மரித்த இயேசு உயிர்த்தெழுவதற்கு முன், அந்த 3 நாட்கள் எங்கே இருந்தார்?
சென்னை: இயேசு மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுவதற்கு முன், அந்த 3 நாட்கள் எங்கே இருந்தார் என்ன செய்து கொண்டு இருந்தார்? அதற்கு வேதாகமத்தில் "அந்த ஆவியிலே அவர் (இயேசு) போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார், என்று சொல்லப்பட்டு இருக்கிறது " அப்படி என்றால், யார் அந்த காவலிலுள்ள ஆவிகள்? என்ன பிரசங்கித்தார் அதனால் அவர்களுக்கு என்ன பலன், என்ன நியாயத்தீர்ப்பு கிடைக்கபோவது, என்பதை வேதாகமத்தில் உள்ள ஆதாரத்தின்படி என்ன சொல்லப்பட்டு இருப்பது என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
யார் அந்த காவலிலுள்ள ஆவிகள்? 3 நாட்கள் காவலிலுள்ள ஆவிகளுக்குப் என்ன பிரசங்கித்தார்?: இந்த காவலில் வைக்கப்பட்ட ஆவிகள் யார் என்றால், (ஆதியாகமம் 6:1,2,4,5,7) ஆதியிலே மனுஷர் பூமியில் பெருகத் துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது, தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். இதனால் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள். பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே (எப்போதும்) கூடுகிறதினால், பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். மேலும் மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகி, அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, அவர்களுடைய பொல்லாத நினைவுகளை விட்டு மனம் திரும்பும்படியாகவும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்படிக்கு, நோவா மூலமாய் ஜனங்களுக்கு எச்சரித்து, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனதினால், கர்த்தர் "நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன், என்று தீர்மானம் பண்ணி, ஜலத்தினால் அவர்களை அழித்தார். "அவர்களே அந்த காவலிலுள்ள ஆவிகள்". மரித்து போனதான ஆத்துமக்களுக்கு இயேசு (ஆவியிலே) அவர் அங்கே போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்கு சுவிசேஷம் மற்றும் சிலுவையின் வெற்றி சிறந்ததை பிரசங்கித்தார் என்பதை (1 பேதுரு 3:19) என்ற வசனத்தில் ஆதாரத்தை பார்க்கலாம்.

மனுஷன் மரித்த பின், அவனுடைய ஆவி எங்கே செல்கிறது?: தேவன், "மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்" என்று (ஆதியாகமம் 2:7) எழுதப்பட்டுயிருக்கிறது, மேலும் (ஆதியாகமம் 2:7) மனுஷன் பூமியில் வாழ்ந்து மரித்த பின், அவனுடைய ஆவி எங்கே செல்கிறது என்றால் (எபிரேயர் 9:27) வசனத்தில் "அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே", மற்றொரு தருணம் அல்லது மறுஜென்மம் கொடுக்கப்படுவதில்லை என்பதை இந்த வேதவாக்கியம் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுயிருக்கிறது.
மரித்தவர்கள் பூமியில் இருப்பார்களா?: மனுஷன் பூமியில் வாழ்ந்து மரித்த பின், மரித்தவர்கள் பூமியில் இருப்பதில்லை, மேலும் தன்னை படைத்த தேவனிடத்திற்கே திரும்பும் என்பதை (பிரசங்கி 12:7)ல் "மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை ஏற்றுக்கொன்று "உன் வாலிபப்பிராயத்திலே நினை" என்று எழுதப்பட்டு இருக்கிறதே. ஆதலால் இக்காலத்தில் நமக்கோ இயேசு கிறிஸ்துவின் அநேக சுவிசேஷங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. மனிதன் உயிரோடிருக்கும் போதே, தன்னை படைத்தவரை ஏற்றுக்கொண்டு, வாழ்வின் முடிவில் நம்முடைய ஆவி தன்னைத் தந்த தேவனிடத்தில் சேரும் என்று நம்புவோமாக. ஆமென்.












Click it and Unblock the Notifications