சிவப்பு எறும்புகள் உங்க வீட்டுக்குள் வருதா? கருப்பு எறும்புகள் கனவில் வந்தால் இதுதான் அர்த்தம்! அடடே
சென்னை: வீடுகளில் எறும்புகள் வருவது இயல்பானது.. அதிலும் இனிப்புகள் இருக்குமிடத்தில் எறும்புகள் வருவது இயல்புதான்.. சிலர் எறும்புகளை கண்டால் நசுக்கிவிடுவார்கள்.. சிலர் எறும்புகளை பெரிதாகவே எடுத்து கொள்ள மாட்டார்கள்.. ஆனால், எறும்புகள் என்றாலே அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளது.. அந்தவகையில் சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகள் பற்றி வாஸ்துவில் என்ன சொல்லப்பட்டுள்ளன? குடும்பத்தில் நிலவும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்புக்கும், இந்த எறும்புகளுக்கும் என்ன தொடர்பு? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
கருப்பு எறும்புகளை பிள்ளையார் எறும்புகள் என்பார்கள்.. இதற்கு காரணம், இந்த எறும்புகள் யாரையுமே கடிக்காது.. மிகவும் சாந்த குணம் கொண்டவை.. பிள்ளையாருக்கு வைக்கப்படும் இனிப்புகளை சாப்பிடுவதற்கு இந்த எறும்புகள் மட்டுமே அதிகமாக வரும்.. எனவேதான் இதனை பிள்ளையார் எறும்புகள் என்கிறோம்..

எறும்புகள் வாஸ்து அறிகுறி
இப்படிப்பட்ட எறும்புகள் குப்பைகளில் காணப்படாது.. சுத்தமான, தூய்மையான இடங்களில்தான் திரண்டு வரும்.. இப்படி கருப்பு எறும்புகள் கூட்டமாக வீட்டிற்குள் வந்தாலே அது மங்களகரமான விஷயமாக கருதப்படுகிறது.. அதிலும் சுத்தம் செய்யப்பட்ட பிறகும் இந்த கருப்பு எறும்புகள் வந்து கொண்டிருந்தால் ஏதோ நல்ல விஷயம் உங்கள் வீட்டில் நடக்க போவதாக அர்த்தம்.
எப்போதுமே வீட்டிலும், வீட்டை சுற்றிலும் கருப்பு எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தால், அது செழிப்பு, வளமையின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.. அதிலும், தங்கத்தை வைத்திருக்கும் இடத்திலிருந்து வெளியே வந்தால், செல்வம் மேலும் பெருகுமாம். அரிசி பானைக்குள் கருப்பு எறும்பு காணப்பட்டாலும் மகாலட்சுமியின் அருள் கிட்டுமாம்.. வீட்டிற்குள் நுழையும் கருப்பு எறும்புகள், சுவர்மீது ஏறி சென்றால், அதுவும் அதிர்ஷ்டத்தை தருவதாக அர்த்தமாம்.
திசைகளும் முக்கியம்
எறும்புகள் வீட்டின் மேற்கு திசையில் இருந்து வந்தால், உங்களுக்கு விரைவில் வெளிநாடு பயணம் அமைய வாய்ப்புள்ளதாம்.. வீட்டின் வடக்கு திசையிலிருந்தும், தெற்கு திசையிலிருந்தும் எறும்புகள் வந்தால், அது குடும்பத்துக்கு மகிழ்ச்சியையும், லாபத்தையும் தரப்போவதாக அர்த்தம். அறையின் கூரையில் கருப்பு எறும்புகளை பார்ப்பது, பண வரவுக்கான அறிகுறியாகும்.
ஆனால், வீட்டிற்குள்ளிருந்து கருப்பு எறும்புகள் வெளியே செல்வதும், வீட்டின் கிழக்கு திசையிலிருந்து செல்வதும், சுவற்றின் மேலிருந்து கீழ் நோக்கியும் எறும்புகள் செல்வதும் குடும்பத்துக்கு நஷ்டம், இழப்பு, வறுமைக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
கடவுளுக்கு படைக்கப்படும் நைவேத்தியம் இனிப்பாக இருந்தாலும், எல்லா நேரமும் கருப்பு எறும்புகள் சாப்பிடுவதில்லை.. ஒருசில நேரங்களில் மட்டுமே நைவேத்தியத்தை எறும்புகள் சாப்பிடும்.. அப்படியானால், அன்றைய உங்களின் பூஜை ஏற்கப்பட்டதாகவே அர்த்தம்.
சிவப்பு எறும்பு அறிகுறிகள்
அதேபோல, எறும்புகளில் சிவப்பு நிற எறும்புகள் வீட்டிற்குள் வருவது நன்மையாக பார்க்கப்படுவதில்லை.. ஒரு சிவப்பு எறும்பு வாயில் முட்டையுடன் வெளியே சென்றால், அது நல்விளைவாகவே பார்க்கப்படுகிறது என்றாலும், அளவுக்கு அதிகமாக வீட்டில் சிவப்பு இருப்பது கெடுதலை ஏற்படுத்திவிடுமாம்..
ஒரு பெண் தன்னுடைய வீட்டில் சிவப்பு நிற எறும்புகளை பார்த்தால், தம்பதி இடையே பிரச்சனைகள் தோன்றுமாம்.. ஆனால், திருமணமான பெண், எறும்புகளை வெள்ளை நிறத்தில் பார்க்கும்போது, நேர்மறையான மாற்றத்தை வெளிப்படுத்துவதாக கூறுகிறார்கள்..
சிவப்பு எறும்புகளை கொல்லலாமா
சிவப்பு எறும்புகள் கனவில் வந்தாலும், அதுகெட்ட சகுனமாகவே பார்க்கப்படுகிறது.. குடும்பத்தில் இழப்பு, துன்பம் அல்லது வீட்டில் அமைதியின்மை போன்ற பிரச்சனைகளை குறிப்பதாகும்.. கர்ப்பிணி பெண்கள், தங்களது கனவில் கருப்பு எறும்புகளை பார்த்தால், அவர்களுக்கு தீங்கிழைக்கும் நபர்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தமாம்.
எனவே, சிவப்பு எறும்புகளை வீட்டை விட்டு விரட்ட முயற்சிக்கலாம்.. அதற்காக அவைகளை கொன்றுவிடக்கூடாது.. எலுமிச்சம்பழச்சாறு, பிரிஞ்சி இலை, கருப்பு மிளகு போன்றவைகளை பயன்படுத்தி சிவப்பு எறும்புகளை வெளியேற்றிவிடலாம்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications