வீட்டு கதவை டான்னு காலை 6 மணிக்கு திறங்க! இந்த ஒரு வார்த்தையை 8 முறை சொல்லுங்க! மாற்றத்தை பாருங்க
சென்னை: உங்கள் நிலைவாசல் கதவை திறக்கும் போது 8 முறை இந்த ஒரு வார்த்தையை சொன்னால் அஷ்ட ஐஸ்வர்யமும் வீட்டுக்குள் வரும். அது என்ன தெரியுமா? எப்படி சொல்ல வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து நானறிந்த ஆன்மீகம் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தினம் தினம் வாசல் கதவை திறக்கும் போது, 8 முறை இந்த ஒரு வார்த்தையை சொன்னால், அஷ்ட ஐஸ்வர்யமும் உங்கள் வீட்டு வாசலுக்குள் வருவதற்கு தவம் கிடக்கும்.

ஒரு வீட்டிற்குள் லட்சுமி கடாட்சம் நிறைவாக இருக்க வேண்டும் என்றால், அந்த லட்சுமி கடாட்சம் வெறும் பணத்தால் மட்டும் கிடைத்து விடாது. பணத்தோடு சேர்த்து மற்ற ஐஸ்வர்யங்களும் ஒரு குடும்பத்திற்கு கிடைக்க வேண்டும். அதை தான் அஷ்டலட்சுமி கடாட்சம் என்று சொல்லுவார்கள்.
அஷ்ட ஐஸ்வர்யங்களையும் கொடுக்கக் கூடிய லட்சுமி, அஷ்டலட்சுமி. இந்த எட்டு வகையான செல்வமும் ஒரு வீட்டிற்கு நிறைவாக கிடைத்துவிட்டால் போதும்.
அந்த வீட்டு சந்தோஷம் முழுமை அடையும். உங்களுடைய வீட்டில் தினமும் அஷ்டலட்சுமிகளின் வருகை இருக்க வேண்டும் என்றால், தினம் தினம், காலையில் வாசல் கதவை திறக்கும் போது இந்த ஒரு வார்த்தையை மட்டும் எட்டு முறை சொன்னால் போதும்.
உங்கள் வீட்டில் அஷ்ட ஐஸ்வர்யங்கள் தாண்டவம் ஆடும் என்பது நம்பிக்கை. தினம் தினம் வீட்டில் இருக்கும் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தைப் பற்றி தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
அஷ்ட ஐஸ்வர்யம் வீட்டிற்குள் வர மந்திரம்
சூரிய உதயத்தின் போது காலை 6 மணிக்கு நம்முடைய நிலை வாசல் கதவை திறந்து வைக்க வேண்டும். மகாலட்சுமி வீட்டிற்குள் வரும் நேரம் இது. காலை 6:00 மணிக்கு சிறிது நேரம் நிலை வாசல் கதவு திறந்திருக்க வேண்டும். மாலை 6:00 மணிக்கு நிலை வாசல் கதவு சிறிது நேரம் திறந்திருக்க வேண்டும். காலை 6:00 மணிக்கு இப்போது நம்மில் பல பேர் கதவு திறப்பதே கிடையாது.
கண் விழிக்கவே சில பேருக்கு 7 மணி ஆகிவிடுகிறது. அந்த தவறை இனிமேல் செய்யாதீர்கள். ஏன் ஆண்கள் எழுந்து இந்த வேலையை செய்யக்கூடாதா? ஆண்கள் எழுந்து கதவை திறந்து வைக்க கூடாதா? என்று கேட்டால் நிச்சயம் ஆண்களும் நிலை வாசல் கதவை காலை 6 மணிக்கு திறந்து வைக்கலாம். தவறு கிடையாது.
இருந்தாலும் மகாலட்சுமி அம்சம் கொண்ட பெண்கள் காலையில் நிலை வாசல் கதவைத் திறந்து வீட்டிற்கு அஷ்ட ஐஸ்வர்யம் பொருந்திய, அஷ்டலட்சுமிகளையும் வரவேற்பது சிறப்பு வாய்ந்த பலனை கொடுக்கும்.
தினமும் காலையில் எழுந்து வீட்டில் இருக்கும் பெண்கள் பல் தேய்த்து, முகம் கழுவி, தலையை வாரிக் கொண்டு, குளிக்கவில்லை என்றாலும் சுத்தபத்தமாக இருக்கும் பட்சத்தில் நெற்றியில் ஒரு ஸ்டிக்கர் பொட்டு மட்டுமாவது வைத்துக் கொண்டு, நிலை வாசல் கதவை திறக்க வேண்டும். நிலைவாசல் கதவை திறக்கும் போது கையில் துடைப்பம், குப்பை கூடை இதுபோல பொருட்களை வைத்திருக்கக் கூடாது.
நிலை வாசல் கதவை திறக்கும்போது அஷ்ட லட்சுமிகளும் வீட்டிற்குள் வருகை தர வேண்டும் என்று சொல்லிவிட்டு "ஸ்ரீம்" என்ற வார்த்தையை எட்டு முறை சொல்ல வேண்டும். ஒவ்வொரு மகாலட்சுமிக்கும் ஒவ்வொரு ஸ்ரீம் என்ற வார்த்தையை சொல்லும்போது அஷ்ட ஐஸ்வர்யங்களும் உங்களுக்கு கிடைக்கும். அஷ்டலட்சுமிகளின் வருகை உங்களுடைய வீட்டில் இருக்கும்.
தினம் தினம் இந்த வார்த்தையை சொல்லி வாசல் கதவை திறக்கும் போது அஷ்டலட்சுமிகளும் சந்தோஷமாக உங்கள் வீட்டிற்குள் நுழைவார்கள். காலப்போக்கில் அஷ்ட லட்சுமிகளும் உங்கள் வீட்டு வாசலிலேயே நிலையாக தங்கி, உங்களுக்கு தேவையான ஐஸ்வர்யங்களை கொட்டிக் கொடுக்க துவங்கி விடுவார்கள்.
காரணம் நீங்கள் அஷ்டலட்சுமிகளுக்கு விருப்பமானவர்களாக மாறிவிடுவீர்கள். இது ஒரு எளிமையான பரிகாரம்தான். தொடர்ந்து 48 நாள் செய்யும் போது வீட்டில் இருக்கும் அனைத்து விதமான கஷ்டத்திற்கும் ஒரு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications