இன்று அபூர்வ நாள்.. எல்லாமே 8 ஆதிக்கம்.. 2024= 2+0+2+4= 8, ஆகஸ்ட் 8, இரவு 8 மணிக்கு என்ன நடக்கும்?
சென்னை: ஆகஸ்ட் 8ஆம் தேதி (8.8.2024 , 2024இன் கூட்டுத் தொகையும் 8 வருகிறது) இன்றைய தினம் சிங்கத்தின் நுழைவு வாயில் திறக்கப்படுகிறது, இதனால் காலை 8.08 மணிக்கும் இரவு 8.08 மணிக்கும் நமது ஆசைகளை எழுதி வைத்தால் அது நிறைவேற்றும் என்ற தகவல் பரவி வருகிறது. இது ஜோதிட ரீதியில் உண்மையா என்பதை பார்ப்போம்.
ஆண்டுதோறும் ஒவ்வொரு மாதத்திலும் ஏதாவது சிறப்பான நாளாக அமையும். அதாவது அந்த நாளின் இலக்கத்திலேயே ஏதாவது ஒரு புதுமை இருக்கும். உதாரணமாக 2012 ஆம் ஆண்டு 12.12.12 என டிசம்பர் 12 ஆம் தேதியை எழுதி கொண்டாடினர்.

அன்றைய தினம் ஸ்பெஷல் நாளாக இருந்ததால் பலர் வாகனம் வாங்குதல், நகை வாங்குதல், புதிய வீட்டிற்கு குடிபோதல் உள்ளிட்ட செயல்களை செய்தனர். அந்த வகையில் இந்த முறை ஆகஸ்ட் 8ஆம் தேதி அதாவது 8.8.2024 (2024 இன் கூட்டுத் தொகையும் 8ஆக வருகிறது.) இன்றைய நாள் சிங்கத்தின் நுழைவு வாயில் திறக்கும் என்றும் இந்த நாளில் எல்லா நலமும் வளமும் கிடைக்கும் என்றும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்றைய தினம் காலை 8.08 மணிக்கும் இரவு 8.08 மணிக்கும் இன்பினிட்டியை வரைந்து வைத்துவிட்டு உங்களுக்கு வேண்டியதை எழுதி வைத்துக் கொண்டால் எல்லா நன்மைகளும் கிடைக்கும், பிரார்த்தனைகள் கைகூடும் என்றும் ஒரு தகவல் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது.
ஜோதிட ரீதியில் பார்க்க வேண்டும் என்றால் ஆகஸ்ட் 8ஆம் தேதி சூரியன் சிம்ம ராசிக்கு அதாவது அவருடைய சொந்த வீட்டிற்கு வரக் கூடிய நுழைவு வாயில் திறக்கிறது. இந்த ஆடி மாதத்தில் சூரியனின் ராசியான சிம்மத்திற்கு உள்ளே நுழையும் காலமாகும். சிம்மம் என்றால் சிங்கம், அதனால்தான் சிங்கத்தின் நுழைவு வாயில் திறக்கும் என கூறி ஒரு தகவலை பரப்பி வருகிறார்கள்.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் சூரியன் வரும் 10ஆம் தேதிதான் சிம்ம ராசிக்குள் நுழைய போகிறது. இன்றைய தினம் எந்தவித விசேஷ சக்தியும் கிடைக்காது. ஆகஸ்ட் 8ஆம் தேதி கூட ஓகே, ஆனால் 8 மணிக்கு என்பதை எடுத்துக் கொண்டாலே ஒவ்வொரு நாட்டில் நேரம் மாறுபடும் எனும் போது இது எப்படி சாத்தியமாகும். எனவே இது போன்றவற்றை எல்லாம் யாரும் நம்ப வேண்டாம். எப்போதும் மனதார பிரார்த்தனை வைத்தாலே அதை கடவுள் கேட்பார் என்பார்கள்.
எல்லா நாளும் இனிய நாள் என்று நினைத்து உங்கள் பிரார்த்தனைகளை கடவுளிடம் சொல்லுங்கள். அதுவே போதும். மனதில் எப்போதும் நல்ல எண்ணங்களை விதையுங்கள். அதுவும் உங்களுக்கு நன்மையை தரும். இந்த 2024 இலும் தேவையற்ற மூடநம்பிக்கைகளை நம்ப வேண்டாம் என ஜோதிடர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications