மகிழ்ச்சி போன்றவை கிடைக்கும். ஆந்தைகளை காலையில் கிழக்கு திசையில் பார்ப்பது தனவரவை அள்ளித்தருமாம்.. கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும், அதன் சத்தத்தை கேட்பதும் செல்வ வரவை உணர்த்தும் அறிகுறிகள்தானாம்..
தலைக்குமேல் உரசினால்
நீண்டகாலமாக நோயில் கிடந்த ஒருவரின் தலைக்கு மேல் ஆந்தைகள் பறந்து சென்றால், அல்லது ஒருவரை உரசினாலோ அவரது நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்..
ஒருவரது வீட்டு கூரையின் மேல் அமர்ந்தாலோ அல்லது கூரையில் உட்கார்ந்து சப்தத்தை எழுப்பினாலோ, அது அந்த வீட்டில் உள்ளவர் இறந்ததை அல்லது இறக்கப் போவதைக் குறிக்கிறதாம்.
இரவு நேரத்தில் விழித்திருக்கும் ஆந்தையை ஒருவர் பகல் நேரத்தில் பார்ப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இதுவரை வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செல்வம் பெருகப் போகிறது என்பதையும் குறிக்கிறது.
ஆந்தை சிலைகள்
எனவே தாராளமாக ஆந்தை பொம்மைகளை வீட்டில் வைக்கலாம்.. இரட்டையாக உள்ள ஆந்தை சிலைகள் குடும்பத்தின் நன்மையை அதிகரிக்க செய்யுமாம்.. வீட்டிற்கு புதிதாக ஆந்தைகளை வாங்க வேண்டுமானால் தீபாவளி போன்ற நன்னாளில் வாங்கலாம்.. வீட்டின் நுழைவாயிலை பார்த்தவாறு ஆந்தைகளை வைக்க வேண்டும். இதனால் வீட்டிலுள்ள துர்சக்திகள் வெளியேறுவதுடன், வெளியிலிருந்தும் துர்சக்திகள் நெருங்காது..
செல்வத்துடன் தொடர்புடையது என்பதால், ஆந்தை பொம்மைகள், சிலைகளை தொழில் செய்யும் அலுவலகங்களில், கடைகளிலும் வைக்கலாம்,. வட மேற்கு மூலையில் ஆந்தை பொம்மைகளை வைப்பது, பாசிடிவ் எனர்ஜியை அதிகரிக்க செய்யும்.. இதில் பித்தளை சிலையிலுள்ள ஆந்தைகளை வைப்பது கூடுதல் பலனை தரும்..
யானை போட்டோக்கள், பொம்மைகள்
அதேபோல பிள்ளையாரின் அம்சமாக கருதப்படுவது யானைகளாகும்.. யானையின் தும்பிக்கை ஓம்கார வடிவம் என்பதுடன், யானையின் தும்பிக்கையில், லட்சுமி தேவி வாசம் செய்வதாகவும் நம்பப்படுகிறது.. எனவே, யானையிடம் ஆசி பெறுவதை போலவே, யானை பொம்மைகளையும் வீட்டில் வைப்பதால் செல்வம் குவியுமாம்.
வீட்டிற்குள் யானை பொம்மைகளை வைப்பதாக இருந்தால், தும்பிக்கையை தொங்கவிட்டபடி உள்ள போட்டோ, சிலைகளை வைக்க வேண்டும்.. வீட்டின் வரவேற்பு அறை, பூஜை அறையில் யானையின் சிலையை வைப்பது நல்லது.. ஆனால் வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும்...
இரும்பு, வெள்ளி, தங்க சங்கிலி
எக்காரணம் கொண்டும், யானை துதிக்கையை தூக்கியபடி இருக்கும் போட்டோக்கள், அல்லது சிலைகளை வீட்டில் வைக்கக்கூடாது.. இதனால் வீண் செலவு ஏற்படும். தும்பிக்கையை தூக்கியபடியிருக்கும் யானை சிலைகளை வீட்டிற்கு வெளியே வைக்க வேண்டும்.
வீடு, நிலம், சொத்து விவகாரங்களில் பிரச்சனை இருந்தால், தங்கத்தால் ஆன சங்கிலியை யானையின் சிலையில் கட்டிவைத்து வேண்டி கொள்ளலாம். வேண்டுதல் நிறைவேறியதுமே, அந்த தங்க சங்கிலியை வீட்டின் பூஜையறையில் வைத்து வணங்கலாம். தங்கம் என்பதற்காக பீரோவில் மற்ற நகைகளுடன் சேர்த்து வைக்கக்கூடாது.
அதேபோல, வீட்டிற்குள் பண சிக்கல் அல்லது கொடுத்த பணம் திரும்பி வராத சூழலில், யானை சிலையின் காலில் வெள்ளி சங்கிலியால் கட்டி, பிரார்த்திக்க வேண்டும். யானையின் பாதத்தில் சனி, கேது இருப்பதால், குருவின் அம்சமான யானையின் காலில் இரும்பு சங்கிலி கட்டிவிடலாம். இதனால் இடர்பாடுகள் விலகும்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications