ஒன்பது கோளும் ஒன்றாய்.. கேது தோஷம்.. கடன் பிரச்சினை தீர்க்கும் விநாயகர்.. எப்படி வணங்க வேண்டும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவகிரகங்களில் கேது பகவான் ஞான காரகன். ராகு கொடுத்தால் கேது அதை தடுப்பார். கேதுவினால் சிலருக்கு தோஷங்கள் ஏற்படும்.
கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், கல்வித்தடை ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர் நவகிரக விநாயகர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர் விநாயகர்.

Vinayagar Chaturthi 2023 Lord Ganesha removes Ketu dhosha and navagraha dosham

நவகிரகங்களினால் தோஷம் ஏற்பட்டால் சிலருக்கு நோய் பாதிப்புகள் உண்டாகும். தோஷங்களினால் ஏற்படும் தடைகளை உடைப்பவர் முழு முதற்கடவுள் விநாயகர். விக்னேஷ்வரன் என்றாலே விக்னங்களை நீக்குபவர் என்று பொருள். எளிமையான கடவுள் விநாயகரை தோப்புக்கரணம் போட்டு கையெடுத்து கும்பிட்டால் கிரகக்கோளாறுகளால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

விநாயகரின் உடலில் ஒவ்வொரு பாகங்களிலும் ஒவ்வொரு கிரகங்கள் அமர்ந்திருக்கிறார் என்பது ஐதீகம். சூரியனை வெற்றியிலும், சந்திரனை நாபிக் கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க் கையிலும், வியாழனை தலையிலும், வெள்ளியை இடது கீழ்க் கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு விநாயகர் காட்சியளிக்கிறார். இத்தகைய நவகிரக விநாயகரை மனமார நினைத்து வழிபடுபவர்களுக்கு, நவகிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகள் வராது. எனவே விநாயகரை வழிபட்டால் நவக்கிரகங்களால் நமக்கு வரும் துன்பங்கள் அனைத்தும் விலகும்.

நாளுக்கும் கோளுக்கும் அப்பாற்பட்ட விநாயகர் ஜோதிட சாஸ்திரப்படி கேதுவின் அம்சம். அளவிலா ஞானத்தை அளிக்கக்கூடியவர். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், கல்வித்தடை ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர்.

அறியாமை என்னும் இருளில் இருந்து ஞானம் என்னும் ஒளியை நோக்கி அழைத்துச் செல்லும் ஞான பண்டிதன் கணேசர். அவரை மாணவர்கள் பக்தி சிரத்தையுடன் வழிபட்டால் மாணவர்களுக்கு தடைகள் நீங்கி கல்வியில் வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும்.

Vinayagar Chaturthi 2023 Lord Ganesha removes Ketu dhosha and navagraha dosham

சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார். சந்திர திசை, கேது திசை நடப்பவர்கள் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியிலும், விநாயகர் சதுர்த்தியிலும் பிள்ளையாரை வழிபட்டால் சகலவிதமான தோஷங்களும் சங்கடங்களும் விலகும்.

கடன் பிரச்சினையில் சிக்கித்தவிப்பவர்கள் விநாயகர் வழிபாடு செய்தால் எளிதில் கடன் நீங்கும். செவ்வாய்கிழமைகளில் வெற்றிலை மாலை சாற்றி விநாயகரை வணங்கள் வேண்டும். 11 வாரங்கள் வெற்றிலை மாலை சாற்றி விநாயகரை வழிபட அற்புதங்கள் நிகழும். வருமானம் அதிகரிக்கும் கடன் பிரச்சினை தீரும். கடன் பிரச்சினை தீர்ந்த உடன் விநாயகருக்கு சிதறு தேங்காய் போட்டு வழிபட பிரச்சினைகள் பொடிப்பொடியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+