வெற்றி தரும் வெற்றிலை பரிகாரம்..கஷ்டங்கள் தீர எந்த ராசிக்காரர்கள் எப்படி பரிகாரம் செய்வது?
சென்னை: இந்தியாவில், திருவிழாக்கள் மற்றும் விழாக்களின் போது மரியாதைக்குரிய அடையாளமாக வெற்றிலையை கடவுளுக்கும், குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கும் வைத்து வணங்குகிறோம். ஆன்மீக விஷேசங்களுக்கு பயன்படும் வெற்றி மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. சிலரது வீடுகளில் கவலைகளும் கஷ்டங்களும் அதிகமாக இருக்கும். துன்பங்கள் தீர வெற்றிலையை பயன்படுத்தி பரிகாரம் செய்யலாம். எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளுடன் வெற்றிலையை வைத்து எந்த நாளில் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
வெற்றிலை என்பது தாம்பூலத்திற்கும், விஷேச வீடுகளில் உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிடவும் பயன்படுத்துகிறோம். வெற்றிலை மருத்துவ குணம் நிறைந்த பொருளாகவும் உள்ளது. வெற்றிலையை கொண்டு பரிகாரமும் செய்யலாம் என்பது தெரியாத விஷயம். அதை பற்றி பார்ப்போம்.
எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்திற்கு வெற்றிலையை வைத்து வழிப்பட்டால் துன்பம் தீரும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

வெற்றிலையில் உள்ள மருத்துவ குணம் நன்மைகள் பற்றி சரக சம்ஹிதா, சுஷ்ருத சம்ஹிதாவின் பண்டைய ஆயுர்வேத கையெழுத்துப் பிரதிகளில் விவரிக்கப்பட்டுள்ளன. வெற்றிலை ஒரு சிறந்த வலி நிவாரணி, இது உடல் வலியிலிருந்தும் காயங்களில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. வெட்டுக்கள், சிராய்ப்புகள், தடிப்புகள் காரணமாக ஏற்படும் வலியைப் போக்க இதைப் பயன்படுத்தலாம். இளஞ்சூடான வெற்றிலையைக் கொண்டு அரைத்து பேஸ்ட் போல செய்து,காயம்பட்ட இடத்தில் தடவவும். வெற்றிலை சாறு உடலில் உள்ள உள் வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
அசைவ உணவு சாப்பிட்ட பிறகு நன்றாக விருந்து சாப்பிட்ட பிறகு வெற்றிலையை ஏன் மென்று சாப்பிட வேண்டும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நம்முடைய முன்னோர்கள் காரணமில்லாமல் ஒரு வழக்கத்தை ஏற்படுத்தியிருக்க மாட்டார்கள். வெற்றிலை உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. வெற்றிலைகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது மற்றும் முக்கிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு குடலைத் தூண்டுகிறது. எனவேதான் சாப்பிட்ட உடன் வெற்றிலையை பயன்படுத்துகின்றனர்.
கோவில்களில் இறைவனை வழிபடும் போது வெற்றிலை பாக்கு பயன்படுத்துகின்றனர். எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வெற்றிலை வைத்து வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம் ராசியில் லக்னத்தில் பிறந்தவர்கள் வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிப்பட்டால் துன்பங்கள் நீங்கும்.
ரிஷபம் ராசியில் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டால் துன்பம் விலகி இன்பங்கள் அதிகரிக்கும்.
மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் துன்பங்கள் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடக ராசிக்காரர்கள் வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக்கிழமை காளி தெய்வத்தை வழிப்பட்டால் கஷ்டங்கள், கவலைகள் விலகி இன்பங்கள் அதிகரிக்கும்.
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் கஷ்டங்கள் விலகும்.
கன்னி ராசியில் பிறந்தவர்கள் வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை நாளில் இஷ்ட தெய்வததை வழிப்பட்டால் கவலைகள் நீங்கும். மன நிம்மதி அதிகரிக்கும்.
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் துன்பம் தீரும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் வெற்றிலையில் பேரிச்சப்பழம் வைத்து செவ்வாய் கிழமை தினத்தில் இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் துன்பங்கள் நீங்கும்.
தனுசு ராசியில் பிறந்தவர்கள் வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழன் கிழமை தினத்தில் இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும்.
மகரம் ராசியில் பிறந்தவர்கள் வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை நாளில் காளி தெய்வத்தை வழிப்பட்டால் கஷ்டங்களும், கவலைகளும் நீங்கும்.
கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை நாளில் காளி தெய்வத்தை வழிப்பட்டால் கவலைகள் நீங்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கும்.
மீனம் ராசியில் பிறந்தவர்கள் வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை தினத்தில் இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் நோய்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications