ஆயுள் பலம் அதிகமாக இருக்கும் ஜாதகர் யார் தெரியுமா? ஆயுளை கொடுக்கும் கிரகங்கள் எவை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்தெந்த ஜாதகர்களுக்கு ஆயுள் பலம் அதிகமாகவே இருக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். ஆயுளை கொடுக்கும் கிரகம் எது என்பதையும் பார்க்கலாம்.

இதுகுறித்து தமிழ் குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: ஆயுள் பலம் அதிகமாகவே இருக்கும் ஜாதகர் யார் ?

horoscope

📜 ஒருவருக்கு ஆயுளை கொடுக்கக்கூடிய கிரகம் சனி கிரகம் ஆட்சி உச்சம் பெற்று மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் கூட ஆயுள் பலம் அதிகம்
📜 லக்னத்திற்கு எட்டாம் இடத்தின் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் கூட ஆயுள் பலம் அதிகம்
📜 ஜனன லக்னதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால். ஆயுள் பலம் அதிகமாகவே இருக்கும்.லக்கினாதிபதி மறைவு ஸ்தானங்களில் இல்லாமல் இருக்க வேண்டும்*
📜 சக்தி வாய்ந்த சனி கிரகம் எட்டாம் இடத்தில் பார்வை செய்தால் லக்னாதிபதி கிரகம் மறையாமல் இருக்க வேண்டும் ஆயுள் விருத்தியாகும்
📜 எட்டாம் இடத்தின் அதிபதியுடன் சனி கிரகம் சேர்ந்திருந்தாலும் ஆயுள் விருத்தி அதிகமாகும்
📜 லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் உச்சம் பெற்ற ஒரு கிரகம் இருக்கும் போதும் ஆயுள் பலம் அதிகம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஜாதகம் என எடுத்துக் கொண்டால் அதில் குழந்தை பிறப்பது முதல் இறப்பு வரை அதற்கு இடைப்பட்ட காலத்தில் நடக்கும் விஷயங்களும் துல்லியமாக கணிக்க முடியும். ஜாதகத்தின் மீது நம்பிக்கை இருப்பவர்களுக்கு இதை கண்கூடாக அனுபவித்திருப்பார்கள். ஒரு சில ஜோதிடர்கள் சொல்வதை பார்த்தால் நம் கூடவே இருந்து பார்த்தது போல் அனைத்தையுமே புட்டு புட்டு வைப்பார்கள்.

அந்த அளவுக்கு மக்கள் ஜாதகங்களை நம்பித்தான் திருமணம் முதல் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது வரை அனைத்தையும் நடத்துகிறார்கள். அது போல் வீட்டில் பிரச்சினையா, கடன் தொல்லையா, திருமணம் தள்ளி போகிறதா, குழந்தை பாக்கியம் இல்லையா, பொருளாதாரத்தில் சீர்கேடா, இவை எதுவாக இருந்தாலும் ஜாதகத்துடன் ஜோதிடரை பார்த்து அதற்கு பரிகாரம் செய்வதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அது போல் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் போது கூடபொருத்தம் பார்க்க இந்த ஜாதகங்கள் பயன்படுகின்றன. இந்த ஜாதகங்களில் ஒரு சில அம்சங்களை வைத்தே இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தால் நன்மை கிடைக்குமா, இல்லை பிரச்சினையாகுமா என்பதையும் சொல்வதுண்டு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+