இந்த ஆண்டு ஆடிக் கிருத்திகையின் தனிச்சிறப்பு என்ன? திருமண தடை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?
சென்னை: ஆடிக் கிருத்திகை என்றால் என்ன, அன்றைய தினம் செய்ய வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இன்று ஆடிக் கிருத்திகை கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அனைத்து முருகன் கோயில்களிலும் இந்த விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: முருகனுக்கு எத்தனையோ வழிபாடுகள் இருந்தாலும், தை மாதத்தில் வரக்கூடிய தை பூசம், ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி கிருத்திகை மற்றும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரம் உடன் கூடிய கார்த்திகை விரதம் இந்த வழிபாடுகள் முருகனுக்கு உகந்த வழிபாடாகும்.

இந்த நாட்களில் முருகன் இருக்கும் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் விசேஷங்கள் நடைபெறும்.
முருகர் கடவுளை நாம் வேண்டிக் கொண்டால், அவர் நமது வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றுவார். இந்த வருடம் ஆடி கிருத்திகைக்கு தனிச் சிறப்பு உள்ளது. இந்த ஆடி கிருத்திகை செவ்வாய்க்கிழமை அன்றும் தொடர்கிறது.
குறிப்பாக கிரக தோஷம், நாக தோஷம், திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தைகள் இல்லாதவர்கள், வேலை இல்லாதவர்கள் முருகனை வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும். நிலப் பிரச்சனை இருந்தால், முருகனை வழிபட்டால் பிரச்சனை நீங்கும். அனைத்து வயதினரும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
காலையில் எழுந்து தலைக்கு குளித்து, பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு மேடையில் சிவப்பு துணியை வைத்து, அதற்கு மேலாக முருகனின் படத்தை வைக்கவும். வேல் இருந்தாலும் அத்துடன் வைக்கலாம். சிவப்பு நிறம் கொண்ட மலர்களை நெய் வைத்தியம் செய்ய வேண்டும். செவ்வலரி பூவை நாம் நெய் வைத்தியம் செய்ய வேண்டும். அல்லது சிவப்பு ரோஜாக்களை வைத்து நெய் வைத்தியம் செய்யலாம். உப்பு இல்லாமல் சமைக்க வேண்டும். மதியம் மட்டும் பால், பழங்கள் சாப்பிடலாம்.
முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யலாம். அப்படி செய்யும் போது புஷ்பம், பன்னீர், பஞ்சாமிர்தம் கொண்டு செய்யலாம். வருகின்ற ஜூலை 30ம் தேதி ஆடி கிருத்திகை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். 29ம் தேதி முதல் 30ம் தேதி வரை விரதம் வரை விரதம் மேற்கொண்டு பின்பு அதை முடித்து கொள்ளலாம். இல்லையென்றால் 30ம் தேதி அன்று விரதம் மேற்கொள்ளலாம்.
முதலில் வீட்டில் வழிபாடு செய்து, பிறகு கோவிலுக்கும் செல்லலாம். விரதம் இருக்க முடியவில்லை என்றால், முருகப் பெருமான் மந்திரங்களை நாம் சொல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
Vaikasi Visagam: வைகாசி விசாகம் 2026! திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications