வேல் வேல் முருகா! வெற்றி வேல் முருகா! வேலுக்கும் முருகனுக்கும் என்ன தொடர்பு? இத்தனை சிறப்புகளா?
சென்னை: முருகனின் ஆயுதமான வேலுக்கும் அவருக்கும் இருக்கும் தொடர்பு குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் வேலை வைத்து பூஜை செய்தால் என்னென்ன நன்மைகள் என்பது குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: முருகனுக்கும் வேலுக்கும் உள்ள சிறப்பு பற்றிய பதிவு.

🪔 நாம் வணங்கும் தெய்வங்கள் பெரும்பாலானவை ஆயுதம் ஏந்திய தெய்வங்களே. அந்த வரிசையில் காவல் தெய்வங்கள், பார்வதி, சிவபெருமான் மற்றும் முருகன் ஆகிய தெய்வங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
🪔 முருகன் என்றாலே நம் நினைவிற்கு வருவது மயிலும், வேலும் தான். புராணங்களின் படி அதிக முக்கியத்துவம் வாய்ந்த மிக முக்கியமான ஆயுதமாக முருகனின் வேல் கருதப்படுகிறது.
🪔 வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை" என்பதே தொன்று தொட்டு சொல்லும் கூற்று. முருகனுக்கு இந்த வேலினால் வேல்முருகன் என்ற பெயரும் உண்டு.
🪔 சூரபத்மன் எனும் அரக்கனை அழிக்க தேவி பார்வதி தன்னுடைய சக்திகள் அனைத்தையும் திரட்டி வேலை வடிவமைத்து, அதனை கொண்டு சூரனை வதைக்க சொன்னதாக புராணங்கள் கூறுகின்றன. அதாவது வேல் என்பதே சக்தியின் அம்சம். அதனாலேயே வேலிற்கு சக்தி வேல் என்ற பெயரும் உண்டு.
🪔 "வெல்" என்ற வினைச்சொல்லே நீண்டு 'வேல்" என்ற பெயர்ச்சொல் ஆகிறது. ஆகவே, வேல் என்றால் வெற்றி என்று பொருள்படும்.
🪔 பராசக்தியின் வடிவமே வேலாயுதம் என்பார்கள். அறிவு, ஞானம், பொருள், இன்பம், திருவருள், திருவருட்சக்தி முதலிய சொற்கள் வேலின் உருவமாக உள்ள பராசக்தியையே குறிப்பனவாகும்.
🪔 முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு 'வெற்றிவேல்" என்ற பெயரும் உண்டு.
🪔 வேல் உணர்த்துவது என்னவென்றால்... வேலின் அடிப்பகுதி ஆழமாகவும், இடைப்பகுதி விசாலமாகவும், நுனிப்பகுதி கூர்மையாகவும் திகழ்கிறது.
🪔 வேலைப்போன்று அறிவானது கூர்மையானதாகவும், அகன்றும், ஆழமாகவும் இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துவதாக இருக்கிறது.
🪔 முருக வழிபாட்டில் தொன்மை வாய்ந்தது வேல் வழிபாடு. இன்றும் பல முருகன் கோவில்களில் வேலுக்கு மட்டுமே பூஜை செய்து கொண்டிருக்கின்றனர்.
🪔 வேல் வழிபாட்டின் எளிமைப்படுத்தப்பட்ட நவீன வடிவமே சக்திவேல் வழிபாடு. சக்திவேலை வணங்குவது என்பது அன்னை பராசக்தியையும், தனயன் முருகனையும் ஒருசேர வணங்குவதாகும்.
🪔 மனம் பாரமாக இருக்கும் நேரங்களில் மனதுக்குள் சக்திவேலை நினைத்துக் கொண்டு 'ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க" என்று சொன்னால்; மனம் லேசாகி விடும்.
🔯 வேலை வணங்குவதால் ஏற்படும் பலன்கள் :
🪔 காரிய தடைகள் விலகி திருமணம் கைகூடும், குழந்தைப்பேறு கிடைக்கும்.
🪔 கல்வியில் மேன்மை, மன பயம் நீங்கி வலிமை உண்டாகும்.
🪔 வியாபாரத்தில் இலாபம், பில்லி சூனியம், நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.
🪔 சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மரண பயம் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம்.
🪔 சொந்தமாய் வீடு மற்றும் நினைத்த காரியம் நினைத்தப்படியே நிறைவேறும்.
🪔 கலைகளில் தேர்ச்சி, பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருகும்.
🪔 வெற்றிவேல், வீரவேல் என முழங்கும் இடத்தில் வேலின் ஆற்றலும், முருகனின் ஆசியும் அனைவருக்கும் கிடைக்கும்.
🪔 வேல் வேல் வெற்றிவேல் ... வேல் வேல் ஞானவேல் ... வேல் வேல் வீரவேல் ...
இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications